குழந்தையை பெற்றெடுத்த பின், பெண்களின் உடலில் பல மாற்றங்கள் நிகழலாம்; சிலரின் உடல் எடை கூடலாம் அல்லது அப்படியே இருக்கலாம். மகப்பேற்றுக்குப் பின், பெண்களின் உடலைப் பற்றி பல கட்டுக்கதைகள் நிலவுகின்றன; அவற்றுள் நம்பக்கூடாத 7 கட்டுக்கதைகைப் பற்றி காணலாம்..
1. குழந்தையின் எடையை குறைத்தல்..
குழந்தை பிறந்தவுடன், அதன் எடையை குறைக்க வேண்டும் என்ற தவறான கதை உள்ளது; இது முற்றிலும் பொய்யானது. குழந்தைகள் சரியான எடை அல்லது அதற்கு மேல் எடை இருந்தாலும், வளர வளர அவர்களின் உடல் எடை, நீங்கள் அளிக்கும் உணவு வகைகளால், சரியான எடையைப் பெறும். இதற்காக நீங்கள் தனி முயற்சி கொள்ளத் தேவையில்லை…
2. உங்கள் எடையை குறைத்தல்..
பிரவத்தின் விளைவாக உங்கள் எடை கூடி இருக்கலாம், ஆனால் குழந்தை பிறந்தவுடன் உடனடியாக எடை குறைப்பில், ஈடுபடாதீர்கள். ஏனெனில் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் தான், குழந்தைக்கான தாய்ப்பால் சுரப்பு நன்றாக இருக்கும்; குழந்தையை வளர்ப்பதிலேயே கண்டிப்பாக உங்கள் எடை குறைந்துவிடும்; அப்படி குறையாதபட்சத்தில், எடை குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம்…
3. விரும்பத்தகாத தோற்றம்..!!
மகப்பேற்றால், உங்கள் உடல் அடைந்திருக்கும் மாறுபாடுகள் விரும்பத்தகாததாக இருக்கலாம்; அப்படி உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், உங்கள் கணவரின் பார்வையில், தன் உயிரை உலகிற்குக் கொண்டு வந்த தேவதையாகவே, நீங்கள் காட்சியளிப்பீர்..!
4. மறைத்து வாழ்..!
பிரசவத்தால், உங்கள் உடல் அடைந்த மாற்றங்களை மறைத்து வாழ் எனக் கூறுவர். உண்மையில், ஒரு புத்துயிரை பூமிக்குக் கொண்டு வந்த நீங்கள் மறந்து வாழ வேண்டியவரல்ல; உங்களை எண்ணி, நீங்கள் பெருமிதம் கொண்டு, உங்கள் குழந்தையை சிறந்த முறையில் வளர்த்து ஆளாக்க வேண்டும்.
5. மூளையின் வேலை..!
குழந்தை பிறப்புக்குப் பின், சரியாத உறக்கம் இல்லாததாலும், பல ஹார்மோன் மாற்றங்களாலும் உங்கள் மூளையின் செயல்திறன் குறையலாம்; அதாவது மராத்தி ஏற்படலாம். இக்கதையையும், சரியான உறக்கம், சத்தான உணவு மூலம் முன்னிருந்த இயல்பு நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம்.
6. உடலுறவு..!
பிரசவத்தால், ஏற்பட்ட காயங்கள் ஆறி நலம் பெற, சிறிது கால அவகாசம் தேவை. ஆதலால், 6 குழந்தை பிறந்து 6 வாரங்கள் அல்லது மேலும் சில காலம் அவகாசம் எடுத்துக் கொண்டு, உங்கள் இயல்பு வாழ்க்கையில் ஈடுபடலாம்…
7. வாகனம் ஓட்டுதல்..!
புதிதாக குழந்தை பெற்றவர்கள் பெரும்பாலும் கடினமான வேலைகள் மற்றும் வாகன ஓட்டுதலுக்கு அனுமதிக்கப் படமாட்டார்கள். ஆனால், உங்கள் உடல் நலம் நன்றாக தெரியதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் இயல்பு வாழ்க்கையில், அன்றாட செயல்களை, சிறிது கவனத்துடன் செய்யலாம்…