indiya-kalacharathil-kulanthaikaluku-kathu-kuthuvathu-en

என்னதான் நாகரிகம் எனும் பெயரில், காது மற்றும் கண்ட இடங்களில் குத்தி கொண்டாலும், இந்திய கலாசாரத்தில் குழந்தைக்கு காது குத்துதல் என்பது, பல மில்லியன் வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒன்று. இதற்கு அவர்களிடம் பல காரணங்கள் உள்ளன. இந்து சமய பாரம்பரியத்தில் கர்ணவ்தா என்று அழைக்கப்படும் இது, குழந்தைக்கு 3 அல்லது 5 வயதில் காது குத்தும்  சடங்கை செய்வதாகும். 

குழந்தைக்கு காது குத்துவதன் மூலம் குழந்தையின் ஆன்மா கடவுளை நோக்கி மத்தியஸ்தம் செய்வதாக நம்புகிறார்கள். இந்து மதத்தில் மந்திரங்கள் அல்லது புனிதமான ஒலிகள் போன்றவை குருக்கள் அல்லது பெற்றோரால் முழக்கமிட காது குத்தும் போது, அவர்கள் எதிலும் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்படுவதாக நம்புகிறார்கள். கர்ணவ்தா வேதங்களில் குறிப்பிடப்படுவதன் மூலம், இது சட்டபூர்வமான ஒரு சடங்காகவும் திகழ்கிறது. எனவே, இரு பாலினர்களுக்கும் இந்து கலாச்சாரத்தில் ஒரு கட்டாய நடைமுறையாகக் கருதப்படுகிறது. இதில் இருக்கும் ஒரு வித்தியாசம் என்னவென்றால், ஆண் குழந்தைகளுக்கு இடது காதும், பெண் குழந்தைகளுக்கு வலது காதும் முதலில் குத்தப்படுகிறது.

பிராமணர்களின் கூற்றுப்படி, கர்ணவ்தா ஒரு மனிதர் வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டிய முக்கிய சடங்குகளில் ஒன்றாகும். ஆனால் சில சமுதாயத்தினர் இதை கொண்டக்கூடிய விழா நிகழ்ச்சியாக கருதுகிறார்கள், புனித நூல் உபநயத்திற்கு பிறகு. இந்த விழா குழந்தை பிறந்த ஒரு சில நாட்களில் (வேதங்களில் குறிப்பிடப்பட்டு உள்ள படி) செய்யப்படுகிறது, ஆனால் அது சுத்தம் மற்றும் சுகாதார காரணங்களுக்காக தவிர்க்க மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. குறைந்தபட்சம் குழந்தையின் 3 மாத காலம் வரை அதை செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள், இது குழந்தைகளுக்கு முதல் DTaP தடுப்பூசி போட்டிருப்பதால், இந்த சடங்கு அவர்களின் நோய் எதிப்பு மண்டலத்தை பாதிக்கக் கூடும்.

விஞ்ஞான ரீதியாக, காது குத்திக்கொள்வது என்பது பல நன்மைகளை தரவல்லது என்று நிருபிக்கப்பட்டுள்ளது. காது குத்தி கொள்வது, மூளையுடன் சிறந்த இணைப்பை ஏற்படுத்துவதால், வேகமாக மூளை வளர்ச்சியை அல்லது சிறந்த கண்பார்வை, மனித உணர்வு கொண்ட திறன்கள் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. எனவே, மருத்துவர்களும் காது குத்துவதை பரிந்துரைக்கின்றனர்.

சிலர் நகைக்கடைகளுக்கு செல்வர்கள், மற்றவர்கள் அதை வீட்டிலேயே செய்துவிடுவார்கள். எந்தவழியில் செய்தலும், காது குத்த பயன்படுத்தும் ஊசி புதியதா அல்லது சுத்தமானது என்பதை கவனிக்க வேண்டும். முன்பு புதிதாக காதுகளில் துளையிட்ட துளைகளில், வேப்பிலை கிளைகளை செருகுவார்கள். இது ஒரு கிருமி நாசினியாக வேலை செய்யும். ஆனால் இப்போது மக்கள் பாரம்பரிய வழிகளில் செல்லாமல், குழந்தைக்கு அழகு சேர்க்க வடிவமைப்பாளர்கள் வடிவமைத்த நகைகளை அணிவிக்கின்றனர். சில குழந்தைகளுக்கு இது காயம் அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே இதை கவனத்துடன் கையாள்வது அவசியம். குழந்தைக்கு அழகு சேர்க்கும் போது, ஆரோக்கியம் கெடாமலும் பார்த்து கொள்வது அவசியம். 

Leave a Reply

%d bloggers like this: