idhu-oru-aachchariyamaana-kathai-theriuma-ungalukku

இது ஒரு ஆச்சரியமான கதை! தெரியுமா உங்களுக்கு?
சோலே பிரிட்ஜ்வாட்டர், இந்த பெயரே ஆச்சரியத்தின் ஆதாரம்.
 
சோலே, இவள் ஒரு 7 வயது சிறுமி, இங்கிலாந்து நாட்டின் ஹியர்போர்டை வசிப்பிடமாய் கொண்டவள். இவள் வயது குழந்தைகள் பொம்மைகளோடு விளையாடுகையில், சோலேவின் எண்ணங்கள் “GOOGLE” நிறுவனத்தை சுற்றியே வட்டமிட்டது. இந்த எண்ணம் அவளது தந்தை ஆன்டி பிரிட்ஜ்வாட்டருடன் உரையாடுகையில், அவள் மனதில் வேரூன்றியது. சோலேவின் தந்தை, குளிர்சாதனப் பெட்டி  பாகங்களை விற்பனை செய்யும் நிறுவனத்தின் மேலாளர். 
 
ஓர் நாள் சோலே, அவள் தந்தையின் தொழிலைப் பற்றி கேட்டறிகையில், அவரின் கனவான, “GOOGLE” நிறுவனத்தில் பணிபுரிவது பற்றி கூறினார். அவர் சோலேக்கு, “GOOGLE” நிறுவனத்தின் புகைப்படங்களையும், வசதிகளையும், வேலை முறைகளையும் எடுத்துரைத்தார்.
 
தந்தையின் வார்த்தைகளால், ஈர்க்கப்பட்ட சோலே, “GOOGLE”-லில் தான் வேலை செய்ய வேண்டும் என உறுதி கொண்டாள். தந்தையிடம் எவ்வாறு “GOOGLE”-லில் வேலைக்கு சேருவது என்று கேட்டாள். அதற்கு, ஆன்டி உன் விருப்பத்தை “GOOGLE”-க்கு விண்ணப்பம் மூலம் தெரியப்படுத்து என்றார். உடனே சோலே, ஒரு காகிதத்தை எடுத்து விண்ணப்பம் எழுதினாள்.
 
அவளது விண்ணப்பம்:
 
“ என் தந்தை “GOOGLE” நிறுவனத்தைப் பற்றியும், அதில் வேலைக்கு சேர விண்ணப்பம் அனுப்ப வேண்டும் என்றும் கூறினார். எனக்கு விண்ணப்பம் எப்படி இருக்கும் என்று தெரியாது, அதனால் கடிதம் எழுதுகிறேன்.”
 
இவ்வாறு எழுதி, கடிதத்தை “GOOGLE” boss என்று முகவரியிட்டு அனுப்பினாள். விண்ணப்பத்தில் தனக்கு சாக்லேட் தொழிற்சாலையில் வேலை செய்ய வேண்டும் மற்றும் ஒலிம்பிக்கில் நீச்சலில் பங்கேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டாள். மேலும் கடிதத்தில், தன்னைப் பற்றி கூறியதாவது, “என் ஆசிரியர்கள், எப்பொழுதும் என் பெற்றோரிடத்தில், நான் நல்ல பெண் என்றும், நன்றாக படிக்கிறாள், எழுதுகிறாள் மற்றும் கணக்குகளும் நன்றாக செய்கிறாள்” என்று கூறுவர்.
 
இவ்வளவு அழகான விண்ணப்பம் வேறெங்கும் இல்லை…!!!
 
 
சில தினங்களில், சோலேவின் இந்த விண்ணப்பத்திற்கு, “GOOGLE”-ன் CEO சுந்தர் பிச்சையிடம் இருந்து ஊக்கப்படுத்தும் விதத்தில் பதில் வந்தது.
 
சுந்தர் பிச்சையின் பதில் கடிதம்:
 
“உங்கள் கனவுகளை கருத்தில் கொண்டு, கடினமாக உழைத்தால், உங்கள் , “GOOGLE”-லில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசையிலிருந்து ஒலிம்பிக்கில் நீச்சல் செய்வது வரை சாதிக்கலாம். மற்றும் நீங்கள் படிப்பை முடித்த பின் “GOOGLE”-லிற்க்கு அனுப்பப் போகும் விண்ணப்பத்தை எதிர்பார்த்திருப்பேன்”:)
 
 
சுந்தர் பிச்சையின் பதில் கடிதத்தை, சோலேவின் தந்தை “LINKEDIN” இணைய தளத்தில் பகிர்ந்தார்.
 
சோலேவின் தந்தை, ஆன்டியுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் போது, இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த விபத்து காரணமாக சோலே தன் நம்பிக்கையை இழந்து காணப்பட்டாள்; ஆனால் சுந்தர் பிச்சையிடமிருந்து வந்த பதில் கடிதமே அவளை ஊக்கமுறச் செய்கிறது.
 
மேலும் ஆன்டி, தனது “LINKEDIN” இணைய தள முகவரியில், “சோலே, முன்பை விட நன்றாக படிக்கிறாள், “GOOGLE”-லில் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு!” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
சோலேவின் இந்த கனவு நிறைவேற நாமும், நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

Leave a Reply

%d bloggers like this: