vudalil-erpadum-aripai-sari-seiyum-valikal

சரும பிரச்சனை, கால நிலை மாற்றம், அலர்ஜி என பல காரணங்களால் அரிப்பு ஏற்படுகிறது. எங்கும் எப்போது பார்த்தாலும் சிலர் அரித்துக் கொண்டே இருப்பார்கள். பொது இடம் என்று கூட பார்க்க மாட்டார்கள். வெளியில் இருந்து பார்ப்பவர்கள் முகம் சுளித்தாலும், அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அது எவ்வளவு கொடுமையானது என்று. இதை குறைக்க நீங்கள் என்னதான் பல க்ரீம்களை பூசினாலும். அது தற்காலிக தீர்வை தான் அளிக்குமே, தவிர நிரந்திர தீர்வை அளிக்காது. இந்த அரிப்பை எப்படி இயற்கையாய் சரி செய்யலாம் என பார்ப்போம். 

கீழாநெல்லி

கீழாநெல்லி இலைகளை அரைத்து உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் அரிப்பு குறையும். இது சருமத்தில் உருவாகும் சிறு புண்கள் சரியாகவும் சிறந்த பயனளிக்கிறது. இது எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாத இயற்கை மருத்துவ பொருள். இது மேலும் சில நோய்களுக்கு அருமருந்தாக இருக்கிறது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவை வந்தால் விரைவில் அரிப்பு குறையும். எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டும் உங்கள் தோலை ஈரத்தன்மையுடன் வைக்க உதவுகிறது. தோலின் வறட்சியை போக்குவதால் அரிப்பு குறைகிறது.

சாதம்

அரிப்பு ஏற்படும் இடத்தில் சுடு சாதம் மற்றும் மஞ்சளை அரைத்து தடவி வந்தால் அரிப்பு குறையும். மஞ்சள் மருத்துவத்தன்மை கொண்ட பொருளாகும். இது நோய்க்கிருமிகளை அளிக்கும் வல்லமை கொண்டது.

பால்

சர்க்கரை சேர்த்த பாலில், சுத்தமான மஞ்சள் இரண்டு தேக்கரண்டி சேர்த்து பருகி வந்தால் உடலில் அரிப்பு தன்மை குறையும். பால் நம் உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்க ஒன்று. இதில் மஞ்சள் சேர்க்கும் போது, அது அரிப்பிற்கு சிறந்த மருந்தாக மாறுகிறது.

கற்பூரவள்ளி

கற்பூரவல்லி சாற்றுடன், திருநீற்று பச்சிலை சாறு சேர்த்து அரிப்பு உண்டாகும் இடத்தில் தடவி வந்தால் அரிப்பு குறையும். இவை இரண்டும் சிறந்த மருத்துவ தன்மை கொண்ட மூலிகை பொருளாகும். இவை பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

அதே போல நீங்களும் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டியது அவசியம். சரியாக தேய்த்து குளிக்க வேண்டும், உள்ளாடைகளை ஆறு மாதத்திற்கு மேல் பயன்படுத்தக் கூடாது, புதியதை மாற்ற வேண்டும். சுத்தமற்ற கழிவறைகளை தவிர்க்க வேண்டும். ஆடைகளை நன்கு துவைத்து வெயிலில் உலர்த்தி, பின் உடுத்த வேண்டும். இவற்றை பின்பற்றுவதன் மூலன் அரிப்பை தவிர்க்க முடியும்.

 

Leave a Reply

%d bloggers like this: