sugaprasavam-pattri-ungaluku-yarum-sollatha-5-visayangal

ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள் என்பது அவளுக்கும் அவளை சார்ந்தவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்க கூடிய ஒன்று. குழந்தை வளர வளர அதன் தாய்க்கும், தந்தைக்கும் அது மற்றற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. குழந்தையின் முழுமையான வளர்ச்சி முடிந்து குழந்தையை பிரசவிக்க போகும் தாய்களுக்கு சில குழப்பங்கள் இருக்கலாம். குழந்தையை பெண் பிரசவிக்க இரு வழிகள் உள்ளன. ஒன்று சுகப்பிரசவம், மற்றோன்று அறுவை சிகிச்சை. எனக்கு இம்முறைகளை பற்றி நன்றாக தெரியும், நான் எதற்கு இதை படிக்க வேண்டும் என்கிறீர்களா? உங்களுக்கு இவற்றை பற்றி எல்லாம் உங்கள் மருத்துவர் தெளிவாக விவரித்திருப்பார். ஆனாலும் சுகப்பிரசவம் பற்றி நீங்கள் சில விஷங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  அவற்றை யாரும் உங்களுக்கு கூறி இருக்கமாட்டார்கள். அவை என்ன என்பதை பார்ப்போம். 

நீங்கள் திட்டமிட்டபடி நடக்காமலும் போகலாம்

நீங்கள் குழந்தை பிரசவிப்பதை பற்றி என்னதான் அறிந்திருந்தாலும், குழந்தை பிறப்பு என்பது நாம் திட்டமிட்டபடி நடப்பதில்லை. என்னதான் மருத்துவர்கள் குழந்தை பிறக்க தேதி குறித்து கொடுத்தாலும், அதே நேரத்தில் குழந்தை பிறப்பதில்லை. அப்படி குழந்தை பிறக்கும் நேரத்தை கணிக்க முடியாது போது நாம் எப்படி அதை திட்டமிட முடியும். நாம் அதற்கு தேவையான பொருள்களை ஒரு பையில் வைத்துக்கொள்வது அவசியம். உங்களுக்கு பணிவிடை செய்யபவர்களும், உங்கள் குடுப்பத்தினரும் இது  போன்ற அவசிய பொருள்களுக்கான அலைச்சல் குறையும். நீங்கள் உங்கள் மருத்துவரிடம் இது பற்றி முன்கூட்டியே கலந்தாலோசிக்க வேண்டும்.

உங்களை உணவு உண்ண அனுமதிக்காமலும் போகலாம்

பிரசவ காலம் நெருங்கும் போது உங்களை உணவு கட்டுப்பாட்டுடன் இருக்க சொல்வார்கள். ஏன்னெனில் சில நேரங்களில் அறுவை சிகிச்சை செய்தும் குழந்தை எடுக்கும் நிலை வரலாம் என்பதால்.சில நேரங்களில் நீராகாரங்கள் மட்டுமே உங்கள் உணவாக மாறலாம். உங்களை சுற்றி இருப்பவர்கள் உண்பது உங்களை பசியடைய செய்யலாம். இருப்பினும் நீங்கள் அப்போது உணவு கட்டுப்பாட்டுடன் இருக்க உங்கள் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்கள் அந்தரங்க பகுதிகளில் பல கைகள் படலாம்

உங்கள் பிரசவத்தின் போது பல செவிலியர்கள் உங்களை சுற்றி உங்கள் குழந்தை பிறப்பிற்கான பகுதி எவ்வளவு விரிவடைந்துள்ளது என்பதை பரிசோதித்துக்கொண்டே இருப்பார்கள். அதனால் அவர்களது கைகள் உங்கள் அந்தரங்க பகுதிகளில் படும் பொழுது வேதனை அடைய வேண்டாம். இதை எல்லாம் அவசியமற்றது, ஏன் சொல்கிறீர்கள் என்றால்? அதற்கு நீங்கள் உங்கள் மனதை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

அதிகப்படியான அழுத்தம் தேவை படலாம்

நீங்கள் குழந்தை பிறப்பிற்கான வழிகள் பற்றி நன்கு அறிந்திருக்கலாம். அவற்றுள் முக்கியமான ஒன்று குழந்தை வெளி வர அழுத்தம் கொடுப்பது. பெண்களால் அவ்வளவாக அழுத்தம் கொடுக்க முடியாது என்று அவர்களை பொதுவாக குறைத்து மதிப்பீடு செய்வார்கள். இதற்கு தகுந்தாற் போல ஊடகங்களும் அவர்களை அது போன்றே சித்தரிக்கின்றனர். குழந்தை பிறப்பிற்கு எப்படியும் மூன்று மணி நேரமாவது எடுக்கும், அதற்கு வெறும் 10 முறை நீங்கள் கொடுக்கும் அழுத்தங்கள் உங்கள் குழந்தை பிறப்பதற்கு போதுமானதாக இருக்காது.

சில கழிவுகள் இருக்கலாம்

இதை பற்றி பேசுவது உங்களுக்கு அருவருப்பாக கூட இருக்கலாம். இது நடப்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம். நீங்கள் உங்கள் குழந்தை பிறப்பிற்காக அழுத்தம் கொடுக்கும் போது உங்கள் உடல் கழிவுகளும் வெளியேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உடல் கழிவுகள் வெளியேற்றுவது சகஜமான ஒன்று என்றாலும் அது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சில ஊழியர்கள் முன்னிலையில் என்பதால் கவலையடைய வேண்டாம்.

இப்படி நீங்கள் பல நிலைகளை கடந்துதான் குழந்தை செல்வத்தை கையில் பெற  முடியும். பிரசவம் என்பது மிக எளிமையான ஒன்று என்றாலும், நீங்கள் இதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.  உங்கள் வாழ்கை நிலையை உயர்த்துவது குழந்தை தான். உங்கள் குழந்தை பிறப்பதற்கு நீங்கள் எவ்வளவு கஷ்ட பட்டிருந்தாலும், உங்கள் குழந்தையின் முகத்தை பார்க்கும் போது அணைத்து வழிகளும் மாயமாகி விடும். குழந்தை பிறப்பு பற்றிய பயம் இருந்தால் அவற்றை விடுத்தது, மன மகிழ்வோடு இருங்கள்.   

 

Leave a Reply

%d bloggers like this: