breastfeeding-stop-5-changes

தாய்மார்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்தம் தருணம் என்பது அனைவருக்கும் ஒன்று  போல் இருக்காது. ஏனெனில் ஒவ்வொருவரின் உடல் நலமும், மன நலமும், குடும்ப சூழலும் வித்தியாசமானது. தாய்ப்பால் சுரப்பு முற்றிலும் இல்லாது போனால், தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்த வேண்டிய சூழல் வரலாம். இதுமாதிரி அல்லது தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்தும் காலம் வந்தால், உங்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களை அறிந்திருப்பது அவசியம்.  

அப்படி நிகழும் 5 மாற்றங்களை பற்றி இப்பதிப்பில் காணலாம்…

1. மனநிலை மாற்றங்கள்..!

குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்தியவுடன், குழந்தைகளுக்கும் தாய்க்கும் சில மன மற்றும் உடல் ரீதியான மாற்றங்கள் நிகழும். தாய்மார்களுக்கு, தாய்ப்பால் புகட்டும் சமயம் சுரக்கும் ப்ரோலாக்டின் மற்றும் ஆக்சிடோசின் போன்ற சில ஹார்மோன்கள், அவர்களுக்கு நல்லதொரு மனநிலையை உள்ளிருந்து அளித்து, அவர்களை அமைதியாக உணரச் செய்யும். தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்தியவுடன், அவர்களுக்கு எரிச்சல், பதற்றம், கோபம் போன்ற உணர்வுகள் தோன்ற வாய்ப்புள்ளது.

2. பால் சுரப்பு..

ஒவ்வொரு பெண்ணிற்கும் தாய்ப்பால் சுரப்பதும், நிற்பதும் வெவ்வேறு கால கட்டங்களில் ஏற்படும். தாய்ப்பால் சுரப்பு என்பது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு.., அதாவது, தாய்ப்பால் எவ்வளவு குறைகிறதோ, அதே அளவு உடனே தாயின் உடலில் உற்பத்தியாகும். அதனால், தாய்ப்பால் சுரப்பு நின்றவுடன், சில சமயங்களில் பால் சுரப்பு மீண்டும் நிகழ்வதும், நிற்பதுமாய் இருக்கும்..

3. மாதவிடாய் சுழற்சி..!

பிரசவத்திற்கு பின் ஏற்பட்ட மாதவிடாய் சுழற்சி, தாய்ப்ப்பால் சுரப்பு நிகழ்கையில், நின்று போயிருக்கும். நீங்கள் தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்தியவுடன் மீண்டும் மாதவிடாய் சுழற்சி ஏற்படும். இது ஒரு முக்கியமான உடலியல் மாற்றமாகும்..

4. மார்பகங்கள்..

உங்கள் மார்பகங்களில், தாய்ப்பால் சுரக்கும் செல்கள் இடம் பெற்றதால், அதன் வடிவம் மாறியிருக்கலாம். தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்தியவுடன், பால் சுரக்கும் செல்கள், மார்பகத்தை விட்டு நீங்கி, மீண்டும் பழைய வடிவத்தைப் பெறும்..

5. பால் கட்டிக் கொள்ளுதல்..

பெரும்பாலான பெண்களுக்கு, தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்தியவுடன் பால் கட்டிக்கொள்ளுதல் என்ற பிரச்சனை, மிகவும் அவர்களை வருத்துவதாய் உள்ளது. இது ஒரு இயல்பான உடலியல் மாற்றமே! இதைத் தடுக்க மார்பகங்களை அடிக்கடி கவனித்து, பாலை வெளியேற்ற முயற்சி செய்வது நல்லது…

Leave a Reply

%d bloggers like this: