kulanthaikalai-kollum-sillukal-chips

 
குழந்தைகளின் அனைத்து ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தராது, நீங்கள் வாங்கித்தரும் சில்லுகள் உங்கள் குழந்தைகளின் குடலைக் குதறுகின்றன; பெரும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. 
 
குழந்தைகளைக் கொல்லும் சில்லுகளைப் பற்றி விழிப்புணர்வு பெறுவோம் வாருங்கள்..!!
 
கடையில் விற்கும், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அனைத்து வகை சில்லுகள் (chips) அனைத்திலும் திரும்ப திரும்ப உண்ண தோன்றும் வகையான ரசாயன உப்பு கலக்கப்படுகின்றது. இதை சாப்பிடும் குழந்தைகள் சிறுவர்கள் விரைவாக இவைகளுக்கு அடிமையாவார்கள்; குறைந்தது தினமும் 4 பாக்கெட்டுகள் வரை சாப்பிடும் நிலை ஏற்படும்.
 
 
இதனால் முதலில் சிறுகுடல் பாதிக்கப்படும்; சிறுகுடல் இவைகளை ஜீரணிக்க இயலாமல் கழிவாக தேக்கும்; பிறகு, இதன் ரசாயண உப்புகள் சிறுநீரகங்களையும் பாதித்து, கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.
 
அபாய எச்சரிக்கைகள்
  • இதன் விளைவாக உங்களது பிள்ளைகளின் முகம் வீங்கும்;
  • உடலில் சிகப்பான.தடிப்புகள் ஏற்படும்;
  • பசி இன்மை ஏற்படும், ஜூரம் அடிக்கும்; இவைகள் எல்லாம் அபாய எச்சரிக்கைகள்…

 விளைவும் விழிப்புணர்வும்
 
இதை நீங்கள் கவனிக்காமல் விட்டால், சிறுநீரக செயழிலப்பு ஏற்படும். இது போன்ற நிலை ஏற்பட்டால் உப்பில்லாத உணவோடு, வாழை தண்டுசாறு, அருகம்புல் சாறு, முள்ளங்கி சாறு இவைகளை மாற்றி, மாற்றி கொடுத்து வந்தால், நல்ல பலனிருக்கும்.
 
பெற்றோர்களே..! குழந்தைகள் விரும்புவதை செய்யலாம்; ஆனால், அது அவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என அறிந்தும் செய்வது மடத்தனமாகும். எனவே, குழந்தைகள் சில்லுகள் (chips) சாப்பிட விரும்பினால், வீட்டிலேயே செய்து தரவும்.

Leave a Reply

%d bloggers like this: