இன்றைய கால கட்டத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்கள் வெளியில் சென்று ஓடி விளையாடுவதில்லை. அவர்கள் வெளியில் சென்று நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும் போது தான், அனைவரிடமும் எப்படி பழக வேண்டும்? எவ்வாறு விட்டுக் கொடுத்து விளையாட வேண்டும் என்பது பற்றியெல்லாம் அறிவர்; அவர்களின் சிந்தை தெளிவடைந்து விரிவாகும். குழந்தைகளின் நினைவாற்றல் என்பது மிக முக்கியமான ஒன்று. அதை மேம்படுத்த பல வழிகள் உள்ளன. அவற்றை பற்றி இப்பதிப்பில், காணலாம்.
உணவுகள்
குழந்தைகளுக்கு அனைத்து வகை காய்கறிகளையும், பலன்களையும், இறைச்சி வகைகளையும், மீன்களையும் உண்ண பழக்க வேண்டும். இவ்வகை உணவுகள் அனைத்தும் குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு பேருதவி புரியும்.
உடற்பயிற்சிகள்
குழந்தைகள் ‘சூப்பர் யோகா’ எனப்படும் தோப்புக்கரணத்தை தினம் 15-25 முறை காலையிலும் மாலையிலும் செய்வதால், அவர்களின் வலது மற்றும் இடது மூளைகள் என இருபக்க மூளைகளும் நல்ல நிலையில், அதிக ஆற்றலுடன் இயங்கத் தொடங்கும்.
குழந்தைகள் வீடியோ கேம்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஓடியாடி விளையாடினாலே அவர்களுடைய மூளையின் இயக்கம் அதிகரிக்கும். அறிவாற்றல் மேம்படுவதோடு கல்வியிலும் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகள் தினமும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருவதால், அவர்களுடைய திறன்கள் அதிகரிக்கின்றன. ஊக்கப்படுத்துதல், நம்பிக்கை, தன் முன்னேற்றம், பெற்றோர்களுடனான உறவு ஆகிய வாழ்வியல் திறன்களும் அதிகரிக்கின்றன.
குழந்தைகள் சிறுவயதில் கடுமையாக உடற்பயிற்சி செய்து வந்தால், அது பிற்காலத்திலும் அவர்களை இதய நோய் மற்றும் நீரிழிவு நோயிலிருந்து காக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ந்து மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சியானது, இயற்கையாகவே உடலின் இயக்கத்தை சீராக்குகிறது. இதயநோய்கள் வருவது இயல்பாகவே தடுக்கப்படுகிறது. உடற்பயிற்சி இதயத்துக்குச் செல்லும் தசைகள் மற்றும் நரம்புகளின் இயக்கத்தைச் சீர்படுத்துகிறது.
பள்ளிக்குச் செல்வதற்கு முன்பும் பின்பும் குழந்தைகள் மேற்கொள்கிற, உடற்பயிற்சியானது, குழந்தைகளின் கல்வியையும் மேம்படுத்துகிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறது. உடல் உழைப்பு சார்ந்த பயிற்சிகள் சிறுவயதில் மட்டும் அல்லாமல், பொது வெளிகளிலும் வேகமாக இயங்கச் செய்கிற வாய்ப்பை அவர்களுக்கு வழங்குகிறது.
புத்தகங்கள்..
குழந்தைகளுக்கு நல்ல கதைவளம் உள்ள புத்தங்களை அறிமுகப்படுத்தி, படிக்கச் செய்வதன் மூலம் குழந்தைகளின் கற்பனை வளத்தையும், விஷயங்களைப் புதிய கண்ணோட்டத்தில் யோசிக்கச் செய்வதையும் வளப்படுத்தலாம்.புத்தக வாசிப்பு, குழந்தையின் அறிவு வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது.