குழந்தைகளுக்கு-எதிரான-வன்கொடுமை-நடந்திருப்பதை-அறிவதற்கான-வழிகளும்-தடுக்கும்-முறைகளும்–xyz

” குழந்தைகள் நமது மதிப்பு மிக்க ஆதாரமாக இருப்பவர்கள்”. (ஹெர்பர்ட் ஹூவர், அமெரிக்காவின் 31 ஆவது ஜனாதிபதி)

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை என்பது பெரியவர்களால் குழந்தைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிர்ச்சி அடைய செய்வது. புறக்கணிப்பு, உடல் ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம், சுரண்டல் மற்றும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் என பல வடிவங்களில் அவைகள் குழந்தைகளை பாதிப்பிற்குள்ளாக்குகின்றன. குழந்தை உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படும் போது அதிகமாக மனதளவில் பாதிப்படைவார்கள். இது குழந்தைக்கு வெட்கம், குற்றவுணர்ச்சி மற்றும் உணர்ச்சியின் உணர்வை தூண்டி அவர்களை கவலையடைய செய்கிறது. இவை உங்கள் பிள்ளையின் வளர்ச்சிக்கான நம்பகத்தன்மையற்ற பண்புகளாகும். இது உண்மையற்றதாக தோன்றவில்லை என்றாலும் அத்தகைய அட்டூழியங்களால் குழந்தைகளை வைத்து பெரியவர்களால் அரங்கேற்றப்படுகிறது என்பது கசப்பான உண்மையாகும். இது உங்கள் குழந்தைக்கு நடக்கக்கூடாது, ஆனால் ஒவ்வொரு நாளும் பல குழந்தைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம், அவர்களுள் எவரேனும் இது போல் பாதிப்படையாமல் இருக்க, மனிதநேயத்துடன் உதவ வேண்டியது உங்கள் கடமை. இது போன்ற வன்கொடுமைகளுக்கு ஆளான குழந்தைகளிடம் காணப்படும் சில அறிகுறிகள் மற்றும் சரி செய்வதற்கான வழிமுறைகளை காண்போம்.

அறிகுறிகள் :

1 திடீரென்று கோபம் அல்லது மனச்சோர்வு போன்ற நடத்தை மாற்றங்கள். இது போன்ற ஒரு அதிகப்படியான உணர்வின் தோற்றம். உதாரணமாக, சிறிய சிறிய விஷயங்களுக்கும், காரணமில்லாத ஒன்றிற்கும் கோபப்படுவது என அவர்கள் நடவடிக்கையில் மாற்றம் தெரியும்.

2 மற்றவருடன் பேசுவதை புறக்கணிப்பது அல்லது அவர்களுக்கு முக்கியம் என்று தோன்ற கூடிய ஒன்றின் மீது ஆர்வம் காட்டாமல் இருப்பது. உதாரணமாக, அவர்கள் விரும்பும் விஷயங்களைச் செய்யவோ அல்லது பெற்றோருடன் தொடர்பு கொள்ளவோ ஆர்வம் காட்டாமல் இருப்பார்கள்.

3 திடீரென்று அவர்கள் நம்பிக்கையில் வீழ்ச்சியடைவது. உதாரணமாக, இது அவர்களது வகுப்புகளில், மதிப்பெண்களில் காணப்படலாம். அவர்கள் திடீரென்று தங்கள் சொந்த திறமையில் நம்பிக்கையை இழக்க நேரிடும். இதன் விளைவாக அவர்களின் மதிப்பெண்கள் வீழ்ச்சியடையும்.

4 எப்போதும் இருக்கும் வெட்டுக்கள் அல்லது காயங்கள் எவையேனும் காணப்படலாம். இவற்றை பிள்ளைகள் அவ்வப்போது அடிக்கடி மறைக்க முயற்சிப்பார்கள். இவை அவர்களை மிகவும் வேதனை பட செய்யும். இது குழந்தைகள் உடல் ரீதியாக பாதிப்படைந்திருப்பதற்கான மிக முக்கியமான அறிகுறியாகும்.

5 சில மனிதர்கள் மற்றும் இடங்களை தவிர்ப்பது. இது போன்று உங்கள் குழந்தை சில இடங்கள் மற்றும் மனிதர்களை தொடர்ந்து தவிர்ப்பதை நீங்கள் கவனித்தால், அது மிக பெரிய அறிகுறியாக இருக்கும். அது அவர்களுக்கு அந்த நினைவுகளை தொடர்ந்து தருவதால் அதை தவிர்க்க நினைப்பார்கள்.

6 இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் தவிப்பது. அவர்களது சித்திரவதை தொடர்ச்சியாக கனவுகளாக வந்து கொண்டிருக்கும், இதனால் அவர்களால் இரவு நேரங்களில் சரிவர உறங்க முடியாது.

பாதிக்கப்பட்ட குழந்தையை அதிலிருந்து மீட்கவும், நடை பெறாமல் தவிர்க்கவும்

1 உங்கள் குழந்தைகளுடன் போதுமான அளவு நேரம் செலவிடுங்கள். அவர்களுக்கென நேரம் ஒதுக்குங்கள். அவர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள் மற்றும் உரையாடுங்கள்.

2 அவர்களுக்கு முன் கூட்டியே இது பற்றி எடுத்து சொல்லுங்கள். என் குழந்தைக்கு விவரம் பற்றாது எனவும், குழந்தைக்கு போய் சொல்வதை என்று எண்ணுவதும், பாதிப்பை ஏற்படுத்தும்.

3 குழந்தைகள் வளர துவங்கியது, அவர்களிடம் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். அதாவது, குழந்தைகளிடம் அவர்களது பெற்றோரை தவிர வேறு யாரும், அவர்களது அந்தரங்க உறுப்புகள், ஆசன வாய் பகுதி, பெண் குழந்தையாய் இருந்தால், அவர்களது மார்பக பகுதி போன்றவற்றை தொடுவது தவறு என்று எடுத்துரையுங்கள்.

4 அது போன்று ஏதும் நேர்ந்தால் எங்களிடம் தெரிவியுங்கள் என்று அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல். அவர்களுக்கு தைரியத்துடன் அதை எதிர் கொள்ள கற்று கொடுங்கள்.

5 முடிந்தவரை குழந்தைகளை உங்கள் கண்கானிப்பிலேயே வைத்து கொள்ளுங்கள். உறவினர்கள், தெரிந்தவர்கள் என குழந்தைகளை யாரையும் நம்பி விட்டு செல்லாதீர்கள்.

6 அது போன்ற ஆபத்தில் சிக்கினால் அவர்களை அதிலிருந்து மீட்டு வெளி கொண்டுவாருங்கள். அவர்களுக்கு ஆறுதல் உரையுங்கள். அவர்களை தைரிய படுத்துங்கள். எதையும் எதிர் கொள்ளும் திறனை வெளி கொண்டு வாருங்கள்.

கண் போன்ற குழந்தைகளை கலங்கம் செய்து, அவர்கள் வாழ்வை திசை திருப்பும் மிருகங்களிடம் இருந்து நாம் குழந்தையும், நம்மால் முடிந்த வரை மற்ற குழந்தைகளையும் பாதுகாப்போம். 

Leave a Reply

%d bloggers like this: