karppaththal-erpatakkutiya-11-pirachchanaikal

கர்ப்பத்தின் போதும், பிரசவத்திற்குப் பின்னரும் பெண்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்வர். அவற்றில் நிறைய இக்கட்டான சூழ்நிலைகளும் இடம் பெறும்; அப்படி பெண்கள் சந்திக்கும், இக்கட்டான 11 பிரச்சனைகள் என்னென்ன என்று இப்பதிப்பில் காணலாம்…

1. வாயுத்தொல்லை

பெண்கள் பிரவத்தால் சந்திக்கும் பெரும் பிரச்சனை வாயுத்தொல்லை. இப்பிரச்சனையால், பெண்கள் பல சமயங்களில் தர்ம சங்கடமான நிலைக்கு ஆளாகிறார்கள். இதைத் தடுக்க வறுத்த மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
 
2. வியர்வை
 
கர்ப்ப காலத்தில், பெண்களுக்கு வியர்வை சுரப்பு அதிகமாகக் காணப்படும். இதனால் உடலில் துர்நாற்றம் மற்றும் அரிப்புகளும் தடுப்புகளும் ஏற்பட வாய்ப்பு அதிகம். ஆதலால், வியர்வையைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கையாண்டு இச்சோதனையை சாதனையாக்குங்கள்.
 
3. சிறுநீர்
 
எங்கு சென்றாலும் எப்பொழுது பார்த்தாலும், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற ஒரு உணர்வோ, சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியமோ ஏற்பட்டு, கர்ப்ப காலத்தில் பெண்களைக் கஷ்டப்படுத்தும். சில பெண்களுக்கு, சாதாரணமாக சிரிக்கும் போதோ, தும்மல், விக்கல், கொட்டாவி என இது போன்ற செயல்கள் நிகழும் போதோ சிறுநீர் கசிவு ஏற்படுகிறது.
 
4. உமிழ்நீர் சுரப்பு
 
கர்ப்ப காலத்தில், உமிழ்நீர் சுரப்பும் அதை உமிழ வேண்டும் என்ற எண்ணமும், மேலோங்கி காணப்படும். இது காலம் செல்லச் செல்ல சரியாகிவிடும்.
 
5. முடி வளர்தல்
 
கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில், உடலெங்கும் சற்று அதிகமாக முடி வளரும். அதை அழகு நிலையங்களுக்கு சென்று சரி செய்து கொள்ளலாம். சில சமயங்களில், கூந்தல் குறைவாக உள்ள பெண்களுக்கு, அதிக முடி வளர்ந்து ஆனந்தத்தை அளிக்கவும் செய்யும்.
 
6. வீக்கங்கள்..!
 
சில பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் வீக்கங்கள் ஏற்படுவது இயல்பே, எனினும் சில சமயங்களில் இவை வலியைக் கொடுக்கக் கூடியதாய் உள்ளன. சத்தான உணவுகள் மற்றும் அதிக நீர் அருந்துவதன் மூலம் இதைத் தடுக்கலாம். இவற்றைக் கட்டுப்படுத்த மருத்துவரின் ஆலோசனையுடன் மருந்து மாத்திரைகளை மேற்கொள்வது நல்லது.
 
7. பருக்கள்…
 
கர்ப்ப காலத்தில், பெண்களுக்கு பருக்கள் அதிகமாக தோன்றுகிறது; இதனால், முக அழகு கெட்டுவிடுகிறது. இதைத் தடுக்க அடிக்கடி முகத்தைக் கழுவுதல் வேண்டும்.
 
8. நிறமிழப்பு
 
கர்ப்பிணிகளுக்கு, கர்ப்ப காலத்தில் நிறமிழப்பு, முகத்திலும், வயிற்றுப் பகுதிகளிலும் ஏற்படுகிறது; இது அதிக ஈஸ்ட்ரோஜன் சுரப்பால் நிகழ்கிறது. இது தற்காலிகமானதே! பிரசவத்திற்குப் பின், இழந்த நிறம் மீண்டும் வந்துவிடும்.
 
9. மலச்சிக்கல்
 
வாயுத்தொல்லையுடன் மலச்சிக்கலும் சேர்ந்து, கர்ப்பிணிகளை படாதபாடுபடுத்துகிறது. இதைத் தடுக்க சத்தான உணவுகள் மற்றும் எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது.
 
10. பால் கசிவு
 
பால் கசிவு, சில பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்பே கூட நிகழலாம். இதனால், பெண்கள் வெளியிடங்களுக்கு செல்கையில் அவதியுற நேரிடுகிறது.
 
11. உடலுறவு..!
 
கர்ப்ப காலத்தில், உடலுறவு கொள்ள முடியாத நிலையில், உங்களை சில எண்ணங்கள் உங்களை இம்சை செய்யலாம். அத்தகு சமயங்களில் உங்கள் கணவரிடம் உரையாடி, அமைதியுங்கள்.

 

Leave a Reply

%d bloggers like this: