thanthai-magaluku-katru-koduka-ventiyavai

நல்லதோர் குடும்பம் பல்கலை கழகம் என்பார்கள். குடும்பத்தில் ஒருவர்க்கொருவர் விட்டு கொடுத்து சொல்வது, அக்கறை கொள்வது என அனைத்தும் இதில் அடங்கும். ஒரு குடும்பத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பலவற்றை கற்று கொடுக்கிறார்கள். குழந்தைக்களுக்கு கற்று கொடுப்பதில், தாய் தந்தை என இருவருக்கும் பங்குண்டு. இதில் சில விஷயங்களை தாயும், சில விஷயங்களை தந்தையும் கற்று கொடுக்க வேண்டும். அப்படி, தந்தை தன் மகளுக்கு கற்று கொடுக்க வேண்டியவற்றை பார்க்கலாம். 

தந்தை மகளுக்கு கற்பிக்க வேண்டியவை

எப்போதும் எதிர்பாலினத்தாலேயே ஈர்க்கப்படுகிறோம் என்பதற்கு உதாரணமாக, மகன்கள் அம்மாவுக்கும், மகள்கள் அப்பாவுக்கும் தான் அதிகமாக ஆதரவு கொடுப்பார்கள். ஓர் தந்தையாக உங்கள் மகளிடம் தினமும் பல்வேறு விஷயங்கள் பற்றி நீங்கள் உரையாட வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.

எல்லா அப்பாக்களின் குட்டி தேவதை அவர்களது மகள் தான். ஆனால், இதை நீங்கள் வெளியேவும் வாயை திறந்து சொல்ல வேண்டும். இயல்பாகவே பெண் குழந்தைகள் அப்பா செல்லமாக தான் இருப்பார்கள். மேலும், ஆண் குழந்தைகளை விட தங்கள் தந்தையை பற்றி பெருமிதமாய் பேசுவதும் பெண் குழந்தைகள் தான்.

உங்களிடம் இருந்து சில ஆசை வார்த்தைகள், உத்வேகப்படுத்தும் பொன் மொழிகளை பெண் குழந்தைகள் எப்போதும் எதிர்பார்பார்கள். மேலும், அம்மாவை விட, அப்பாவின் சொல்லுக்கு தான் பெண் குழந்தைகள் அதிகமாக கட்டுப்படுவார்கள். இதற்காகவாவது நீங்கள், அவர்களை செல்லம் கொஞ்சுவதற்கு மேலாக ஓரிரு உத்வேக வார்த்தைகள் சொல்லி ஊக்கமளிக்க வேண்டும்.

முகநூலில் முகப்பு படம் வைப்பதில் இருந்து, பேருந்தின் நடுவில் கம்பியை பிடித்து நிற்கும் வரை பல இடங்களில் பெண்கள் இன்றளவும் அஞ்சி தான் நடந்து வருகிறார்கள். எனவே, ஓர் தகப்பனாக உங்கள் மகளுக்கு நீங்கள் தினமும் தைரியத்தை ஊட்ட வேண்டும். இந்த தைரியம் தான் பின்னாளில் உங்கள் பெண் எங்கு சென்றாலும் வெற்றியுடன் திரும்ப முக்கிய காரணியாக இருக்கும். எத்தனையோ பெண்கள் தைரியம் குறைவாக இருப்பதால் தான் தங்கள் திறமையை வெளிப்படுத்தாமலேயே இருக்கிறார்கள்.

செயல் முறை அறிவும், கலாச்சாரமும் கற்றுக் கொண்டாலே, இவ்வுலகின் எந்த மூலை, இடுக்கிலும் சென்று சாதித்து வரலாம். பட்டறிவு மட்டுமின்று செயல் முறை அறிவையும், மனிதர்களை படிக்கவும் உங்கள் மகளுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.

எல்லா மகள்களும் தங்கள் அப்பா ஓர் நாயகனாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். தங்களுடைய அப்பா நேர்மையான, உன்னதமான, மற்றவர்களுடைய உணர்வை புரிந்துக் கொள்ள தெரிந்த நல்ல நாயகனாக இருக்க வேண்டும் என்று தான் அனைத்து மகள்களும் விருப்புவார்கள்.

எனவே, நீங்கள் அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும். அவர்களுடன் பல விஷயங்களை பேசி உரையாட வேண்டும். அவர்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை கேட்டறிந்து, அவற்றிற்கு சரியான தீர்வு வழங்குவதன் மூலம், அவர்களை தெளிவுபடுத்தி மன அழுத்தத்தையும் குறைக்க முடியும். நீங்கள் அவர்களுடன் நட்பாய் பேசி அவர்களின் பிரச்சனைகளை சரி செய்வதன் மூலம், அவர்கள் அனைத்தையும் உங்களிடம் தயக்கம் இல்லாமல் பேச முன் வருவார்கள். 

Leave a Reply

%d bloggers like this: