thengaipaal-saatham

தேங்காய்ப்பால் சாதம்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 2 கப், முற்றிய தேங்காய் – 1, சின்ன வெங்காயம் – 5, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 10 பல், புதினா – சிறிய கட்டு, பச்சைமிளகாய் – 6, கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன், நெய்- 1 தேக்கரண்டி, எண்ணெய் – 2 தேக்கரண்டிகள், உப்பு – தேவையான அளவு.
 
செய்முறை
தேங்காயைத் துருவி, 1 கப் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும். இது போல் 2 முறை தண்ணீர் விட்டு பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு மூன்றையும் விழுதாக அரைக்கவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். புதினாவை ஆய்ந்து கொள்ளவும். அரிசியை நன்றாகக் கழுவி நீரை ஒட்ட வடிக்கவும்.
 
குக்கரில் நெய்யுடன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போக நன்கு வதக்கி, புதினா, கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். பின் தேங்காய்ப்பாலுடன் தண்ணீர் சேர்த்து 4 கப் அளந்து குக்கரில் ஊற்றவும். அரிசி, உப்பு சேர்த்து நன்றாக கிளறி, 2 விசில் வந்ததும் ஒரு நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும். வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்

Leave a Reply

%d bloggers like this: