karpa-kalathil-neengal-vurangum-muraikal-pathukapanatha

உறக்கம் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று. நாம் உறங்கும் முறைகள் சரிதானா என்பதை  பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால் பெண்கள் கருவுற்றிருக்கும் போது உறங்குவது என்பதே கடினமான ஒன்று. அப்படி நீங்கள் படுக்கும் போதும் , வெப்பமாகவும், அசௌகர்யமாகவும், இடுப்பு பகுதியில் அரிப்பு மற்றும் அதிகப்படியான நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படும். நீங்கள் அதிகப்படியான தலையணைகளை வைத்து உறங்கும் போது, உங்கள் வீட்டின் மின்விளக்குகளை அணைத்த பின் உங்களுக்கு சிறுநீர் கழிக்க தோன்றும். அரிதான சந்தர்ப்பங்களில், நீங்கள் மறந்து உங்கள் படுக்கையில் உறங்கி போனால், உங்கள் குழந்தை கருப்பையில், உங்கள் சிறுநீர்ப்பையை டிராம்போலைன் போல உபயோகித்து கொண்டிருக்கும். இவற்றை மனதில் கொள்ள வேண்டும். நாம் இப்போது கர்ப்பகாலத்தில் உறங்க கூடாத மற்றும் உறங்க வேண்டிய நிலைகளை பற்றி பார்ப்போம்.

1 கர்ப்ப காலத்தில் உங்கள் வயிற்றின் மேல் தூங்குவது

கருத்தரிப்பின் ஆரம்ப காலத்தில் நீங்கள் அப்படி தூங்குவது உங்களுக்கு நன்றாக இருந்திருக்கலாம். ஆனால் உங்கள் குழந்தை வளர வளர அது ஆபத்தை விளைவிக்கும். நீங்கள் அப்படி உறங்குவது உங்களுக்கு வசதியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் கருவுற்றிருக்கும் போது அவ்வாறு உறங்குவது, உங்கள் குழந்தையை பாதிக்கும்.

2 கர்ப்ப காலத்தில் உங்கள் முதுகு பகுதியில் தூங்குவது

நீங்கள் கருத்தரித்த மூன்று மாதங்களில் நீங்கள் உறங்கும் நிலைகளால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் நீங்கள் உங்களது இரண்டாவது 3 மாதங்களில், அதாவது நீங்கள் 4 – 6 மாதங்களில் உங்கள் முதுகு புறம் உறங்குவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் அப்படி உறங்குவதால் உங்கள் கருப்பையில் அழுத்தம் அதிகரித்து, இரத்த குழாய்கள் மூலமாக இரத்தம் இருதயத்தை சென்றடையும். நீங்கள் தொடர்ந்து அவ்வாறு உறங்குவதால், தேவையான இரத்த ஓட்டம் மற்றும் ஊட்டச்சத்து போன்றவை உங்கள் நஞ்சுக்கொடி மற்றும் குழந்தையை சென்றடைவதை தவிர்க்கும். மேலும் இது மயக்கம் மற்றும் குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்தும்.

3 கர்ப்ப காலத்தில் உங்கள் வலது கை பக்கத்தில் தூங்குவது

கர்ப்ப காலத்தில் நீங்கள் உங்கள் வயிற்று பகுதியிலோ அல்லது முதுகு பகுதியிலோ உறங்குவதை காட்டிலும், உங்கள் வலது கை பக்கம் உறங்குவது நல்லது. ஆனால் உங்கள் இடது கை பக்கம் உறங்குவதுடன் ஒப்பிடுகையில் இது குறைவுதான். நீங்கள் உங்கள் வலது கை பக்கம் உறங்குவது உங்கள் கல்லீரலில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால், பெரும்பாலான மருத்துவர்கள் அதை தவிர்க்க சொல்வார்கள்.

4 கர்ப்ப காலத்தில் உங்கள் இடது கை பக்கத்தில் தூக்கம்

மருத்துவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உங்கள் இடது கை பக்கத்தில் தூங்குவதையே பரிந்துரைக்கிறார்கள். இந்த நிலையில் உறங்குவது, உங்கள் கருப்பை மற்றும் கல்லீரலில் ஏற்படும் அழுத்தத்தை குறைகிறது. மேலும் உங்கள் குழந்தைக்கு தேவையான இரத்தம், ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நஞ்சுக்கொடியை எந்த பாதிப்பும் இல்லாமல் அடைகிறது. இந்த நிலையில் தூங்குவது உங்களுக்கு அளவான இரத்தத்தை மட்டும் அனுமதிக்காமல், இரத்த ஓட்டத்தையும் சமப்படுத்தி, உங்களையும் உங்கள் குழந்தையையும் சென்றடைகிறது. கர்ப்ப காலத்தில் இடது புறம் உறங்குவது, வற்றுப்போக்கு போன்ற பலவற்றை குறைகிறது என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. உங்கள் கர்ப்பத்தின் கடைசி நாள் எது என்பதை யாராலும் சரியாக கூற முடியாது. எனவே கர்ப்பத்தின் பிற்பகுதியில் நீங்கள் உங்கள் இடது கை பக்கத்தில் உறங்குவது மிகவும் சிறந்தது. சில நேரங்களில் நீங்கள் உங்கள் இடது பக்கத்திலிருந்து, வலது பக்கத்திற்கு துக்கத்தில் திரும்பி விடுவது சகஜமான ஒன்று. ஆனால் நீங்கள் நடு இரவில் எழும் போது, உங்கள் கணவரின் உதவியுடன் இடது பக்கம் திருப்பி படுத்து கொள்ளுங்கள்.

உங்கள் கனவை எந்த பிரச்சனையும் இல்லாமல் கையில் கொண்டு வர, உங்கள் இடது கை பக்கம் இனி உறங்குவதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.

Leave a Reply

%d bloggers like this: