dhosaiyai-pizavai-pol-seivathiu-epati

உங்கள் குழந்தைகள் பீஸ்ஸாவை மிகவும் விரும்புவார்களா? நீங்கள் அதை உடல் நல கேடு என்பதால் தவிர்க்க நினைக்கிறீர்களா? உங்கள் குழந்தைகள் ஆசைக்காக கவலையுடன் வாங்கி கொடுக்கிறீர்களா? அப்படியானால் இனி கவலையை விடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும், அவர்கள் விருப்படியும் பீஸ்ஸாவை கொடுக்கலாம். நாம் வீட்டில் இருப்பவற்றை வைத்தே தோசையை பீஸ்ஸா போல செய்யலாம். இப்போ அதற்கான வழிமுறைகளை பார்ப்போம். 
 
தேவையான பொருட்கள்
1 தோசை மாவு
2 பாலாடை கட்டி (cheese)
3 வெங்காயம்
4 பச்சை மிளகாய், பூண்டு
5 மஞ்சள் குடை மிளகாய்
6 சிவப்பு குடை மிளகாய்
7 மிளகாய் சாஸ்
8 தக்காளி சாஸ்
9 வெண்ணை
10 உப்பு
11 கேரட்
12 கொத்தமல்லி இலை
13 முட்டைகோஸ் மற்றும்
14 அவித்து உதிரியாக்கப்பட்ட இனிப்பு சோளம் ( ஸ்வீட் கார்ன்)
 
செய்முறை 
ஒரு கடாயில் எண்ணெய் அல்லது நெய் விட்டு பூண்டு, வெங்காயம், குடை மிளகாய், பச்சை மிளகாய், கேரட், முட்டைகோஸ் மற்றும் தேவையான அளவு உப்பு போன்றவற்றை அரை பதத்திற்கு வேக வைத்து அதனுடன் வேக வைக்க பட்ட சோளம் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி எடுக்கவும்.
 
பின் அடுப்பை சிறு தீயில் வைத்து தோசைக்கல்லில் இரண்டு கரண்டி மாவு ஊற்றி தோசை வார்த்து அதன் மேல் நாம் வறுத்து வைத்தவற்றை அதன் மேல் பரப்பி, அதனுடன் மிளகாய் சாஸ், தக்காளி சாஸ் மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி நன்கு தோசை மீது பரப்பி, அதன் மேல் பாலடைக்கட்டியை துருவி விடவும். பின் சிறிது நேரம் மூடி வேக வைக்கவும்.
 
இதோ சுவையான தோசை பீஸ்ஸா ரெடி! இதை உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும், அவர்கள் விரும்பியதையும் கொடுக்கலாம்.
 
குறிப்பு
இது ஸ்வீட் கார்ன்கு பதில் நீங்கள் உங்களுக்கு வேண்டியவற்றை சேர்க்கலாம்.

Leave a Reply

%d bloggers like this: