ladies-vagina-affection

பெண்களுக்கு இயற்கையாகவே பல உபாதைகள் ஏற்படுகின்றன. மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், கருப்பைக்கட்டி, என பல கோளாறுகள் ஏற்படுகின்றன. வெள்ளைப் படுதல் பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு நோய். இந்நோய் பற்றி பெரும்பாலான பெண்கள் அறிவதில்லை; இதுவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நோயே!

ஆதலால் இந்நோய் எவ்வாறு ஏற்படுகிறது, இதன் அறிகுறிகள் என்னென்ன என்று இப்பதிப்பில் காணலாம்..!

வெள்ளைப்படுதல் அறிகுறிகள்

1. பிறப்புறுப்பில் அதிகளவு வெள்ளைப்படுதல்

2. வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் நாற்றத்துடன் சளிபோல் வெளியேறுதல்.

3. வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் உண்டாதல்.

4. சிறுநீர் மிகுந்த எரிச்சலுடன் வெளியேறுதல்

5. வெள்ளைப்படும் காலங்களில் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி உண்டாகுதல்.

6. இடுப்பு வலி, முதுகு வலி போன்றவை உண்டாதல்.

நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்

1. பொதுவாக ஒரு சில பெண்களுக்கு பூப்பெய்திய காலம் தொட்டே வெள்ளைப்படுதல் இருக்கும்.

2. ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.

3. அதிக உஷ்ணம், மேகவெட்டை போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.

4. தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படும்.

5. சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.

6. அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப் படுதல் உண்டாகிறது.

7. அதீத சிந்தனை, காரம், உப்பு மிகுந்த உணவு அருந்துதல் போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.

இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும். எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

வெள்ளை நோயைத் தவிர்க்க..

1. உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

2. பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

3. உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.

4. நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

%d bloggers like this: