Arokiyamum-alagum-tharum-kunkumapoo

குங்குமப்பூ என்பது ஒரு பூ வகையை சேர்ந்து. குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களே ‘குங்குமப்பூ’ என்று அழைக்கப்படுகிறது. இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமண முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும். குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும். உலகிலேயே மிகவும் விலைமதிப்பு மிக்க மருத்துவ குணம் நிறைந்த பொருள் குங்குமப்பூ.  

இதில் மருத்துவ குணங்கள் காணப்படுவதற்கு காரணம், இதில் உள்ள தையமின் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகும். கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டால் பிறக்க போகும் குழந்தை அழகாகவும், நிறமாகவும் பிறக்கும் என்று நம்பப்படுகின்றது. ஆனால் அது உண்மையல்ல. குழந்தையின் நிறமானது அதன் பெற்றோர்களின் ஜீனை பொறுத்து மட்டுமே அமையும். இது குழந்தைக்கு நிறத்தை கொடுக்காவிட்டாலும் பல பயன் தரக்கூடிய பண்புகளை உள்ளடக்கியுள்ளது. மேலும் இது அழகிய சருமத்தை பெறுவதற்காக பெரும்பாலும் பயன்படுத்தபடுகின்றது.

கண் பார்வை பிரச்சனைகள்

குங்குமப்பூ கண் பார்வைக்கு மிகவும் நல்லது. கர்ப்ப காலத்தில் எடுத்து கொள்ளப்படும் குங்குமப்பூ, கண் புரை போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இது குழந்தைக்கும் பல நன்மைகளை தரவல்லது.

செரிமானம்

கர்ப்பிணி பெண்களுக்கு இரத்தத்தினை உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீராக எடுத்து செல்ல இது உதவுவதால், செரிமானமும் பசியும் ஏற்படும். மேலும் இது இரைப்பை குடலில் ஒரு சவ்வு போல் ஏற்படுத்தி அசிடிட்டியில் இருந்து பாதுகாக்கின்றது.

ஈரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள்

இது ஈரல், சிறுநீரகம் மற்றும் நீர்ப்பை பிரச்சனைகளுக்கு மிகவும் பயன்தர கூடிய ஒன்றாகும். இது இரத்தத்தை சுத்தபடுத்த பயன்படுகின்றது.

வயிற்றுவலி

கர்ப்பிணி பெண்களுக்கு தாய்ப்பாலை சுரக்க வைக்கவும், வயிற்றுவலி பிரச்சனைகளிலிருந்து தீர்வு அளிக்கவும் இது உதவுகிறது. இதில் இருக்கும் வலி குறைப்பு தன்மையானது வயிற்று வலியை குறைப்பதற்கு பயன்படுகின்றது

குழந்தையின் அசைவு

கர்ப்பிணி பெண்கள் 5 மாதத்திற்கு பின் குழந்தையின் அசைவுகளை உணர முடியும். குங்குமப்பூவை 5 மாதங்களுக்கு பின், பால் அல்லது உணவுடன் எடுத்து கொள்ளும் போது எளிதாக குழந்தையின் அசைவை உணர முடியும். இது உடல் சூட்டினை அதிகரிக்கும் தன்மையை கொண்டதால், அதிக அளவில் எடுத்துக் கொள்ள கூடாது என்று பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவல்லது.

இரத்த கொதிப்பு

பெண்களின் ரத்த கொதிப்பு மற்றும் மனநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த 3 முதல் 4 சிட்டிகை குங்குமப்பூ எடுத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. பல நோய்களை குணப்படுத்தும் தன்மையை கொண்ட, இது தசை தளர்வடைய உதவுகிறது. அதிக அளவில் பயன்படுத்தும் போது கருப்பை ஊக்கியாகவும் செயல்படுகின்றது.

பசியை ஏற்படுத்தும்

குங்குமப்பூ 1 பங்கும், தண்ணீர் 80 பங்கும் ஊற வைத்து வடிகட்டி வேளைக்கு 50 – 100 மி.லி. அளவு கொடுக்க பலவிதநோய்கள் தீரும். 10 கிராம் குங்குமப்பூவை சுமார் 15 பலம் நீரில் சேர்த்துக் குடிநீர் செய்து கொடுத்தால் பசி அதிகம் உண்டாகும்.

இதயத்தை பலப்படுத்தும்

இதயம் மற்றும் மூளைக்கு சக்தி தர குங்குமப்பூ அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆண்மைக் குறைவைப் போக்க மற்ற மருந்துகளில் கலந்து பயன்படுத்துவார்கள். இதயம், மூளை மற்றும் கல்லீரலுக்குச் சக்தி தரும். மலச்சிக்கலை உண்டாக்கும் கட்டி, வீக்கங்களைக் கரைக்கும்.

கர்ப்பகாலத்தில் பயன்படுகிறது

பிரசவ வலி வந்தும், குழந்தை வெளியில் வராமல் இருக்குபோது, 4 கிராம் குங்குமப் பூவை பாலில் கரைத்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப் பூவை சேர்த்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். குழந்தை பிறந்ததும், 3 கிராம் குங்குமப் பூவை விழுதாக அரைத்து சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் அழுக்குகள் நீங்கும்.

பல நோய்களுக்கு அரிய மருந்து

குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும்.

குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும். அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்.

அழகை அதிகரிக்க பயன்படுகிறது

குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொண்டு, அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் கருமை நிறம் குறைய துவங்கும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து கொள்ளவும். இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.

Leave a Reply

%d bloggers like this: