etharku-ethu-sapppituvathu-nallathu

நம்மில் பலர் தமக்கு பிடித்த உணவுகளையோ அல்லது பழங்களையோ, நொறுக்குத் தீனிகளையோ அளவுக்கு அதிகமாக உண்டுவிட்டு செரிமானம் ஆகாமல் மிகவும் அவதிப்படுவர். மேலும் சிலர் மஞ்சள் காமாலை, நாள்பட்ட காய்ச்சல் இவற்றால் பெரிதும் துன்புறுவர், இவர்களின் பிரச்சனைகளுக்கும் இங்கே சில வழிகள் கூறப்பட்டுள்ளன. அவர்களின் பிரச்சனையைப் போக்க இதோ சில தீர்வுகள்…!

1. மாங்காய், மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால் அதற்குப் பால் ஒரு டம்ளர் குடிக்கவும்.

2. உணவில் அதிக நெய் சேர்த்தால் ஒரு கப் எலுமிச்சை சாறு குடிக்கலாம்.

3. பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம்.

4. கேக் நிறைய சாப்பிட்டால் அதற்கு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்கவும்.

5. கனமான உணவு வகைகள் அதிகம் சாப்பிட்டால் சுக்கு வெல்லம் சாப்பிடலாம் அல்லது சுக்கு காப்பி தயாரித்து குடிக்கலாம்.

6. அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டால் இனிப்புகளை சிறிது சாப்பிடலாம்.

7. தேங்காய், தேங்காயில் செய்த பதார்த்தங்களை அதிக அளவு சாப்பிட்டு விட்டால் அதற்கு கொஞ்சம் அரிசி எடுத்து மென்று சாப்பிடவும்.

8. குடல் புண் அதிகம் இருந்தால் அடிக்கடி வாழைப்பூ சமைத்துச் சாப்பிடலாம்.

9. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை முள்ளங்கி அருமருந்து.

10. காய்ச்சலுக்கு தண்ணீர் அதிகம் குடிக்க காய்ச்சலின் வேகம் குறையும்; கருந்துளசி நீர் காய்ச்சலைக் குறைக்கும்.

11. உடல் கொழுப்பிற்கு வாழைத்தண்டை சாறு அல்லது கறி கூட்டு செய்து சாப்பிடலாம். இதனால் கொழுப்பு குறைந்து உடல் எடையும் குறையும்.

12. உடல் உஷ்ணத்திற்கு சீரக நீர், இளநீர் வெந்தயம் ஊறவைத்த நீர் அருந்தக் கொடுக்கலாம்.

13. வெயிலில் அலைந்துவிட்டு வருபவர்களுக்கு தண்ணீர் வெல்லம் அல்லது பானகம் கொடுக்க சுறுசுறுப்பாக இருக்கும்.

Leave a Reply

%d bloggers like this: