karpa-kalathin-muthal-3-mathangalukana-5-vunavukalum-thayaripu-muraikalum

நீங்கள் கர்ப்பமாக இருந்தால், உங்கள் உணவில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய சரியான நேரம் இது தான். இது எப்போதும் ஆரோக்கியமாக இருக்க நல்லது. உங்கள் கர்ப்பம் முழுவதும், உங்கள் ஆரோக்கியம் மற்றும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் என இரண்டையும் பராமரிக்க உணவு மாற்றம் மிகவும் முக்கியம். நீங்கள் உண்ணும் உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் கொள்ளுங்கள். எப்படி இருந்தாலும் நீங்கள் உங்கள் உணவில் மாற்றம் கொள்ள வேண்டியது அவசியம். இதைக் கருத்தில் கொண்டு, உங்களுக்காக 5 உணவுகள் கொடுக்கப்பட்டு உள்ளன, இவை சுவையுடன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த கூடியவை.  

1. உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் சூப்..

1 பிரஷர் குக்கரில் வெண்ணையை சூடுபடுத்தவும். அதில் நறுக்கிய ஒரு வெங்காயத்தை ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.

2 இதில் துண்டாக்கப்பட்ட 2 உருளைக்கிழங்குகளை சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கவும். அதில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 3 விசில் வரும் வரை நன்கு வேகவிடவும். அவை ஆறியது, அந்த கலவையை கலவை இயந்திரம் (mixci) -ல் இட்டு நன்கு கூழ் போல் அரைக்கவும்.

3 அந்த கலவையை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி, உப்பு, மிளகு மற்றும் அரை கப் தண்ணீர் சேர்க்கவும். பின் இரண்டு அல்லது மூன்று நிமிடம் அதை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். பின் துருவிய கேரட்டுகளைக் கொண்டு அலங்கரித்தால், உங்கள் சூப் தயார்.

2 முளைக்கட்டிய பயிர், வெங்காயத்தாள் மற்றும் தக்காளி சாலட்

1 முளைக்கட்டிய பயிர்களை தண்ணீரில் அலசி விட்டு, சிறிது நீரில் வேக வைக்கவும். பின் வெங்காயத்தாள் மற்றும் 2 தக்காளியை இதில் சேர்த்து நன்கு கலக்கவும்.

2 இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, உப்பு, கருப்பு உப்பு மற்றும் மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்தால் சாலட் ரெடி.

3 பாசி பயர் தோசை

1 குறைந்தது 3 மணி நேரத்திற்கு, பாசி பயறு மற்றும் அரிசியை ஊறவிட்டு, அலசி சிறிது நீர் சேர்த்து அரைக்கவும். இந்த மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

2 பின் எப்போதும் போல் தோசை வார்த்து, சட்டினியுடன் சேர்த்து உண்ணவும்.

4 ப்ரோக்கோலி சூப்

1 ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் வெட்டிய 2 வெங்காயம் சேர்க்கவும். அதில் துண்டாக்கப்பட்ட ஒரு கப் ப்ரோக்கோலி சேர்த்து, மூடி நன்கு வேகவிடவும். அவை ஆறியது, அந்த கலவையை கலவை இயந்திரம் (mixci) -ல் இட்டு நன்கு கூழ் போல் அரைக்கவும்.

2 பின் அந்த கலவையை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி, உப்பு, மிளகு தூள் மற்றும் பால் சேர்க்கவும். பின் நான்கு அல்லது ஐந்து நிமிடம் அதை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். இதோ சூப் ரெடி.

5 வேக வைத்த முட்டை வறுவல்

1 முட்டையை நன்கு வேக வைத்து, அதை இரு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

2 வரமிளகாய், பொட்டு கடலை, இஞ்சி, பூண்டு, மிளகு மற்றும் உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும். இதை முட்டையின் மீது தடவி, சிறிது நேரம் காய விடவும்.

3 பின் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் முட்டையை நன்கு இரு புறமும் வேக விட்டு எடுக்கவும். சுவையான முட்டை வறுவல் தயார்.

ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு, உங்கள் உடல் நலனையும், குழந்தையின் உடல் நலனையும் மேம்படுத்துங்கள்.

Leave a Reply

%d bloggers like this: