ungal-illara-valkkaiyei-7-valikalil-palamaakkukirathu-ungal-kulanthai

இதுவரை இருவராய் வாழ்ந்து இனிமை கண்ட இல்லற வாழ்வை மேலும் இனிமையானதாக்க வரும் ஒரு புத்தொளியே உங்கள் குழந்தை..! உங்கள் வாழ்வில், உங்களால் உருவான புத்துயிர் அளிக்கும் இன்பங்களை இதோ அறியலாம்…

1. குடும்பத்தை உருவாகும் உங்கள் குழந்தை…
 “நாம் இருவர் நமக்கு ஒருவர்” என்ற மொழியை, உண்மையாக்கி தம்பதியராய் இருந்த உங்கள் வாழ்வை ஒரு இனிய இல்லமாய், ஓர் குடும்பமாய் மாற்றுகிறது உங்கள் குழந்தை. கணவன்- மனைவி என்ற இடத்திலிருந்து, அப்பா-அம்மா என வாழ்வில், பதவி உயர்வளிக்கிறது, உங்கள் உயிர்.
2. சந்தோசத்தைப் பரிசளிக்கும் சக்தி…
 உங்கள் குழந்தையே, உம் வாழ்வின் ஆதாரமாகி, நீங்கள் வாழ, சிரித்து மகிழ என உங்கள் வாழ்வின் காரணமாகிறது. குழந்தையின் சின்னச்  சின்ன செயல்கள், சிரிப்பு, அழுகை, அதன் மழலைப் பேச்சு, உங்கள் பெயரை உச்சரிக்கும் அழகு என இல்லத்தையே இன்ப வெள்ளத்தில் மூழ்கச்  செய்கிறது. 
3. பெற்றோரை குழந்தையாய் மாற்றும் மழலைகள்…
 
உங்கள் குழந்தையோடு, நேரம் செலவிடுகையில், குழந்தையின் விளையாட்டும் சிரிப்பும் உங்களையும் குழந்தையாய் மாற்றி, உங்களுக்கு அளவில்லா ஆனந்தத்தை அளிக்கிறது. மழலை தன் அழகுக் குரலில், ‘அப்பா’ ‘அம்மா‘ என அழைக்கையில், எல்லையில்லா பேரின்பத்தை அளிக்கிறது.
4. அயர்வைப் போக்கும் ஆருயிர்…
 
உங்கள் அலுவலகப் பணிகளால், குழந்தை கவனிப்பால் ஏற்படும் உறக்கமின்மை, மற்றும் இதர வழிகளில் நீங்கள் அலுப்படையும் போது, குழந்தையின் சிரிப்பும் தொடுதலும், உங்கள் அயர்வைப் போக்கும் அருமருந்தாகிறது; அதன் மழலைப் பேச்சும் அதன் ஆழமான அன்பும் இவ்வுலகையே மறக்கச் செய்யும்.
5. தனிமையை போக்கும் இனிமை…

இல்லத்தரசிகளுக்கு , கணவர் வேலைக்கு சென்ற பின் ஏற்படும் தனிமையை, இனிமையாய் மாற்றுவது  குழந்தையே… குழந்தையை கவனிப்பதிலும், குழந்தைக்கு  கற்பிப்பதிலும், தாய்மார்கள் தங்கள் தங்க நேரத்தை தாராளமாய் செலவிட்டு, ஓய்வு நேரத்தை உபயோகமாக்கலாம்.

6. குடும்பத்தை ஒன்றிணைக்கும் குழந்தை…

கணவன் – மனைவி என தம்பதியர் இருவரும் வேலைக்கு செல்லும் சூழலில், மழலை, இல்லத்தின் வெற்றிடத்தை விரட்டி, குடும்ப சகிதமாய் நேரம் செலவிட வாய்ப்பு அமைத்து தருகிறது. உங்களால் உருவான, உங்கள் உயிர், கணவன்- மனைவி என்ற பிணைப்பை பழுதடையாமல் பாதுகாக்கும் பாலமாகிறது.

7. இன்பத்தை அளிக்கும் இன்பம்…
ஓர் குழந்தையால் மட்டுமே, இல்லத்தில் இன்பத்தை வாரி வழங்கி, மன அழுத்தத்தையும் விரக்தியையும்  போக்கி, அழகான ஆனந்தம் நிறைந்த வீட்டை உருவாக்க இயலும்.
 
வாழ்க்கைக்கு ஓர் கலங்கரை விளக்கமாகி, வாழ்வையே அர்த்தமுள்ளதாய் மாற்றி அமைத்து, வாழ்வின் குறிக்கோளாகிறது, குழந்தை. வாழ்க்கைப் பயணத்தில், ஈடு இணையற்ற மகிழ்ச்சியைத் தந்து, மண வாழ்வை மனம் வீசச் செய்யும் அற்புத ஆனந்தம் மழலைச் செல்வமே…
 
ஆகையால், தாய்மார்களே! பயம் கொள்ளாதீர்… ஓர் புத்துயிரை புவிக்கு அழைத்து வரும் தேவதை, தாம். காத்திருக்கிறது..! ஓர் புது அத்தியாயம்…, உங்கள் ஆருயிரோடு…..!!!

Leave a Reply

%d bloggers like this: