muthal-varudathil-kulanthai-valarvathai-suttikattum-10-visayangal

குழந்தைகள் கருவில் உருவானது முதல் கையில் மழலையை ஏந்தும் வரை அதன் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். அதன் பின் அவர்களை வளர்ப்பது என்பது சாகசம் என்றே சொல்லலாம். சில நேரங்களில் சந்தோஷத்தையும், சில நேரங்களில் உங்களை மெய் சிலிர்க்கவும் செய்வார்கள். அவர்கள் வளர்ச்சியடைவதை எப்படி முதல் வருடத்திலேயே  தெரியும் என்பது பெரும்பாலான பெற்றோர்க்கு இருக்கு சந்தேகம். அதை நாம் எப்படி அறிய முடியும் என்பதை பார்க்கலாம்.

1  புன்னகை (8-வது வாரத்தில்)

2 -வது மாதத்தில் குழந்தைகள் உணர துவங்குவார்கள். உங்களை அடையாளம் கண்டு பிடிப்பார்கள். உங்களை  கண்டதும் புன்னகைக்க துவங்குவார்கள்.

2 கவனிப்பது (10 முதல் 12-வது வாரத்தில்)

உங்கள் குழந்தைகள் இப்போது கவனிக்க துவங்குவார்கள். அவர்களால்  சிலவற்றை கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்வார்கள். உங்கள் மூடியை இழுப்பது, உங்கள் உதடுகளை இழுத்து பார்ப்பது மற்றும் பொருள்களை வீசி எறிவது  போன்றவற்றை செய்வார்கள்.  

3 சிரிப்பது (16-வது வாரத்தில்)

உங்கள் குழந்தைகள் சிரிக்க துவங்குவார்கள். அது எப்படி சாத்தியம் என்று நீங்கள் சந்தேகித்தாலும், அவர்களது சிரிப்பு உங்கள் வீடு முழுவதும் பரவும். அவர் அதன் பின் அடிக்கடி சிரிக்க துவங்குவார்கள். அது உங்கள் வாழ்கை எனும் பயணத்தில் மிக அழகானதாக அமையும்.

4 இரவு முழுவதும் உறங்குதல் (16 முதல் 24-வது வாரத்தில்)

ஒரு வழியாக உங்கள் குழந்தை 6 மாதம் வளர்ச்சி அடைந்ததும், இரவில் உறங்க பழகி விடும். இப்போது நீங்கள் கொஞ்சம் பழைய வாழ்க்கைக்கு திரும்பலாம். இந்த சமயத்தில் நீங்கள் செய்ய வேண்டியவற்றை திட்டமிடுதல் மற்றும் மாற்றியமைத்தல் என அனைத்தும் செய்ய வேண்டும்.

5 திரும்ப செய்வது(20 வாரங்களில்)

இந்த காலகட்டத்தில் உங்கள் குழந்தை உங்களை கவனிக்க துவங்கும். நீங்கள் செய்ய கூடியவற்றை கவனித்து அவர்கள் திரும்ப செய்வார்கள். உதாரணமாக, ஒருவர் இனொருவரை கட்டியணைப்பதை பார்த்தால், அவர்களும் அதை செய்ய முயற்சிப்பார்கள். உங்களையே, அவர்கள் சகோதர, சகோதரிகளையோ அல்லது அவர்களது பொம்மைகளையோ  அவர்கள் கட்டியணைக்க துவங்குவார்கள். 

6 எழுந்து அமர்தல் (24 முதல் 36 வாரங்களில்)

முதலில் அவர்களால் தானாக எழுந்து அமர முடியாது. யாராவது ஒருவரின் உதவி தேவைப்படும். சில முறை நீங்கள் அவர்களை உட்கார வைக்க வேண்டும். சில வாரங்களிலேயே அவர்களாக உட்கார ஆரம்பித்திடுவார்கள்.

7 தவழ்ந்து செலுத்தல் (32 முதல் 36 வருடங்களில்)

உங்கள் குழந்தை இந்த வாரங்களில் தவழ துவங்கிவிடும். நீங்க அவர்களை மிக கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். இல்லையெனில், அவர்கள் தெரியாமல் செய்யும் செயல்கள் அவர்களையே பாதிக்கலாம். அது உங்களுக்கு மிக பெரிய  சவாலாக இருக்கலாம். ஆனாலும் குழந்தையை உங்கள் கவனிப்பில் வைக்க வேண்டிய நேரமிது.

8 அவர்கள் கைகளால் சாப்பிடுவது ( 36 முதல் 52 வாரம்)

உங்கள் குழந்தையின் 9 வது மாதத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்பொழுது உங்கள் குழந்தை கையில் கிடைத்தவற்றை எல்லாம் வாயில் இட துவங்கியிருக்கும். நீங்கள் கொஞ்சம் கவன குறைவாகவிட்டாலும், உங்கள் குழந்தை கண்டதையெல்லாம் வாயில் போடா துவங்கிவிடும்.

9 நிற்பது (52 வது  வாரம்)

ஒரு  வருடத்தில் குழந்தை தானாக எழுத்து நிற்க துவங்கும். முதலில் சுவர், கட்டிலின் கால் போன்றவற்றை பிடித்து எழ துவங்கும். சில வாரங்களிலேயே பிடிமானங்கள் இல்லாமல் தானாக நிற்க துவங்கி விடும்.

10 முதல் அடி (36 முதல் 68 வாரங்களில்)

உங்கள் குழந்தை முதல் பாத சுவடை பாதிக்க துவங்கும். அப்போது உங்களுக்கு கோடிக்கணக்கிலான செல்வம் கிடைத்தாற்போல ஒரு மகிழ்ச்சி கிட்டும். உங்கள் குழந்தை நடக்க துவங்கும் போது, நீங்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

உங்கள் குழந்தையை வளர்க்கும் போது நீங்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்கள் வளர்ச்சி உங்களுக்கு ஆனந்தத்தையும், அச்சத்தையும் கொடுக்கும். குழந்தைகளை உங்கள் கண்காணிப்பிலேயே வைத்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

%d bloggers like this: