enrum-ilamaiyaaka-irukka-aankal-seyya-ventiyavai

 
ஓயாத உழைப்பு, உடல் நலத்தில் அக்கறை இல்லாத விளைவால் ஆண்கள் சீக்கிரமே முதுமையை எட்டிவிடுகிறார்கள். எங்கு பார்த்தாலும், எதில் நோக்கினாலும் பெண்களுக்கான அழகு குறிப்புகளே அதிகம். உழைத்து ஓடாய் தேயும் ஆண்களுக்கும், குடும்பத்தைத் தாங்கும் தந்தைக்கும், யாரும் அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் கூறுவதில்லை. அக்குறையைப் போக்கி, ஆடவர்களை அழகானவர்கள்  ஆக்க இதோ சில குறிப்புகள்…
  • தினமும் 10 டம்ளர் அல்லது 2 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.
  • இரண்டு வேளை குளியல்; 4 வேளை முகம் கழுவ வேண்டும்.
  • பசலைக்கீரை, பீன்ஸ் சேருங்கள் முகச்சுருக்கங்கள் வராது.
  • மாதுளை, திராட்சை ஜூஸ் குடியுங்கள்.
  • பால், பயத்தம்பரும்பு கொண்டு முகம் கழுவுங்கள்.
  • உடற்பயிற்சி உடலில் தளர்வை உண்டாக்காது.
  • மிகச்சரியான அளவு உடைகளை அணியுங்கள்.
  • வெயிலில் சுத்த வேண்டாம்; அப்படிச் சுற்றினால் சன் ஸ்க்ரீன் லோஷன் போடவும்.
  • அளவான உணவை இடைவெளி விட்டு உண்ணவும். எண்ணெய் உணவுகள் வேண்டாம்.
  • வெதுவெதுப்பான நீரில் ஷேவ் செய்யவும்.
  • உணவில் உள்ள கருவேப்பிலையை மென்று தின்னவும்.
  • அதிக நேரம் பல் துலக்கி பல்லை கெடுக்க வேண்டாம்.
  • புகைப்பழக்கம் முகச்சுருக்கம் தரும்; குடிப்பழக்கம் வேண்டவே வேண்டாம்.
  • அதிக நேரம் கண்விழிக்க வேண்டாம். நல்ல ஓய்வும் உறக்கமும் தேவை.
  • தலையில் அழுக்கில்லாமல் இருந்தாலே முடி உதிர்வது நிற்கும்.
  • மசாஜ் செய்து கொள்ளுங்கள் தசைகள் பொலிவாகும்.
  • மூன்று மாதம் ஒருமுறை சரும மருத்துவரை ஆலோசியுங்கள்.
  • முகத்தைக் காய விட வேண்டாம்.
  • மீசை, தாடிகளை அழகாக வைத்துக்கொள்ளுங்கள்.
  • சோப்பு,ஷாம்பு, கிரீம்களில் கவனம் செலுத்துங்கள், இயற்கை மூலிகையை, தேர்வு செய்யுங்கள்.
  • அடிக்கடி வாய்விட்டுச் சிரியுங்கள்.
இவற்றையெல்லாம் செய்தாலே போதும், நீங்களும் ‘அரவிந்த் சுவாமி’ ஆகிவிடலாம்.., ஆண்களே..!!

Leave a Reply

%d bloggers like this: