kulanthaikalin-vayathirketra-pommaikal

குழந்தைகள் பிறந்தவுடன் பல வகையான பொம்மைகளை பெற்றோர்களே வாங்கி குவிக்க துவங்கி விடுவார்கள். பொம்மை என்றால் என்ன என்று அப்போது குழந்தைகளுக்கு தெரியவே செய்யாது. உறவினர்கள் மற்றும் நண்பர்களும் அவர்கள் பங்கிற்கு பொம்மைகளை வாங்கி கொடுத்து விடுவார்கள். குழந்தைகளுக்கு பொம்மைகளை வாங்கும் முன் கொஞ்சம் சிந்தித்து, அவர்களின் வயதிற்கேற்ப பொம்மைகளை வாங்கி கொடுக்க வேண்டியது அவசியாமான ஒன்று. இங்கு குழந்தைகளுக்கு எந்த வயதில், என்ன மாதிரியான பொம்மைகளை கொடுக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

0-3 மாதங்கள்

கண்களால் மட்டுமே பார்க்கும் வயது. அடர் நிறங்கள்கொண்ட திரைச்சீலைகள், ஊஞ்சலில் கட்டிவிடும் பொம்மைகள், பெரியவர் கை வைத்து அழுத்திச் சத்தம் ஏற்படுத்தும் பொம்மைகளைத் தரலாம்.

3-6 மாதங்கள்

தலைகுப்புற விழுந்து, நகர்ந்து செல்வதால், மென்மையான பொம்மைகள், நகர்ந்து செல்லும் பெரிய பொம்மைகளைத் தரலாம். பல் மருத்துவர் ஆலோசனையுடன், பற்களின் வளர்ச்சிக்கு உதவும் ‘டூத் டாய்ஸ்’ வாங்கித் தரலாம்.

6-9 மாதங்கள்

உட்கார்ந்து, நிற்கும் குழந்தைகளுக்கு, நடைவண்டி, பெரிய பந்து ஆகியவற்றைத் தரலாம். நடைவண்டி தரும் போது, குழந்தை பெற்றோர் கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம்.

9-12 மாதங்கள்

நடப்பது, ஒடுவது எனச் சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகளுக்கு, கியூப்ஸ் விளையாட்டுப் பொருட்கள், பெரிய படங்கள் பதிந்த கதைப் புத்தங்கள், எடையில்லாத, அடுக்கிவைக்கும் பொம்மைகளைத் தரலாம்.

12- 18 மாதங்கள்

வண்ணம் தீட்டும் புத்தகம், படங்கள் இருக்கும் புத்தகங்களைக் கொடுக்கலாம். கலர் பென்சிலைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தக் கற்றுத்தருவது நல்லது.

Leave a Reply

%d bloggers like this: