thidirena-erpadum-paruva-nilai-matrathilirunthu-kulanthaikalai-pathukakka-5-valikal

பருவ நிலை மாற்றம், உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மாறி கொண்டே இருக்கும் பருவ நிலையால், பெரியவர்களே சளி, காய்ச்சல் என பலவற்றால் பாதிக்கப்படும் போது, குழந்தைகளின் நிலை எப்படி இருக்கும் என கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். பருவ நிலை மாற்றங்களின் போது, நமது உடல் புதிய காலநிலைக்கு மாறுவதற்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி தேவை. வைரஸ், பாக்டீரியா நோய்த்தொற்றுகள் மற்றும் பல அலர்ஜிகளை இவை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உருவாகின்றன. எனவே நீங்கள் இந்த காலநிலை மாற்றத்திலிருந்து, உங்கள் குழந்தைகளை பாதுகாப்பதற்கான 5 வழிகளை இங்கு பார்க்கலாம். 

1 அறிகுறிகளை கவனியுங்கள்

நீங்கள் அதற்கான அறிகுறிகளை கவனிக்கும் போது, உங்கள் குழந்தையை நோய்களிலிருந்து பாதுகாப்பது மிகவும் எளிதாகிவிடுகிறது. அவர்கள் வழக்கத்திற்கு மாறாக அமைதியாகவோ அல்லது ஒய்வின்றியோ எரிச்சல் அடைகிறார்களா என கவனியுங்கள். அவர்களின் தோலில் அதிகப்படியான வறட்சியோ அல்லது தோல் வெளிறியோ காணப்பட்டால், நீங்கள் அதை எளிதாக எடுத்து கொள்ள கூடாது. இந்த அறிகுறிகள் இரண்டு நாட்களுக்கு மேலாக இருந்தால், உங்கள் குழந்தையை மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். உங்கள் குழந்தைகள் மிக சிறியவர்களாக இருந்தால், தாய்ப்பாலூட்டல் காரணமாக எந்த இழப்புமின்றி நோயெதிர்ப்பிற்கு உதவ முடியும்.

2 பருவ நிலைக்கு தகுந்த ஆடைகளை அணிவியுங்கள்

ஒரு பெற்றோராக, நீங்கள் முன்னெச்சரிக்கையுடன் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். கூடுதலாக கம்பளி ஆடைகளை எடுத்து செல்ல வேண்டும். நீங்கள் செல்லும் பகுதி மிகவும் குளிர்ச்சியானதாக இருந்தால், நீங்கள் காலுறை, கையுறை மற்றும் தொப்பிகளை எடுத்து செல்வது சிறந்தது. அதுவே கோடை காலமாக இருந்தால், உங்கள் குழந்தைகளுக்கு பருத்தி ஆடைகள் அணிவிக்கலாம். குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லும் போது, வெயில் தாக்காமல் இருக்க தொப்பி மற்றும் குடைகள் போன்றவற்றை உடன் எடுத்து செல்லலாம்.

3 உங்கள் குழந்தையின் ஊட்டச்சத்தில் கவனம் செலுத்துங்கள்

உங்கள் குழந்தைகள் பெறும் ஊட்டச்சத்தானது, அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க பயன்படுகிறது. உங்கள் குழந்தைகள் திட உணவுகளை சாப்பிடுபவர்களாக இருந்தால், அவசியமான புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு நல்ல சமச்சீர் உணவை கொடுங்கள். உங்கள் குழந்தைகள் நன்றாக உணவு உண்பவர்கள் என்றால், அவர்களுக்கு இந்த சத்துக்கள் நிறைந்த தின்பண்டங்களையும், பழச்சாறுகளையும் கொடுங்கள்.

4 முறையான சுகாதாரம்

பொதுவாக நாம் சில நல்ல பழக்கவழக்கங்களை குழந்தைகள் கடைபிடிக்குமாறு கற்று கொடுக்க வேண்டும். இருப்பினும், பருவ நிலை மாற்றங்களின் போது இது மிகவும் முக்கியமானது. சாப்பிடுவதற்கு முன் அவர்கள் கைகளை கழுவ வேண்டும் என கட்டாயப்படுத்துங்கள். இது பல நோய் தொற்றுகளிலிருந்து உங்கள் குழந்தைகளை காக்க உதவுகிறது. குழந்தைகளை சுற்றியுள்ளவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால், அதன் தொற்றுகளால் இவர்களும் பாதிக்கப்படுவார்கள். சில குழந்தைகள் காப்பகம் மற்றும் பலர் பள்ளிகள் (play school) குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களை வீட்டிற்கு அனுப்பும் கொள்கையை கொண்டுள்ளனர்.

5 குளிக்கும் பழக்கம்

உங்கள் குழந்தைகள் குளித்து முடித்தவுடன், அவர்கள் குளிக்கும் போது இருந்த அதே வெப்பநிலையில் அவர்களது அறை இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். அவர்கள் குளியலை முடித்து உடலை உலர செய்யும் போது, மின்விசிறிகளை (fans) அணைக்கவும். அவர்களது தலையின் ஈரத்தை உலர்த்தி, பருவநிலைக்கு தகுந்த ஆடைகளை அணிவித்தல் உங்கள் குழந்தைகள் சௌகர்யமாகவும், வசதியாகவும் உணர்வார்கள்.

குழந்தைகளை பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்தை காட்டிலும் பெற்றோர்க்கு வேறு எதும் சிறந்ததல்ல. 

Leave a Reply

%d bloggers like this: