maathavilakin-pothu-erpadum-vayitru-valiyai-sari-seivatharku

மாதவிலக்கு என்பது பெண்ணை பிறந்த அனைவரும் சந்திக்க வேண்டிய ஒன்று. அது நம் உடலை சுத்தப்படுத்தும் ஒரு நிகழ்வாகும். மேலும் ஒவ்வொரு முறை மாதவிலக்கு ஏற்போடும் போதும், நம் கருப்பை குழந்தையை தாங்குவதற்காக பலப்படுத்தப்படுகிறது. மாதவிலக்கு நாட்களில் பெண்ணுக்கு ஓய்வு தேவை என்பதால் தான், நம் முன்னோர்கள் அவர்களை மாதவிலக்கின் போது தனிமையில் இருக்க செய்தார்கள். துரிதமான இன்றைய உலகில் இந்த வழக்கம் மாறிவிட்டது. ஆனால் அன்று முதல் இன்று வரை மாத விலக்கின் போது பெண்களுக்கு ஏற்படும் வலி, அவர்களை வெறுப்படைய செய்கிறது. இது எதனால் ஏற்படுகிறது, எப்படி சரி செய்யலாம் என்று பார்ப்போம். 

வயிற்று வலி ஏற்பட காரணம்

இளம் பெண்களில் பலருக்கு இருக்கும் வயிற்று வலி காலப்போக்கில் அல்லது திருமணத்திற்குப் பின்னர் குறைவடைகிறது. எனினும் ஒரு சிலருக்கு இந்த வயிற்று வலி தொடர்கிறது. சாதாரண வலி நிவாரணிகளுக்கு, சில வேளை குறைவடைந்தாலும் வலி மீண்டும் ஏற்படுகிறது. அடுத்த மாத விலக்கின் போது மறுபடியும் வயிற்று வலியால் இவர்கள் அவஸ்தைப்படுவது தொடர் கதையாகிறது. இவ்வாறு ஏற்படும் தீவிர வலி எண்டோமெற்றியாசிசினால் ஏற்படுகிறது. இதை லாப்பிரஸ்கோபி பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தலாம். கர்ப்பப்பையின் மையப்பகுதியின் சுவரின் உட்புறமாக இருக்கும் மேற்படை இழையம் எண்டோமெட்ரியம் ஆகும். சிலவேளைகளில் இந்த இழையம் கர்ப்ப பைக்கு வெளியேயும் காணப்படுவதையே எண்டோமெட்ரியோஸிஸ் என அழைக்கிறோம். இந்த இழையம் மாதவிலக்கின் போது சிதைவடைந்து உதிரமாக வெளியேறுகிறது. கருப்பைக்குள் இது ஏற்படும் போது, மாத விலக்காக வெளியே வருகிறது. ஆனால் வெளியே உள்ள இழையங்களில் இருந்து கசியும் உதிரம் வெளிவர முடியாதமையினாலேயே வயிற்று வலி ஏற்படுகிறது.

சரி செய்வதற்கான வழிகள்

எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப்பொருட்களை பயன்படுத்தி பாதுகாப்பாக பக்கவிளைவில்லாமால் சரி செய்யலாம். அந்தவகையில், மாதவிலக்கிற்கு முன்பு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கும் மருத்துவத்தை பார்க்கலாம். மாதவிலக்கிற்கு முன்பு பெண்களுக்கு பல்வேறு தொல்லைகள் ஏற்படுகிறது. வயிற்று வீக்கம், வாயுத்தொல்லை, மார்பக வலி, மயக்கம், கைகால்களில் சோர்வு உண்டாகிறது. மாதவிலக்கிற்கு முன்பு ஏற்படும் பிரச்னைகளுக்கு குங்குமப்பூ, கல்யாண முருங்கை, ஓமம், லவங்கம் ஆகியவை மருந்தாகிறது.

சோம்பு

அரை ஸ்பூன் சோம்பு, கால் ஸ்பூன் ஓமம், ஒருபிடி அளவுக்கு புதினா, சிறிது பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி மாதவிடாய் காலத்துக்கு 5 நாட்களுக்கு முன்பு ஒருவேளை குடித்துவர மாதவிலக்கு சமயத்தில் அடிவயிற்று வலி, இடுப்பு வலி, கைகால் குடைச்சல் வராமல் இருக்கும். சுரப்பிகளில் ஏற்படும் கோளாறால் மாதவிலக்கு பிரச்னை ஏற்படுகிறது. உடல்பயிற்சி மிகவும் முக்கியம். இதனால் ஹார்மோன்கள், மனோநிலையில் சமநிலை உண்டாகும். சோம்பு சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. வயிற்றில் காற்று சேர்வதை தடுக்கிறது. ஓமம் சிறுநீர் பெருக்கியாகவும், மாதவிலக்கை தூண்டக் கூடியதாகவும் விளங்குகிறது. புதினா வலி நிவாரணியாகிறது. காற்றை வெளித்தள்ளும் தன்மை உடையது.

கல்யாண முருங்கை

கல்யாண முருங்கை இலை சாறு 20 மில்லி எடுத்து, இதனுடன் சம அளவு மோர் சேர்த்து மாதவிலக்கிற்கு முன்பு 10 நாட்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் குடித்துவர மாதவிலக்கு சமயத்தில் மார்பக வலி இல்லாமல் போகும். மாதவிலக்கிற்கு முன்பு இடுப்பு வலி, அடிவயிற்று வலி, மனநிலையில் மாற்றம், சோர்வு, மார்பக வலி போன்றவை ஏற்படும். மார்பகங்களில் ஏற்படும் வலிக்கு கல்யாண முருங்கை மருந்தாகிறது. இதற்கு முள்முருங்கை என்ற பெயர் உண்டு. இதன் இலைகள் பூவரசு இலையை போன்று இருக்கும். இது மாதவிலக்கை தூண்டக்கூடியது. ஹார்மோன்கள் கோளாறை சரிசெய்யும். சத்தூட்டமான கல்யாண முருங்கை, வலி நிவாரணியாக விளங்குகிறது.

கழற்சிக்காய்

மாதவிலக்கு கோளாறுகளுக்கு கழற்சிக்காய் அற்புதமான மருந்தாக விளங்குகிறது. ஒரு கழற்சிகாயை உடைத்து அதனுள் இருக்கும் பருப்பை எடுத்து, 5 மிளகு சேர்த்து ஒருவேளை சாப்பிட்டுவர மாதவிலக்கு முறையாக இருக்கும்.

லவங்கம்

லவங்கத்தை நெய்விட்டு வறுத்து பொடி செய்து கால் ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து மாதவிலக்கிற்கு 10 நாட்களுக்கு முன்பு சாப்பிட்டுவர தலைவலி, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகள் இருக்காது. லவங்கம் முதுகுவலி, அடிவயிற்று வலியை குணப்படுத்தும்.

குங்குமப்பூ

தண்ணீர் 50 மில்லி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து, மாதவிலக்கிறகு 10 நாட்களுக்கு முன்பு குடித்துவர மாதவிலக்கு சமயத்தில் கைகால் வலி, தூக்கமின்மை ஏற்படாது. மனச்சோர்வு நீங்கும். குங்குமப்பூ அதிகளவில் எடுத்துக்கொண்டால் வயிற்றுபோக்கு ஏற்படும் என்பதால் குறைவாக சேர்க்கவும்.

பதப்படுத்த உணவுகளை உண்பதால் ,அதில் இருக்கும் உப்புசத்து சேர்வது, நேரம் தவறி சாப்பிடுவதால் வயிற்றில் காற்று சேர்வது போன்றவை மாதவிலக்கு பிரச்னைக்கு காரணமாகிறது. இதை தவிர்க்க உடற்பயிற்சி அவசியம். இதனால் வியர்வை தூண்டப்பட்டு உப்பு வெளியேறும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை சேர்த்துகொள்வதால் மாதவிலக்கு பிரச்னைகள் சரியாகும். இவற்றை செய்து வழிகளிலிருந்து உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள்.

Leave a Reply

%d bloggers like this: