masala-kondaikadalai-matrum-murungaikai-soup

குழந்தைகள் சத்தான உணவுகளை சாப்பிடாமல், கடைகளில் கிடைக்கும் தின்பண்டங்களை உண்கிறார்களா? நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் உணவின் சத்துக்களை முழுமையாக பெறுவதில்லை என கவலை கொள்கிறீர்கள் என்றால், கவலையை விடுங்கள். குழந்தைகளுக்கு எதையும் ஒரே மாதிரி சாப்பிட கொடுத்தால் உண்ண பிடிக்காது, எதையும் விதவிதமாகவும், வித்தியாசமாகவும் கொடுக்கும் போது, அதை உண்ண துவங்குவார்கள். சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு விதவிதமாய் கொடுக்க முயற்சியுங்கள். இப்போது, குழந்தைகளுக்கு மாலை நேர உணவாக கொடுக்க கூடிய இரண்டை பார்க்கலாம். 

1 மசாலா கொண்டைக்கடலை

தேவையான பொருட்கள்

வெள்ளை கொண்டக்கடலை – 1 கப் {வேக வைத்தது}

வெங்காயம் – 1

கேரட் – 1

முட்டைகோஸ் – சிறிதளவு

சாட் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி இலை – சிறிதளவு {பொடியாக நறுக்கியது}

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

எண்ணெய் – தேவைக்கேற்ப

கடுகு – சிறிதளவு

உப்பு – தேவைக்கு ஏற்ப

செய்முறை

1 வெங்காயம், முட்டை கோஸ் மற்றும் கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். கொண்டைக்கடலையை வேகவைத்து, நீரை நீக்கி எடுத்து வைக்கவும்.

2 ஒரு வாணெலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கொள்ளவும். பின் அதில் வேகவைத்த கொண்டைக்கடலை மற்றும் நறுக்கிய காய்கறியுடன், மிளகாய் தூள், சாட் மசாலா தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

2 முருங்கைக்காய் சூப்

தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு – அரை கிண்ணம்

முருங்கைக்காய்-2

பெரிய வெங்காயம்-1

தக்காளி-3

பச்சை மிளகாய்-2

இஞ்சி – ஒரு துண்டு

பூண்டு – 4 பல்

கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி

மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

தேங்காய்ப் பால் – அரை கிண்ணம்

வறுத்துப்பொடிக்க:

மிளகு – கால் தேக்கரண்டி

சோம்பு – கால் தேக்கரண்டின்

சீரகம் – கால் தேக்கரண்டி

செய்முறை

1 பருப்பை மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேக வையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குவதோடு, முருங்கைக்காயை 3 அங்குலத் துண்டுகளாக நறுக்கி வையுங்கள். வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்றாக வறுத்துப் பொடித்து கொள்ளுங்கள். இஞ்சி, பூண்டை தோல் நீக்கி நசுக்கிக் கொள்ளுங்கள்.

2 ஒரு குக்கரில் வெந்த பருப்பு நீர் 2 கப், காய்கள், வறுத்துப் பொடித்த பொடி, இஞ்சி, பூண்டு விழுது என எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு 2 விசில் வைத்து இறக்குங்கள். ஆவி அடங்கியதும் ஒரு வடிகட்டியில் நன்கு வடிகட்டி, உண்ணும்போது தேங்காய்ப்பால் சேர்த்து உண்ணுங்கள்.

குழந்தைகளுக்கு சத்தானதை, அவர்கள் விரும்பும் வடிவில் கொடுங்கள். இதனால் அவர்கள் விரும்பி உண்பதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படுத்தப்படும்.

Leave a Reply

%d bloggers like this: