ungal-kulanthaiyin-nagangalai-vetta-pathukapana-3-valikal

கர்ப்ப காலம் பல பொறுப்புகளை உங்களிடம் கொண்டு வருவதுடன், பொறுப்பை எடுத்துக்கொள்வதற்கான முக்கியத்துவத்தை உங்களை உணரவைக்கும். நீங்கள் உங்கள் சிறிய குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, இது கடினமாகிவிடும். நீங்கள் எல்லாவற்றையும் உங்கள் குழந்தைக்காக மாற்ற வேண்டும் – உங்கள் அட்டவணையில் இருந்து உங்கள் வாழ்க்கை முறையையும் கூட. 

நீங்கள் முதலில் உங்கள் குழந்தையின் தேவைகளை பற்றி யோசிக்க வேண்டும். மேலும் நீங்களாகவே புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்து விடுவீர்கள். நீங்கள் உங்கள் குழந்தைக்கு சுகாதாரமான முறையில் உணவு கொடுப்பதிலிருந்து உங்கள் குழந்தையை ஆரோக்யமாக வைத்து கொள்வது வரை அனைத்தையும் ஒன்று அல்லது பல வழிகளில் கற்றுக்கொள்வீர்கள்.

உங்கள் குழந்தையின் நகங்களை பராமரிப்பது ஒரு கடினமான பணியாகும், மேலும் பல தாய்மார்களிடம் குழந்தைகளின் நகங்களை சரியான வழிகளில் நீக்குவது அல்லது பராமரிப்பது பற்றிய விழிப்புணர்வு இருப்பதில்லை. கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளை ஒப்பிடும்போது பிறந்த குழந்தைகள், மிகவும் மென்மையான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நகங்களைக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அவற்றை பராமரிப்பதற்கு நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

குழந்தைகளின் நகங்களை அடிக்கடி வெட்டிவிடுவது அவசியம். தசைக் கட்டுப்பாடு அறியாமலேயே, அவர்களின் உடலை அசைக்கும் போதோ, கை அல்லது கால்களை அசைக்கும் போதோ, அவர்களின் மென்மையான தோலில் காயங்கள் ஏற்பட கூடும். இப்போது நீங்கள் அவர்களின் நகங்களை பராமரிப்பது எவ்வளவு எளிது தெரியுமா? அது எப்படி என்று கேட்டால், அதற்கான 3 வழிகளை பார்ப்போம்.

1 நகம் அரவும் அரம் ( nail file )

உங்கள் குழந்தையின் நகத்தை குறைப்பதற்கான சிறந்த வழி, அவர்களின் நகங்களை அரவுதல். அதெற்கென உருவாக்கப்பட்ட எமிரேட் போர்டு அல்லது நகத்தை குறைப்பதற்கான சாதனங்களை பயன்படுத்தவும். ஆனால் இந்த முறையில் அதிக நேரம் எடுக்கும், ஆனால் இறுதியில் நீங்கள் அதை செய்து முடித்திடலாம். உங்கள் குழந்தையின் நகங்களும் குறைக்கப்பட்டுவிடும். ஆனால் நீங்கள் இதை கையாளாலும் போது, உங்கள் குழந்தையின் கை தோள்களை காயப்படுத்திவிடாத படி மிக கவனத்துடன் கையாள வேண்டும். அப்படி காயத்தை ஏற்படுத்தினால் அது சிக்கலை ஏற்படுத்தும்.

2 குழந்தைகளுக்கான நகவெட்டிகள்

குழந்தைகளின் நகங்களை குறைப்பதற்கெனவே பிரத்யேகமாகவே நகவெட்டிகள் சிறப்பாக வடிவமைக்கப்படுகின்றன. நமக்கு இவை எளிதில் கடைகளில் கிடைத்து விடும். இது ஒரு குழந்தையின் நகங்களை களைவதற்கென வடிவமைக்கப்படுவது, அதுவும் மிகவும் வசதியானதாகவும் இருக்கும். ஆனால் எப்படி உபயோகிப்பது என்றால், நீங்கள் அவர்களின் நகங்களை குறைக்க துவங்கும் போது, விரல் நுனியை நகங்களிருந்து பின்னுக்கு தள்ளி, அவர்களின் நகங்களை வெட்ட வேண்டும். இது அவர்களின் விரலின் சதை பகுதி வெட்டப்படுவதிலிருந்து பாதுகாக்கும். கால் விரல் நகங்களை அகற்றுவதற்கு, உங்கள் குழந்தையின் கால்களை உறுதியுடன் பிடித்து கொள்ள வேண்டும்.

3 அவர்கள் தூங்கும் போது குறைக்கவும்

உங்கள் குழந்தைகள் விழித்துக்கொண்டிருக்கும் போது உங்கள் குழந்தையின் நகங்களைக் குறைக்க மிகவும் பயமாக இருந்தால், அவர்கள் தூங்கும் வரை காத்திருங்கள். இது அவர்கள் நகங்களை குறைக்கும் எளிமையான வழி. உங்களுக்கு போதுமான அதிர்ஷ்டம் இருந்தால், அவர்கள் எழுந்திருக்காமல் உங்களால் நகங்களை வெட்ட முடியும். இதை செய்ய போதுமான அளவு ஒளி தேவைப்படும், எனவே போதுமான ஒளி உள்ளதா என உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

சில பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நகங்களை கொஞ்சம் கொஞ்சமாக பற்களால் கடித்தெடுக்க முயற்சிப்பார்கள். இது பரிந்துரைக்கப்படுவதில்லை, நீங்கள் அவ்வாறு செய்யும்போது, அது கிருமிகளை அறிமுகப்படுத்தலாம் மற்றும் உங்கள் குழந்தையின் நகங்கள் கூர்மையாகவும், கடினமானதாகவும் மாறும். இது உங்கள் குழந்தையின் தோலில் சிராய்ப்புகளை ஏற்படுத்தலாம். எனவே, சரியான வழிமுறைகளை பின்பற்றி உங்கள் குழந்தையின் நகங்களை பாதுகாப்பான முறையில் பராமரியுங்கள்.

Leave a Reply

%d bloggers like this: