kulanthaikalin-varanta-sarumathirkana-5-veetu-vaithiya-muraikal

குழந்தைகளுக்கு வறண்ட சருமம் இருந்தால், அது அசாதாரணமானது அல்ல. அவர்களது சருமம் மிகவும் மென்மையானது. எனவே அவர்கள் தோல் மிக எளிதில் வரண்டு விடும் அல்லது சில அலர்ஜிகள் கூட ஏற்படலாம். குறிப்பாக குளிர்காலத்தில் அல்லது அது வெளியே குறைந்த ஈரப்பதம் நிறைத்த காற்று போன்றவற்றால் குழந்தையின் சருமம் பாதிக்கப்படும். மேலும் இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் இவற்றை சரி செய்ய பல மருத்துவ தயாரிப்புகளை தேடி அலுத்திருப்போம். அதில் சில தயாரிப்புகள் உங்களுக்கு பலன் கொடுத்திருக்கலாம், சில பலன் கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் நாங்கள் இப்போது உங்களுக்கு 5 வீட்டு வைத்திய முறைகளை பட்டியலிட்டிருக்கிறோம். அவைகளில் கவனம் செலுத்துங்கள், உங்கள் அழகான குழந்தைக்கு அவை சிறந்த நிவாரணமளிக்கின்றன..!  

1 குளியல் நேரத்தை குறைப்பது

குழந்தைகளது குளியல் நேரம் எப்போதும் குறைவாக இருக்க வேண்டும். குழந்தைகளின் தோல் பெரியவர்களை காட்டிலும் மிகவும் மென்மையாக இருப்பதால், அவர்கள் உடலை சுத்தம் செய்ய அதிக நேரம் நீரில் வைக்க கூடாது. குழந்தைகளை குளிக்க வைக்க 10 நிமிடங்கள் போதுமானது. அவர்களது சருமம் வறட்சி அடைய, தண்ணீரும் ஒரு முக்கிய காரணி. எப்படி என்றால், குழந்தையை குளிக்க வைக்கும் போது, உடலில் இயற்கையாக உருவாகும் எண்ணெய் பசையை இது உறிஞ்சிவிடுகிறது. இதனால் சருமம் எளிதில் வறண்டு விடும். எனவே அவர்களுக்கு 10 நிமிட குளியலே போதுமானதாக இருக்கும். இதுவே குழந்தைகளின் சருமத்தில் ஏற்படும் வறட்சியை குறைக்கும்.

2 நீரின் அளவு

குழந்தையின் உடலில் போதுமான அளவு நீர்சத்து உள்ளதா என்பதை பார்த்து கொள்ளவும். தண்ணீர் என்பது நம் அனைவரின் உடலுக்கும் முக்கியமான ஒன்று என்பது நாம் அறிந்ததே. இது குழந்தையின் உடலில் சரும வறட்சியை நீக்குவதோடு, உடலில் பல்வேறு இயக்கங்களுக்கு முக்கிய பொருளாக உள்ளது. இது உங்கள் குழந்தையின் உடலை எல்லா விதத்திலும் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

3 குளியலுக்கு பின் உடலில் ஈரப்பதத்தை தக்க வைப்பது

உலர்ந்த சருமம் மற்றும் எரிச்சலைத் தவிர்க்க, எல்லா நேரங்களிலும் அவரது உடலை தூய்மையாகவும், ஈரமாகவும் வைத்திருப்பது மிகவும் முக்கியம். குழந்தையை குளிக்க வைத்த பின், அவர்களின் உடலில் எண்ணையை கொண்டு மென்மையாக மசாஜ் செய்வதன் மூலமாகவும் அவர்களின் உடலை ஈரப்பதத்துடன் பாதுகாக்க முடியும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் குழந்தையின் சருமம் வறட்சி அடைவதை தவிர்க்கலாம்.

4 சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாப்பு

குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லும் போது, அவர்களது சருமம் தலையிலிருந்து பாதம் வரை அனைத்தும் பாதுகாப்பாக மூடி வைக்க பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். அதும் அதிக வெயில் நேரத்தில் அழைத்து செல்வதை முடிந்த வரை தவிர்க்கவும். சூரியனிலிருந்து வெளிவரும் மோசமான கதிர்களால் உங்கள் குழந்தையின் சருமம் மிகவும் பாதிப்படையும். இது உங்கள் குழந்தைக்கு வறண்ட சருமம் மற்றும் பல அலர்ஜிகளை தோற்றுவிக்கலாம்.

5 மிதமான சுத்தப்படுத்தும் பொருட்களை உபயோகிக்கவும்

குழந்தைகளுக்கு மிகவும் அதிக இரசாயனங்கள் கலந்த சோப்பு மற்றும் ஷாம்புக்களை தவிர்க்கவும். அவை குழந்தைகளின் மென்மையான சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அவற்றை வாங்கும் முன் பலமுறை அவற்றை பற்றி தெரிந்து கொண்டு பின் வாங்கவும். முடிந்த வரை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தவும். இரசாயனங்கள் உங்கள் குழந்தையின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே அவற்றை தவிர்க்கவும்.

குழந்தைகளின் பட்டு போன்ற மேனியை, கண்டதை பயன்படுத்தி கெடுக்காமல், இயற்கையான முறையில் சரி செய்ய முயற்சிக்கலாமே!

Leave a Reply

%d bloggers like this: