குழந்தையின்–xyz

குழந்தை வளர்ப்பில், ஒரு பெரும் பிரச்சனையாக இருப்பது, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு ஆகும்; இது சிறிய அளவில் இருந்தால் குணப்படுத்திவிடலாம். ஆனால்,பெரிய அளவில் இருப்பின் இது உயிரைக் கொல்லும் நோயாய் மாறும்.

இதைத் தடுக்கும் மற்றும் குணப்படுத்தும் முறைகளை, வழிகளைக் காண்போம்…!!

1. உடல் வறட்சி

குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுவதற்கு பெரும் காரணம் உடல் வறட்சி தான். அதிலும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தை என்றால், அடிக்கடி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இல்லை சற்று பெரிய குழந்தை என்றால், அவர்களது உடலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்கு, அவர்களுக்கு அவ்வப்போது ஜூஸ் போன்ற நீர்மத்தை கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளின் உடலில் வறட்சி ஏற்படாமல் தடுக்கலாம்.

2. உப்பு மற்றும் சர்க்கரை நீர் 

குழந்தைக்கு வயிற்றுப் போக்கு இருந்தால், அப்போது அவர்களது உடலில் இருந்து உப்பு மற்றும் நீர்ச்சத்தானது வெளியேறிவிடும். எனவே அவர்களது உடலில் இருந்து வெளியேறிய உப்புச்சத்தை மீண்டும் பெற வைப்பதற்கு, தண்ணீரில் உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடிக்க கொடுக்க வேண்டும். ஒரு வேளை அவர்கள் குடிக்க மறுத்தால், வற்புறுத்தியாவது கொடுக்க வேண்டும்.

3. உணவுகள்..

குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு இருந்தால், அப்போது அவர்களுக்கு செர்லாக் போன்ற உணவுப் பொருட்களை கொடுக்க கூடாது. அதற்கு பதிலாக வீட்டில் சமைத்த உணவுகளான சாதம், வாழைப்பழம், ஆப்பிள் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.

4. பற்கள் முளைத்தல்

சிலசமயங்களில் பற்கள் முளைப்பதால் ஏற்படும் வலியின் காரணமாகவும், வயிற்றுப் போக்கு ஏற்படலாம். எனவே இந்த நேரத்தில் அவர்களது ஈறுகளுக்கு மசாஜ் செய்யும் வகையில், அவர்கள் கடிப்பதற்கு ஏற்றவாறான பொம்மைகளை கொடுக்க வேண்டும். இல்லையெனில் விரல்களை வைத்துக் கூட, குழந்தைகளின் ஈறுகளை மசாஜ் செய்யலாம்.

5. கிரேப் வாட்டர்

குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கோ அல்லது வயிற்று வலியோ ஏற்பட்டால், உடனே கிரேப் வாட்டர் கொடுக்க வேண்டும் என்ற விஷயம் உலகத்திற்கே தெரிந்த ஒன்று தான். அதிலம கிரேப் வாட்டர் கொடுத்தால், குழந்தைகளின் வயிற்று வலி நீங்குவதோடு, வயிற்றில் இருக்கும் வாயுவும் வெளியேறிவிடும்.

இத்தகைய செயல்களையெல்லாம் குழந்தைகளுக்கு மூன்று நாட்கள் வயிற்றுப் போக்கு இருக்கும் போது செய்ய வேண்டும். இதனால் அவை குணமாகிவிடும். ஒருவேளை மூன்று நாட்களுக்கும் மேல், ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை நீராக மலமானது வெளியேறினால், உடனே குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

Leave a Reply

%d bloggers like this: