kulantai-valarppil-ammavin-seyalkalaiyum-minjum-appavin-antha-7-seyalkal

பெற்றோர்கள் என்றாலே, அதில் பெரும் பங்கு அன்னையருக்கு தான்; குழந்தைக்கு பாலூட்டுவது, குளிப்பாட்டுவது, பள்ளிக்கு அழைத்து செல்வது, பாடம் சொல்லித்தருவது என குழந்தை வாழ்வின் ஆதாரமாய் அம்மா திகழ்கிறாள். ஆனால், குழந்தை வளர்ப்பில் அப்பாவின் பங்கு மிகுதியெனினும், அது பெரிதாகத் தெரிவதில்லை. மரத்திற்கு ஆணிவேர் போல், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆணிவேர் அப்பா; அம்மாவோ இந்த ஆணிவேர் துணையில்லாது, எந்தக் கனியையும் தாங்க இயலாது.

குழந்தை வளர்ப்பில், அம்மாவின் செயல்களையும் மிஞ்சும் அப்பாவின், அந்த 7 செயல்கள்..!!!

1. மிகச்சிறந்த அமர்விடம்..!

எந்தவொரு குழந்தைக்கும், தன் தந்தையின் தோள் தான், வாழ்வில் மறக்க முடியாத அமர்விடம். குழந்தை சோர்வடைந்தால், அயர்வுறும் இடமாக; தூக்கம் வந்தால், நித்திரை கொள்ளும் தொட்டிலாக; சந்தோஷமாய் வெளியில் உலாவர உதவும் தேராக; வெளியிலோ, பூங்காவிலோ பார்க்க இயலாத, பொருட்களையும் பார்க்க வைக்கும் தந்தையின் தோள்பட்டை…

2. விளையாட்டுத் தோழன்…!!

குழந்தையோடு விளையாண்டு, அதன் மனதை கொள்ளை கொள்ள, அப்பாவைத் தவிர, வேறு யாராலும் இயலாது! எந்தவொரு குழந்தைக்கும் முதல் விளையாட்டுத் தோழன் தன் தந்தையே… பல விளையாட்டுக்களைக் குழந்தைக்குக் கற்றுக்கொடுக்கும் குரு..! வீட்டில், விளையாட்டு மைதானத்தில் என எங்கும் எப்பொழுதும் குழந்தையோடு விளையாடும் ஜீவன் அப்பா..!

3. வீட்டுப்பாடம்..!

என்னதான் அன்னை அன்பாகவோ அதட்டியோ வீட்டுப்பாடம் செய்ய வைத்தாலும், அதுவரை அடம்பிடித்து, எழுதும் குழந்தை.., தன் தந்தை வந்தவுடன் அவரிடம் பயில ஆவலோடு செல்கிறது; இல்லையேல், ஒருவித பயம்கலந்த மரியாதையில், விரைவாக பாடம் பயில்கிறது.. தந்தை எவ்வளவுதான் சோர்வாக இருந்தாலும், தன் குழந்தைக்கு சொல்லிக் கொடுக்க மறுப்பதில்லை.. குழந்தைக்கு பள்ளியில் புரியாதவற்றையும்கூட, தந்தை இலகுவாக புரிய வைத்துவிடுவார்..!

4. பயமோ பயம்..!

பெரும்பாலான, குழந்தைகளுக்கு தன் தந்தையிடம் சற்று பயமும், தாயிடம் அன்பான அதிகாரமும் இருக்கும்; தாய் ஆயிரம் முறை ஒரு விஷயத்தை செய்யச் சொல்கையில், அலட்சியம் செய்யும் குழந்தை, தந்தையின் பிரேவசித்தலிலோ அல்லது சிறு அதட்டலிலோ சட்டென்று செய்து முடிக்கிறது..! தந்தையால் மட்டுமே சாத்தியமாகும், குழந்தையின் சில செயல்கள்..

5. உணவும் உறக்கமும்

தாய் எவ்வளவு தான், குழந்தைக்குப் பிடித்த உணவுகளை சமைத்து வைத்தாலும், சாப்பிடாது அடம்பிடிக்கிறது மழலை. ஆனால், தந்தையோ ஒரு தொண்டைக் கணைப்பில், மாயாஜாலம் செய்து, குழந்தையை சாப்பிட வைத்துவிடுவார்..!

6. சலுகைகளின் சகோ..!

தாய் பீஸ்ஸா, ஐஸ்கிரீம் இவற்றிற்கு, மறுப்பு தெரிவிக்கையில், அன்னையை சமாளித்து, மழலையின் ஆசையை நிறைவேற்றும் தாயுமானவன் தந்தை!!

7. பாதுகாவலன்..!

ஒரு குடும்பத்தில், தாய் என்னதான் அன்பைக் கொட்டி அரவணைத்து காத்தாலும், தந்தையால் மட்டுமே தகுந்த பாதுகாப்பை, குடும்பத்திற்கு நல்க முடியும்..!

“தெய்வங்கள் எல்லாம் தோற்றேப் போகும் தந்தை அன்பின் முன்னே.!” – ஒரு இல்லத்தில், தந்தையின் முக்கியத்துவம் பெரிதும் உணரப்படுவதில்லை… எதையும் எதிர்பாராது, எல்லாவற்றையும் அள்ளிக் கொடுப்பவர்.. தாயையும் சேயையும் தலையாய கடமையாய்க் கொண்டு காக்கும் தாயுமானவன் தந்தை!!!

Leave a Reply

%d bloggers like this: