karpakalathil-thavirka-ventiya-5-palangal

கர்ப்பகாலத்தில் நீங்கள் எல்லாவற்றிலும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் இப்போது செய்யும் எந்த தீர்மானமும், உங்களை மட்டும் சேர்த்து அல்ல. அது உங்கள் குழந்தையுடனும், குழந்தை பிறப்பிலும் சம்மந்தப்பட்டது. இது உணவு விஷயத்தில் வரும் போதும், நீங்கள் குழந்தை நலனுக்காக மிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். பழங்கள் எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் சிறந்த உணவு என்றாலும், கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய பலன்களும் உள்ளன. அவை என்னென்ன பழங்கள் என்பதை பார்ப்போம்.

1 பப்பாளி

பப்பாளியில் முக்கியமாக, பப்பாளிக்காய் அல்லது அரை பழமாக இருக்கும் பப்பாளி பழத்தில் இருக்கும் பால் பொருள், உங்கள் கருப்பையை சுருங்க செய்யும். பப்பாளி காய் அல்லது பப்பாளி காய் பொருட்கள் நிறைந்த உணவு பொருட்களை மூன்று முதல் குழந்தை பிறப்பு வரை தவிர்ப்பது நலம். இந்த காரணங்களால் பப்பாளிக்கு தவிர்க்க வேண்டிய உணவுகளில் முதலிடம். நன்கு பழுத்த பப்பாளியில், ஆக்ஸிஜனேற்ற, வைட்டமின்கள் மற்றும் உடலுக்கு நன்மை விளைக்க கூடிய பல சத்துக்கள் இருந்தாலும், பப்பாளியை எந்த வடிவத்திலும் தவிர்ப்பது நலம். 

2 திராட்சை

கர்ப்ப காலத்தில் திராட்சைகளை உட்கொள்வது சர்ச்சைக்குரியது. சில மருத்துவ நிபுணர்கள் கர்ப்ப காலத்தில் திராட்சைகளைத் தவிர்ப்பதை பரிந்துரைக்கும்போது, மற்ற பழத்தை சாப்பிட உங்களுக்கு அறிவுரை கூறுவார்கள். திராட்சை கொடிகள் மீது தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் அளவு அதிகமாக இருப்பதன் காரணமாக திராட்சைகளை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் தோல் சீக்கிரத்தில் செரிமானம் அடையாது, இது உங்களுக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். திராட்சையில் நிறைந்திருக்கும் கார்போஹைட்ரெட் குளுக்கோசாக மாற்றப்படுவதால், உங்களின் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இது உங்கள் குழந்தைக்கு சர்க்கரை நோயை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. நீங்கள் குறைத்த அளவில் திராட்சை எடுத்து கொண்டாலே போதும், உங்கள் உடலுக்கு தேவையான தாதுப்புகளும், வைட்டமின்களும் கிடைக்கும்.

3 வாழைப்பழம்

இது எளிமையாக சாப்பிடப்படும் ஒரு பழம் என்பதால், அனைவராலும் அதிக அளவில் விரும்பப்படுகிறது. இதில் நிறைந்திருக்கும் பொட்டாசியம், உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கிறது. இதில் நிறைந்திருக்கும் கார்போஹைட்ரெட் குளுக்கோசாக மாற்றப்படுவதால், உங்களின் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். கர்ப்பகால சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு, வாழைப்பழத்தை குறைவான அளவில் எடுத்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பகாலத்தில் வாழைப்பழத்தை தவிர்த்து கொள்வது சிறந்தது.

4 அன்னாசி பழம்

இதில் அதிக அளவிலான புரதங்கள், கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருந்தாலும், இது ஆரம்ப கால கர்ப்பத்தில் தவிர்க்க வேண்டிய ஒன்று. இதில் இருக்கும் புரோமைன் எனப்படும் என்ஸைம், கருப்பை வாயில் வலுவிழக்கச் செய்கிறது, இதன் விளைவாக குறைமாத பிரசவம் அல்லது கருச்சிதைவு போன்றவை ஏற்படலாம். இது கருப்பையை சுருங்குவதால், கருப்பை வளர்ச்சிக்காக இதை தவிர்ப்பது அவசியம். இதிலும் அதிக அளவிலான சர்க்கரை நிறைந்திருப்பதால், கர்ப்பகால சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

5 பேரிச்சை பழம்

பேரிச்சை பழத்தில் அதிக அளவிலான இயற்கை சர்க்கரை நிரம்பியுள்ளது. உடலில் உள்ள செல்களில் குளுக்கோஸ் நிரம்பி இருப்பதால், இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இதனால் கர்ப்பகால சர்க்கரை நோயால் பாதிக்கப்படலாம். உங்கள் கர்ப்ப கால சிக்கலை தவிர்க்க, நீங்கள் இதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

மேலும் கழுவப்படாத காய்கள் மற்றும் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதில் இருக்கும் பூச்சி கொல்லி மருந்துகளும் ஆபத்தை விளைவிக்கும். அதிக படியான சர்க்கரை நிரம்பிய உணவு பொருட்களையும் தவிர்ப்பது நலம்.

Leave a Reply

%d bloggers like this: