karpakalathi-thunguvathan-mukiyathuvam

கருத்தரிப்பின் பின் தூங்குவதிலும் சில மாற்றங்கள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. எப்படி இருந்தாலும், குழந்தை உருவானதன் பின் தூங்குவது சவாலான ஒன்று என்பது, பல அம்மாக்களும் கர்ப்ப காலத்தில் அதிர்ச்சி அடைந்த ஒன்றே. அவர்கள் மிக கவனத்துடன் இருக்க வேண்டும். அப்படி அவர்கள் கவனத்துடன் இல்லை என்றால், அவர்களால் தாய்மை உலகில் ஒரு தாயாக திகழ முடியாது .

கர்ப்பகாலத்தில் தூக்கம் என்பது முக்கியமான ஒன்று. ஏன்?

கர்ப்பமாக இருந்தாலோ, இல்லை என்றாலோ தூக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நாம் சோர்வாக இருக்கும் போது, அது நம்மை எரிச்சலுட்டுவதாகவும், ஊக்கமில்லாமல் இருப்பதாகவும், வேலையில் கவனம் இல்லாமலும், இவ்வளவு ஏன்? நாம் உயிருடனே இல்லை என்பதை போலவும் உணர செய்யும்.

தூக்கமின்மை என்பது மிகவும் ஆபத்தானதும் கூட. பெரும்பான்மையான சாலை விபத்துகள், ஓட்டுனர்கள் உறங்குவதாலேயே ஏற்படுகின்றன. சில சமயங்களில் சோர்வினாலும், கவனக் குறைவினாலும் ஏற்படுகின்றன. சில நேரங்களில் நாம் செய்யும் முட்டாள் தனங்களினாலும் ஏற்படும். எது எப்படி இருந்தாலும், கர்ப்பகாலத்தில் தூக்கம் என்பது மிக முக்கியமான ஒன்று. அப்படி சரியான உறக்கம் இல்லாத போது அது ஆபத்துகளை கூட விளைவிக்கும்.

தூக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் முன்சூல்வலிப்பு போன்றவற்றை ஏற்படுத்த கூடியது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் முடிந்த வரை நல்ல ஓய்வில் இருக்க வேண்டும். பிரசவ காலம், பிரசவம் மற்றும் ஆரம்பகால தாய்மை போன்றவற்றை கையாள முன்கூட்டியே நல்ல ஓய்வில் இருப்பது அவசியம். பிரசவ காலம் என்பது யாராலும் தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் நாம் போதுமான அளவு உறக்கத்துடன் நல்ல ஓய்வில் இருப்பது அவசியம். பிரசவ தேதி நெருங்கும் சமயத்தில் 5 மணி நேரத்திற்கு குறைவாக உறங்கும் பெண்களின் பிரசவ கால நேரம் அதிகமாக இருப்பதாகவும் அல்லது அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்படுவதாகவும் சொல்கிறது ஒரு ஆய்வு. அப்படி பிரசவ கால நேரம் அதிகமாகவோ அல்லது அறுவை சிகிச்சை முறையிலோ குழந்தையை பெற்றெடுத்தால், அதிலிருந்து உங்களை சரி செய்து கொள்ள அதிக நாட்கள் எடுக்கலாம். இதெல்லாம் புதிதாகப் பிறந்த குழந்தையை கவனித்துக் கொள்வதற்கு கூட சிரம பட செய்யலாம்.

குழந்தை பிறந்த பின் வீட்டினுலேயே இருப்பது உங்களுக்கு சோர்வை அளிக்கலாம். குழந்தை பிறந்த பின் உங்களுக்கு நீங்களே சிறந்த உதவியாளராக இருப்பீர்கள். நீங்கள் பிரசவ காலத்தின் போது நன்றாக உறங்கி இருப்பது, இப்போது உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். குழந்தை பிறப்பின் பின் நீங்கள் உறங்கும் நேரங்களிலும் மாற்றங்கள் ஏற்படும். குழந்தை பிறந்த முதல் மாதத்தில் நீங்கள் 8 – 12 முறை பால் கொடுக்க வேண்டியதாய் இருக்கும். எதிர்பாராத விதமாக இது 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் கணவர் குழந்தையின் நாப்கின் மாற்றுதல் என பலவற்றை செய்ய வேண்டி வரும். அது சில சமயங்களில் உங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாவும், வேடிக்கையாகவும் இருக்கும்.

குழந்தை பிறப்பில் எப்படி இருவருக்கும் பங்கு இருக்கிறதோ, குழந்தை வளர்ப்பிலும் இருவருக்கும் பங்குண்டு. நீங்கள் பல உதவிகளை உங்கள் கணவரிடம் எதிர் பார்க்கலாம். நீங்கள் எதிர் பார்க்காத உதவிகளை கூட உங்கள் கணவர் செய்யலாம். இவை அனைத்தும் உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். ஆனால் நீங்கள் இவை அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். இதில் முக்கிய பங்காற்றுவது, பிரசவ காலத்தின் போது ஏற்படும் சரியான உறக்கம். நன்றாக உறங்கி உங்களின் உடல் நலனையும், குழந்தையின் உடல் நலனையும் பேணி காப்பீர்களாக!

Leave a Reply

%d bloggers like this: