Kulanthaiyai-puthiya-vunavai-vunna-vaikka-6-valikal

உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் தவிர மற்ற உணவை இப்போது தான் கொடுக்க போகிறீர்களா? அதை எப்படி கொடுப்பது என குழப்பமடைகிறீர்களா? எந்த நேரத்தில் குழந்தைக்கு உணவு ஊட்ட வேண்டும், எப்போது நிறுத்த வேண்டும் என்று பலவற்றை உங்கள் நேரம் மற்றும் ஆற்றலை செலவு செய்து தேட முயற்சித்திருப்பீர்கள், ஆனால் கடைசியில் அவை உங்களை குழப்பமடைய செய்திருக்கும்.

உங்கள் குழந்தைக்கு உணவு கொடுப்பதற்கான வழிமுறைகளை மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்ய வேண்டும். அவர்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத உணவுகள் மாற்றி விடும். உங்கள் குழந்தைக்கு புதிய உணவை கொடுக்கும் போது கவனத்துடன் இருக்க வேண்டும். இப்போது அவர்களை எப்படி சாப்பிட செய்யலாம் என்பதற்கான 6 வழிகளை பார்க்கலாம். 

1 கவனச்சிதறல்கள் இருக்க கூடாது

உங்கள் குழந்தைக்கு புதிய உணவை நீங்கள் கொடுக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், அவர்களின் ஆர்வத்தை அல்லது கவனத்தை திசை திருப்பும்படி ஏதும் இல்லாத படி பார்த்து கொள்ள வேண்டும். உதாரணமாக, உங்கள் குழந்தைக்கு அவித்த உருளைக்கிழங்கு பிடிக்கும் என்றால், அவர்களுக்கு கொடுக்கும் போது தொலைக்காட்சி அல்லது அவர்களை திசை திருப்பும் சாதனங்களை நிறுத்தவும். இது அவர்கள் கவனம் உணவின் மீது இருக்கும் படி பார்த்து கொள்ளும். இது சரியாக சில நாட்கள் ஆகலாம், ஆனால் இது கண்டிப்பாக உங்களுக்கு உதவும். எப்போது உங்கள் குழந்தைக்கு பசி எடுக்கிறதோ, அதுவே குழந்தைக்கு உணவு கொடுக்க சரியான நேரம்.

2 கொஞ்சம் விளையாட்டு

இது வெற்றி பெற்ற ஒரு பிரபலமான முறையும் கூட. உங்கள் குழந்தைக்கு மிகவும் பிடித்த வடிவங்கள், பொம்மைகள், கார்ட்டூன்கள் அல்லது ஏதாவது மிருகங்கள் என நிறைய இருக்கும். அவற்றை போல் உருவங்கள் கொண்ட அசச்சுகள் கண்டிப்பாக கடைகளில் கிடைக்கும். அவற்றை வாங்கி அந்த வடிவங்களில் உணவு பொருட்களை கொடுக்கும் போது அவர்கள் ஆச்சர்யத்துடனும், ஆர்வத்துடனும் உணவை உண்ண துவங்குவார்கள். இது போல பலவற்றை வித்தியாசமாக முயற்சியுங்கள்.

3 பொம்மைகளை மறைத்து வைத்தால்

இது கொஞ்சம் புத்திசாலித்தனமான ஒன்று. உங்கள் குழந்தைகளின் பொம்மைகளை மறைத்து வையுங்கள், அவர்கள் அதை ஆர்வமுடன் தேடும் வரை. இது கொஞ்சம் கஷ்டப்படுத்துவது தான், ஆனால் ஆரோக்கியத்தை விட இது பெரிதல்ல சரிதானே. அவர்கள் தேட துவங்கியதும், நீங்கள் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவை அவர்களின் பொம்மைகளுக்கு முன் வையுங்கள். இப்போது மெதுவாக குழந்தைக்கு உணவூட்ட துவங்குங்கள். அவர்கள் மறுத்தாலோ அல்லது குறும்புத்தனம் செய்தாலோ, அவர்கள் பொம்மையை காண்பித்து சாப்பிட்டால் மட்டுமே கொடுக்க முடியும் என்று சொல்லுங்கள். இப்போது அவர்கள் சாப்பிட்டு முடிப்பார்கள். ஆனால் உங்கள் குழந்தைக்கு பிடிக்கவில்லை என்றால் திணிக்க முயலாதீர்கள்.

4 பல உணவுகள்

இது கொஞ்சம் கடினமான மற்றும் வேடிக்கையான ஒன்று. ஒன்றாக 2-3 உணவுகளை (எளிய ஒன்றை – தக்காளி, அரிசி கூழ் மற்றும் தயிர் சாதம்) தயாரித்து வேறு வேறு வண்ணங்களில், குழந்தையின் முன் பரிமாறவும். உங்கள் குழந்தை அதன் அருகில் அமர்ந்து, அவற்றை பார்க்கும் படி செய்யுங்கள். குழந்தை ஒவ்வொன்றிலும் அந்த சிறிய விரல்களை நனைத்து, அதன் சுவையை அறிந்து கொள்ளட்டும் (உணவை மிகவும் சூடாக இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்). அவர்களுக்கு என்ன பிடிக்கிறது என்பதை கண்டு பிடியுங்கள்.

5 ஆர்வத்திற்கு இடம் கொடுங்கள்

இது நீங்களும் உங்கள் கணவரும் சேர்ந்து செய்யக்கூடிய ஒன்று. உங்கள் குழந்தையின் முன் உணவுகளை வைத்து, உங்கள் கணவருக்கு ஊட்ட துவங்குங்கள். உங்கள் குழந்தை முன் உங்கள் கணவர், அந்த உணவின் சுவையை வெளிப்படுத்தும் விதமாக நடிக்க வேண்டும். இது போல் இரு முறை செய்து விட்டு, இப்போது குழந்தைக்கு ஊட்டுங்கள். இப்போது உங்கள் குழந்தை கண்டிப்பாக மிக ஆர்வத்துடன் உண்ண துவங்கும்.

6 தைரியமாக பரிசோதியுங்கள்

நீங்கள் பழ சாறுகள் அல்லது மற்றொரு திரவ வடிவ உணவோடு தொடங்குகிறீர்கள் என்றால், உங்கள் குழந்தையின் பால் பாட்டிலில் பல சாறுகள் நிரப்பவும், அதனுடன் அவர்கள் அதை எப்படி உணர்கிறார்கள் என்பதையும் கவனிக்க தவறாதீர்கள். பின் அதில் சிறிதளவு தாய்ப்பால் கலந்து குழந்தைக்கு கொடுங்கள். இப்படியே மாற்றி மாற்றி கொடுங்கள். உங்கள் குழந்தைக்கு பிடித்தமான ஒன்றை கண்டு பிடியுங்கள்.

உங்கள் குழந்தைக்கு குறிப்பிட்ட சில உணவுகளை அலர்ஜி ஏற்படுத்தினால், உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் அவற்றை மீண்டும் குழந்தைக்கு கொடுக்க கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு எல்லா உணவையும் சேர்த்து கொடுக்காமல், தனித்தனியாக கொடுத்து எது அலர்ஜியை ஏற்படுத்துகிறது என்பதை கண்டுபிடித்து, பின் மற்றவைகளை கலந்து கொடுங்கள்.

Leave a Reply

%d bloggers like this: