vari-thalumbugalai-sari-seiya-5-vittu-maruthuva-kuripukal

வரி தழும்புகள் என்பது உங்கள் தோல் பகுதியில் சிறு சிறு கோடுகள் போன்று தெரிபவை. இவைகள் அடிவயிறு, தொடை, கையின் மேல் பகுதி, பிட்டம் மற்றும் மார்பகங்கள் போன்ற பகுதிகளில் காணப்படும். இந்த வரி தழும்புகள் முக்கியமாக கர்ப்பகாலத்தில் உருவாகின்றன. உடனடி உடல் எடை அதிகரிப்பது அல்லது குறைவது, அபரித வளர்ச்சி, பரம்பரை காரணிகள், மன அழுத்தம் மற்றும் உடல் நிலையை பொருத்தும் ஏற்படுகின்றன.

இந்த வரி தழும்புகளால் நீங்கள் மற்றவர்கள் முன் செல்ல தயங்குவது மற்றும் அசவுகரியமாகவும் உணர துவங்குவீர்கள். இவற்றை சரி செய்ய இயற்கையாகவே பல வலிகள் உள்ளன. அவற்றை பார்க்கலாம்.

1 சர்க்கரை

இயற்கையான வெள்ளை சர்க்கரையை கொண்டு உங்கள் உடலில் உள்ள வரி தழும்புகளை சரி செய்ய முடியும்.  உங்கள் உடலில் உள்ள தேவையற்ற தோல்களையும் சர்க்கரையை கொண்டு நீக்க முடியும். அதற்கான வழிமுறைகள்

1 ஒரு தேக்கரண்டி சர்க்கரையுடன் சிறிது பாதாம் எண்ணெய் மற்றும் சில துளி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.

2 நன்கு கலக்கியவற்றை வரி தழும்புள்ள இடம் மற்றும் மற்ற இடங்களில் குளிப்பதற்கு முன் தடவி சில நிமிடங்கள் மென்மையாக தேய்க்கவும்.

3 இதை ஒரு மாத காலத்திற்கு செய்தல் வரி தழும்புகள் உங்கள் தோலின் நிறத்திற்கு மாற்றமடைவதை உணர்வீர்கள்.

2 கற்றாழை

பல விதமான சரும பிரச்சனைகளுக்கு கற்றாழை ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. இதில் உள்ள மருத்துவ தன்மை உடலில் உள்ள வரி தழும்புகளை சரி செய்கிறது.

1 கற்றாழையின் சாற்றை வரி தழும்புள்ள இடத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பின் வெதுவெதுப்பான நேரில் கழுவவும்.

2 கால் கப் கற்றாழை சாறு, 10 வைட்டமின் E காப்ஸ்யூல்களிலிருந்து  இருந்து எண்ணெய் மற்றும் 5 வைட்டமின் A காப்ஸ்யூல்களிலிருந்து இருந்து எண்ணெய் ஆகியவற்றை நன்கு கலந்து தோல்களால் உறிஞ்சப்படும் வரை மென்மையாக தடவவும்.

3 இவற்றை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

3 உருளைக்கிழங்கு சாறு

உருளைக்கிழங்கில் பொட்டாசியம், வைட்டமின் c, தயாமின், ரிபோப்லாவின், ஃபோலேட், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதன் சாறு தோல் செல்களை உருவாக்கவும் மற்றும் சீரமைக்கவும் உதவுகிறது.

1 ஒரு உருளைக்கிழங்கை எடுத்து அவற்றை மொத்தமான சில துண்டுகளாக நறுக்கி, ஒவ்வொரு துண்டாக வரி தழும்புகளின் மீது மென்மையாக தேய்க்கவும்.

2 வரி தழும்புகளின் மீது உருளைக்கிழங்கின் சாறு படுவதை உறுதி செய்து கொள்ளவும். உருளைக்கிழங்கு சாறு காய்ந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

4 எலுமிச்சை சாறு

வரி தழும்பை நீக்கும் இன்னொரு எளிய வழி எலுமிச்சை சாறு. இதில் இயற்கையாகவே நிறைந்துள்ள அமிலதன்மை உடலில் உள்ள வரி தழும்பு, முக பரு மற்றும் பல தழும்புகளை சரி செய்ய உதவுகிறது.

1 எலுமிச்சை சாற்றை மிருவாக வரி தழும்புகளின் மீது தேய்த்துவிடவும். பின் அதை பத்து நிமிடங்களுக்கு ஊறவைத்து  வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

2 சம அளவு எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளரி சாற்றை நன்கு கலந்து வரி தழும்பின் மீது தேய்க்க நல்ல பலன் கிடைக்கும்.   

5 முட்டை வெள்ளைக்கரு

முட்டையில் அதிக அளவிலான புரத சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. வரி தழும்புகளுக்கு முட்டையின் வெள்ளை கருவை நேரடியாக உபயோகிக்கலாம்.   

1 முட்டையின் வெள்ளை கருவை தனியாக பிரித்தெடுக்கவும். வரி தழும்புள்ள இடங்களை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்த பின் முட்டையின் வெள்ளை கருவை தடவவும். அது முற்றிலும் காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவவும்.

2  கடைசியில் சருமம் ஈரப்பதத்துடன் இருக்க ஆலிவ் எண்ணெய் உபயோகிக்கவும். இது போன்று தினமும் இரண்டு வாரங்களுக்கு செய்ய நல்ல மாற்றத்தை காணலாம்.

இயற்கையாக கிடைப்பவற்றை கொண்டு பக்க விளைவுகள் இல்லாமல் சரி செய்ய முயற்சிக்கலாமே!

Leave a Reply

%d bloggers like this: