kulanthai-piranthavudan-ningal-karuthil-kolla-ventiya-9-visayangal

நமது வாழ்க்கை குழந்தை வந்தவுடன் மாறித்தான் போய்விடுகிறது ஆனால் அந்த மாற்றங்கள் நிறைய ஆச்சரியங்களை கொண்டிருக்கும். குழந்தை பிறந்தவுடன் பெரும்பாலும் தம்பதிகள் விவாதிக்கும் விஷயங்களே மாறிப்போய் விடுகிறது. இதற்குமுன் நீங்கள் யோசிக்காத பிரச்சினைகளை பற்றி சிந்திக்க தொடங்குவீர்கள். எனவே, உங்களுடைய குழந்தை வந்து சேர்ந்தவுடன், உங்கள் மகிழ்ச்சியான உரையாடல்களில் சிலவற்றை நீங்கள் காணலாம். 

1. ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு தூக்க பயிற்சியை தொடங்குவது எப்படி?

குழந்தைகள் தூங்கி விழிக்கும் நேரமானது வித்தியாசமாக இருக்கும். பெற்றோர்கள் அவர்கள் முழுமையாக தூங்கும் வரை விழித்திருப்பது கடினம். அவர்களை முழுமையாக இரவு நேரங்களில் உறங்க பழக்குவது சிறந்தது. மேலும் அவர்கள் இரவில் உறங்குவதால் கண்ட நேரங்களில் உறங்குவது தவிர்க்கப்படும்.

2 குழந்தையின் கழிவுகளை கவனித்தல்

உங்கள் குழந்தையை சுற்றியுள்ள கழிவுகளை பற்றி பேச்சுகளை ஒரு பெற்றோராக உங்களால் வெறுக்க முடியாது. உங்கள் குழந்தையின் மலத்தின் நிறம் குறித்து கூட நீங்கள் பேசிக்கொண்டிருக்கலாம். இது உங்கள் குழந்தையின் குடல் இயக்கங்கள் குறித்து உங்கள் வழக்கமான உரையாடலின் ஒரு பகுதியாக இது மாறும்.

 3 குழந்தைகளின் வளர்ச்சியை கவனித்தல்

முதல் முறை பெற்றோரானவர்கள், குழந்தையின் ஒவ்வொரு படிநிலை வளர்ச்சியை கண்டு குதூகலிப்பார்கள். அதிலும் குழந்தைகள் பேச ஆரம்பிக்கும் போது அவர்கள் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று வருவார்கள். அவர்கள் சொல்லும் அர்த்தமற்ற வார்த்தைகளை கேட்கும் போது, இவர்கள் வாழ்வின் அர்த்தத்தை உணர்வார்கள்.

4 குழந்தைகளுக்கான கழிவறை பயிற்சி

உங்கள் குழந்தை சோபா மீது அசுத்தம் செய்துவிட்டால், அதை சுத்தம் செய்வது கடினமாகும். எனவே அவர்களுக்கு கழிவறையை உபயோகப்படுத்த சொல்லித்தருவது அவசியமாகும். இதை அவர்களின் ஒன்றரை வயது முதல் இரண்டு வயதுக்குள் கற்றுக்கொடுப்பது நல்லது. சிறு வயதிலேயே கற்றுக்கொண்டவற்றை அவர்கள் மீண்டும் கற்க வேண்டிய அவசியம் இல்லை.

5 தவழ்ந்து செல்லுதல்

குழந்தைகளின் ஒவ்வொரு அசைவையும் பெற்றோர், புதியதாக பார்க்க துவங்குவார்கள். அதிலும் குழந்தைகள் தவழ்ந்து செல்லும் போது, அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார்களோ, அவ்வளவு கவனத்துடன் இருக்க வேண்டியதும் அவசியம். பெரும்பாலான பெற்றோர் சொல்ல கூடிய ஒன்று, தங்கள் குழந்தை உணவு மேசையிலோ அல்லது படுகையிலிருந்தோ அதன் எல்லை பகுதிக்கு தவழ்ந்து சென்று விடுகிறார்கள் என்பதாகும். இதில் பெற்றோர் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அத்தியாவசியமான ஒன்று.

6 குழந்தைகளின் குறும்புத்தனம்

உங்கள் குழந்தையுடன் வெளியில் கடைகளுக்கு சென்றிருக்கும் போது அவர்கள் எதையாவது தள்ளிவிட்டாலோ அல்லது அழ துவங்கிவிட்டாலோ நீங்கள் சங்கடமான சூழ்நிலைகளுக்கு தள்ளப்படுவீர்கள். அவர்களை சமாதானம் செய்ய, நீங்கள் முயற்சித்தாலும் பலன் தராது. அந்த மாதிரியான தருணங்களில் நீங்கள் உங்களை யார் கண்களிலும் படாமல் மறைத்து விடலாம் போன்று தோன்றும். ஆனால் பின்வரும் நாட்களில் அவற்றை நினைக்கும் போது, அவை உங்களுக்கு மகிழ்ச்சியளிக்க கூடியதாக இருக்கும்.

7 கூர்மையான பொருட்கள்

உங்கள் குழந்தைக்கு அருகில் கூர்மையான பொருள்களைக் கொண்டு வரும்போது, குழந்தைகள் மிகவும் மென்மையாக இருப்பதால் பெற்றோர்களை பயமுறுத்துகிறது. எனினும் அவற்றை கவனமாக செய்யும் போது, குழந்தைகள் காயப்படுவதை தவிர்க்கலாம். அவர்களின் நகங்களை வெட்டிவிடாத போது, குழந்தைகள் அவர்களாகவே தங்களை காயப்படுத்தி கொள்வார்கள்.

8 பெற்றோரின் தூக்கத்தை கெடுப்பது

குழந்தை பிறந்தவுடன் இரவில் நிம்மதியான உறக்கம் என்பது பலருக்கும் எட்டாகனவாக மாறிவிடுகிறது. ஒரு சில பெற்றோர்கள் மட்டுமே அதிர்ஷ்டவசமாக இதை பெறுகிறார்கள். எனவே குழந்தை தூங்கும் போதே நீங்களும் தூங்கிக்கொள்ளுங்கள்.

9 குழந்தைகளின் பாடல்

குழந்தைகளுக்கு அவர்களுக்கான பாடல்களை சொல்லிக் கொடுக்கும் போது, அவர்களது கொஞ்சும் மொழியின் இனிமையை உணர்வீர்கள். குழந்தை பாடல்கள் இப்போது உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்த தொடக்கி இருக்கும். அது உங்கள் தலையில் விளையாடும் இசையாக மாறிவிடும், நீங்கள் அதை விட்டு வெளியேறவே முடியாது. நீங்களும் அவற்றை முணுமுணுக்க துவங்கி விடுவீர்கள். 

Leave a Reply

%d bloggers like this: