baby-like-ghee-rice

பெரும்பாலான குழந்தைகளுக்கு நெய் சேர்த்த  உணவுகள் என்றாலே கொள்ளை பிரியம். தூய்மையான பசும்பாலில், செய்த நெய்யானது குழந்தைகளுக்கு மிக நல்லது. வளரும் குழந்தைகளுக்கு நெய் சேர்த்த உணவுகளை கொடுக்கவேண்டும். நெய்சாதம் ஊட்டச்சத்து மிக்கது; எளிதில் செய்யலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நெய் சாதம் எவ்வாறு செய்வது என்பது பற்றி அறியலாம்..!  

தேவையான பொருட்கள்

அரிசி – கால் கிலோ, நெய் – 100 கிராம், பட்டை – 3 துண்டுகள் (சிறியது), கிராம்பு – 4, ஏலக்காய் – 2, பூண்டு–7 பல், பிரியாணி இலை – 1, கறிவேப்பிலை – ஒரு கொத்து, முந்திரி, திராட்சை – தேவைக்கேற்ப.

தாளிக்க வேண்டியவை..

கடுகு – சிறிதளவு, கடலைப்பருப்பு – அரை தேக்கரண்டி, உளுத்தம்பருப்பு – அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை – சிறிது, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, பூண்டு – 10 பல்.

செய்முறை

1. அரிசியை 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வடித்து கொள்ளவும்.

2. பூண்டை தோல் உரித்து தட்டிக் கொள்ளவும். ஏலக்காயை லேசாக தட்டிக் கொள்ளவும்.

3. அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, சேர்த்து தாளித்த பின் முந்திரி, திராட்சை சேர்க்கவும்; அடுத்து அதில் வடிகட்டிய அரிசியை போட்டு 5 நிமிடம் கிளறவும்.

4. இதனுடன் ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கர் மூடி போடவும். விசில் போடாமல் மிதமான தீயில் 10 நிமிடம் வேகவைக்கவும். பத்துநிமிடம் கழித்து சாதம் குழையும் முன் இறக்கி வைக்கவும். அவ்வளவு தான், சுவையான நெய் சாதம் தயார்.

Leave a Reply

%d bloggers like this: