pasiparupilum-lattu-seiyalame

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சத்தான தீங்கு விளைவிக்காத திண்பண்டங்களை கொடுக்க நினைத்தால், பாசிப்பருப்பு லட்டு செய்து கொடுங்களேன். பாசிபருப்பில் சோடியம், ஹார்போஹைட்ரெட் மற்றும் புரதம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது உங்கள் குழந்தைக்கு ஆரோக்கியத்தை தரவல்லது. பாசிப்பருப்பு லட்டு செய்வதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.  

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு – 1 கப்

வேர்க்கடலை (வறுக்கப்பட்டது) – 1/4 கப்

நெய் – தேவையான அளவு

நாட்டு சர்க்கரை (கட்டி இல்லாமல்) – 3/4 கப்

எள் மற்றும் ஏலக்காய் – சிறிது

செய்முறை

1 ) ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பாசிப்பருப்பு மற்றும் வேர்க்கடலையை மிதமான சூட்டில், நல்ல மனம் வரும் வரை பொன்னிறமாக வறுக்கவும்.

2 ) வறுத்து வைக்கப்பட்டவை நன்கு ஆறியதும், அவற்றுடன் நாட்டு சர்க்கரை, ஏலக்காய் மற்றும் எள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைக்கவும்.

3 ) நெய்யை சூடு செய்து, அரைத்து எடுக்கப்பட்ட கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி லட்டு போல் பிடிக்கவும்.

இது குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, அவர்களை விரும்பி உண்ண செய்யும். நாட்டு சர்க்கரை கிடைக்காதவர்கள் வெள்ளம் அல்லது சர்க்கரை சேர்த்து கொள்ளலாம். உங்கள் அன்போடு குழந்தைகளுக்கு ஆரோக்யமானதையும் சேர்த்து கொடுக்கலாமே!

Leave a Reply

%d bloggers like this: