karpa-kalathil-malacikkalai-sari-seiyum-valikal

கர்ப்ப காலத்தில் பெண்களில் உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அது சிலருக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். அவற்றுள் ஒன்று தான் கர்ப்ப கால மலச்சிக்கல். கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது என்பது சாதாரணம் தான். மலச்சிக்கலை சரி செய்ய எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தையும் கர்ப்ப காலத்தில் மேற்கொள்ள முடியாது. கர்ப்பமாக இருக்கும் போது பப்பாளி, வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. இவற்றை சாப்பிட்டால், மலச்சிக்கல் நீங்குவதுடன், வயிற்றில் வளரும் சிசுவிற்கும் ஆபத்து ஏற்படும். இப்போது கர்ப்ப கால மலச்சிக்கலை தவிர்க்கும் வழிகளை பார்ப்போம். 

ப்ளூபெர்ரி பழங்கள்

இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை விரைவில் போக்கும். அதற்கு தினமும் 200 கிராம் ப்ளூபெர்ரிப் பழங்களை வாங்கி சாப்பிட வேண்டும். ப்ளூபெர்ரி மலச்சிக்கலைப் போக்குவதோடு, அதில் வைட்டமின் சி சத்தும் உள்ளது. இது பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

ஆளி விதை

ஆளி விதையும் மலச்சிக்கலைத் தடுக்கும். அதற்கு ஆளி விதையை வறுத்து பொடி செய்து, அன்றாட உணவின் மீது சிறிது தூவி சாப்பிட வேண்டும். மேலும் ஆளிவிதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், கர்ப்பிணிகள் இதை சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

எலுமிச்சை சாறு

சிலருக்கு வெதுவெதுப்பான நீர் நாள்பட்ட மலச்சிக்கலைத் தடுக்காமல் இருக்கலாம். ஆனால் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பருகினால், உடனடியாக கர்ப்ப கால மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.

உலர்ந்த முந்திரி பழம்

உலர்ந்த முந்திரிப் பழமும் மலச்சிக்கலுக்கு பரிந்துரைக்கப்படும் ஒரு பாதுகாப்பான உணவுப் பொருள். குறிப்பாக கர்ப்பிணிகள் இதை சாப்பிட்டால், தீவிர மலச்சிக்கல் உடனடியாக விலகும்.

Leave a Reply

%d bloggers like this: