baby-sinus-problem

2 மாத காலமாக அநேகருக்கு, முக்கியமாக குழந்தைகளுக்கு தும்மலும், இருமலும், மூக்கடைப்பும், ஜலதோஷமும் என்ற பாதிப்பாகத்தான் இருக்கின்றது. சாதாரண ஜலதோஷம் அனேகமாக வைரஸ் கிருமியால் ஏற்படுவது. இன்னும் கொஞ்சம் தீவிரமடைந்தல் ஜுரம், இருமல் இப்படி கூடி பின் இறங்கி மறைகின்றது. சில நாட்கள் முதல் ஒரு வாரத்திற்கும் மேல் இதன் ஆயுட் காலம் எனலாம். ஆனால் சிலருக்கு இதுவே சைனஸ் தாக்குதலாக மாறுகின்றது. அதிலும் குழந்தைகளில் இந்த பிரச்சனை அதிகம் காணப்படுகிறது.

இந்த சைனஸ் தொல்லையை சரி செய்யும் வழிகளைப் பற்றி இப்பதிப்பில் காணலாம்..!

சைனஸ் பாதிப்பின் அறிகுறிகள்

1. மூக்கிலிருந்து தடித்த சளி வெளியேறுதல்

2. கண், முகத்தின் இருபுறம் இடங்களில் வலி

3. நெற்றி பகுதியில் தலைவலி

4. கடுமையான மூக்கடைப்பு

5. தொண்டைவழி சளி வெளியேற்றம்

6. ஜுரம், இருமல்

எதனால் சைனஸ் தொல்லை ஏற்படுகின்றது?

1. ஜலதோஷம்

2. அலர்ஜி

3. மூக்கில் சதை

இவையெல்லாம் சைனஸ் தொல்லை ஏற்பட காரணம் ஆகின்றது. இது மிக அதிகமாக தொல்லை தரும் பொழுது எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் போன்ற சோதனை முறைகளை மருத்துவர் மேற்கொள்வார். அதற்காக மருந்துகளும் அளிக்கப்படும்.

தடுக்கும் வழிகள்..!!

1. ஆவி பிடித்தல் போன்றவை சற்று நிவாரணம் தரும். மிக அதிக தாக்குதலுக்கு ஆன்டிபயாடிக்ஸ், சில சமயங்களில் அறுவை சிகிச்சையும் தேவைபடும்.

2. தூசு நிரம்பிய இடங்களை தவிர்த்தல், கைகளை சுத்தமாய் வைத்திருத்தல், காய்ச்சல் ஊசி வருடந்தோறும் எடுத்துக் கொள்ளுதல் போன்றவை சைனஸ் தவிர்ப்பு முறைகளாக உதவும்.

3. உங்களுக்கு சைனஸ் பாதிப்பு என்றால், மற்றவர்களுக்கு பரவும் என்று பயப்பட வேண்டாம்.

4. சைனஸ் பாதிப்பு இருக்கும் நேரத்தில் விமான பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. காது வலி போன்ற பிரச்சினைகள் பயணத்தின் போது ஏற்படலாம்.

5. தலையும், முகமும் வலித்தால் மருத்துவ ஆலோசனை படி மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

6. அதிக திரவ உணவு எடுத்துக் கொள்ளவும். சூடான சூப், ஹெர்பல் டீ இவை பெரிதும் உதவும்.

7. வெந்நீர் ஒத்தடம் நல்லது.

8. நீச்சல் செய்பவர்களுக்கு அதிலுள்ள குளோரின் கூட இப்பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

9. மசாலா நெடி, சமையல் புகை இவையும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

10. உடற்பயிற்சி செய்யும் சமயத்தில் கவனம் தேவை. தலை சுற்றல் ஏற்படலாம்.

11. ஆவி பிடியுங்கள்.

12. வீட்டினை சுகாதாரமாக வையுங்கள்.

13. மஞ்சள், இஞ்சியினை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

14. வைட்டமின் சி சத்து தேவையெனில் மருத்துவ ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ளுங்கள்.

15. பால் வகை உணவுகளில் அலர்ஜி இருக்கின்றதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

16. பூண்டு, முள்ளங்கி, வெங்காயம் இவற்றினை சமையலில் அதிகம் பயன்படுத்துங்கள்.

17. சுடுநீரில் உப்பு சேர்த்து ‘கார்கின்’ செய்வதனை அன்றாட வழக்கமாக கொண்டு விடுங்கள்.

Leave a Reply

%d bloggers like this: