pasi-paruppu-idli

பாசிப்பருப்பு இட்லி சத்தானது, எளிதில் செரிக்கும் தன்மை கொண்டது. சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. அனைத்து வகை வயதினரும் உண்ணத் தகுந்த உணவு. இத்தனை சிறப்பு வாய்ந்த பாசிப்பருப்பு இட்லி எப்படி செய்வது அனா அறியலாமா..???  

தேவையானப் பொருட்கள்:

பாசிப்பருப்பு – 2 கப், தேங்காய்த் துருவல் – 2 தேக்கரண்டிகள், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கியது), பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி, தயிர் – 1 கப், கடுகு – 2 தேக்கரண்டிகள், எண்ணெய், உப்பு, தண்ணீர் – தேவையான அளவு.

செய்முறை:

  • முதலில் பாசிப்பருப்பைத் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு மின்னம்மியில் (mixie) சேர்த்து கொஞ்சம் வற வறவென்று இருக்குமாறு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சுடானதும், கடுகு, பெருங்காயத்தூள், நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து தாளித்து அரைத்த பாசிப்பருப்புடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  • பிறகு இதனுடன் சமையல் சோடா, தயிர், தேங்காய்த் துருவல், சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து மாவை 1 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
  • பின் இட்லி தட்டில் சிறிதளவு எண்ணெய் தடவி, அதில் இட்லி மாவை ஊற்றி, வேகவைத்து எடுத்தால், சத்து நிறைந்த தானிய பாசிப்பருப்பு இட்லி தயார்!

Leave a Reply

%d bloggers like this: