tholudan-sapita-ventiya-10-palangal

பழங்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால் நம்மில் பலர் பழங்களின் தோல்களை நீக்கிவிட்டு உண்கிறோம். பழங்களின் தோல்களை நீக்காமல் எப்படி உண்பது என்கிறீர்களா?  பழங்களின் தோல்களை நீக்கிவிட்டு தான் உண்ண முடியும். அதற்காக அனைத்து பழங்களின் தோல்களையும் நீக்கி விட வேண்டும் என்பது பொருள் அல்ல. நாம் தோலுடனும் சில பழங்களை உண்ண முடியும். அவற்றில் பழங்களை காட்டிலும் தோல் பகுதியில் தான் சத்துக்கள் நிறைந்துள்ளன. அந்த பழங்கள் என்னனென்ன என்பதை பார்ப்போம்.

1 ஆப்பிள்


ஆப்பிள் என்பது அதிகப்படியான மக்களால் விரும்பப்படும் ஒரு பழம் மற்றும் பல மருத்துவர்களால் கூட பரிந்துரைக்கப்படுகிறது. இதில் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் ஏ, சி போன்ற பல சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவற்றில் சத்துக்கள் சதை பகுதியை விட தோல் பகுதியில் தான் அதிகம். அவற்றை நீக்குவது நீங்கள் பழத்தின் 80 % சத்துக்களை நீக்குவதற்கு சமம்..!

2 மாம்பழம்

மாம்பழத்தில் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் ஏ, சி போன்ற பல தாவர ஊட்ட சத்துக்கள் நிரம்பியுள்ளன. அதன் தோல் பகுதியிலும் சத்துக்கள் அதிகம் நிரம்பியுள்ளன. எனவே மாம்பழத்தையும் தோலுடன் சாப்பிடுவது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பழம்.

3 திராட்சை

திராட்சையில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் வைட்டமின் சி சத்துக்களும் உள்ளன. இவைத்தவிர பாஸ்பரஸ்,இரும்புச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன. இது நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துதல், புற்று நோயை தடுத்தல் மற்றும் இரத்தத்தை சுத்தப்படுத்துதல் போன்றவற்றை செய்கிறது. இதன் தோலையும் தவிர்க்க கூடாது.

4 நெல்லிக்காய்

இதில் அதிக அளவிலான புரத சத்துக்களும், நார்ச்சத்துக்களும், இரும்புச்சத்தும், பாஸ்பரஸ் மற்றும் அளவிலான வைட்டமின் ஏ , சி போன்றவை நிறைத்துள்ளதால், நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது. ஒரு பெரிய மலை நெல்லிக்காயை சாப்பிடுவது ஒரு ஆப்பிள் அல்லது புரோக்கோலி சாப்பிடுவதற்கு சமம்.

5 கொய்யாப்பழம்

கொய்யாப்பழத்தில் அதிக அளவிலான ஊட்ட சத்துக்களும் இரும்புச்சத்தும், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி மற்றும் பி ஆகியவை அதிக அளவில் நிறைந்துள்ளன. இதன் சதை பகுதியை காட்டிலும், தோலிலேயே சத்துக்கள் நிரம்பியுள்ளன.

6 சப்போட்டா

வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இதனை உண்ணுவதால் உங்கள் சருமம் மினுமினுப்படையும். சப்போட்டாவை தோலுடன் உண்பது சாலா சிறந்தது.

7 நாவல் பழம்

கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், வைட்டமின் சி, தியாமின், ரிபோப்லாவின், நியாசின், வைட்டமின் பி 6, கலோரிகள், கார்போஹைட்ரேட், கரோட்டின், ஃபோலிக் அமிலம், ஃபைபர், கொழுப்பு மற்றும் புரதம் போன்ற பல சத்துக்கள் நிரம்பியுள்ளன. இது ஒரு குறிப்பட்ட காலத்தில் மட்டும் கிடைக்கும் பலவகைகளில் ஒன்று.

8 பேரிக்காய்

இதில் அதிக அளவிலான ஊட்ட சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன மற்றும் இதன் தோலில் ஆண்டி-ஆக்ஸிடென்ட் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு மருந்துவ தன்மை நிறைந்துள்ளதால் இதன் தோலை உண்பது மிகவும் நல்லது.

9 பிளம்ஸ்

இந்த பழம் மன கவலையை சரி செய்கிறது. இதன் தோலில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் ஆண்டி-ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது மற்றும் இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

10 இலந்தை பழம்

வைட்டமின் எ மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதன் தோல் பகுதி ஆண்டி- ஆக்ஸிடென்ட்டாக செயல்படுவதால், தோலை தவிர்க்காமல் உண்பது நல்லது.

பழங்களை தோலுடன் உண்பது நல்லது என்றாலும், அவற்றை கழுவாமல் உண்பது நல்லதல்ல. முடிந்தவரை பழங்களை சுடுநீரில் கழுவி விட்டு அல்லது சுத்தமான நீரிலாவது சுத்தமாக கழுவி விட்டு உணவும். பழங்களை கழுவாமல் உண்பதால் அவற்றின் மேல் இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் பல ரசாயனங்களை சேர்த்து சாப்பிட்டுவிடுவோம். தோல்களை தவிர்க்காமல் சாப்பிட்டு அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெறுவோமாக!

Leave a Reply

%d bloggers like this: