இன்றைய சூழலில், உணவு விஷம் (food-poison) என்பது அடிக்கடி உண்டாகும் பிரச்சனையாகிவிட்டது! உணவு விஷம் என்றால் என்ன..? இது எவ்வாறு உண்டாகிறது என்று அறியலாமா ..?
உணவு விஷமும் உண்டாகும் விதமும்..!
புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப்போகும் தன்மை கொண்டவை. வேர்க்கடலை, பால், அசைவ உணவு வகைகள், எண்ணெய் எல்லாம் சீக்கிரமே கெட்டுப் போகும். எண்ணெயில் பொரித்த உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிட்டால் ஆபத்தும் சேர்ந்து வரும். மழை, பனிக்காலத்தில் உணவுகள் கெட்டுப் போகக் காரணமாக இருப்பவை பூஞ்சைகள். அரிசி, பருப்பு போன்ற கிச்சனுக்குள் இருக்கும் பொருட்களுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் இந்தப் பூஞ்சைகள் பொருளையும் கெடுத்து, நோய்களையும் கொடுத்துவிட்டுப் போகும்.
இவ்வாறு உண்டாகும் நோய்களையே, நாம் உணவு விஷம் என்றும், உணவு விஷத்தால் ஏற்பட்டது என்றும் கூறுகிறோம்…

பரவும் முறைகள்…
- குளிர்சாதனப் பெட்டியில் ஒரு பொருளில் இருக்கும் பூஞ்சை, மற்ற உணவுப் பொருட்களுக்கும் பரவிவிடும்.
- கிச்சன் பொருள்களில் பூச்சிகள், பூஞ்சைகள் இருப்பது தெரிந்தால், அதை வெயிலில் உலர்த்தி, காயவைப்பதால் பூஞ்சைகள் மறைந்துவிடாது; அவற்றை உடனடியாக கொட்டிவிடுவது நல்லது.
- காலாவதி ஆன பொருள்களைப் பயன்படுத்துவது, கெட்டுப்போன பழங்களையும், காய்கறிகளையும், எண்ணெய் பொருட்களையும் சாப்பிடுவது உணவு விஷத்தை ஏற்படுத்தும்.
தடுக்கும் முறைகள்…
- மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது
- காய்கறிகள், பழங்களை புதியதாக வாங்கி பயன்படுத்த வேண்டும்.
- புதியதாக சமைத்த உணவுகளை சாப்பிடுவது.