kulanthaikal-mattrum-periyavarkaluku-erpadum-ulkayathai-epati-therinthu-kolvathu

குழந்தைகள் பொதுவாக ஓடி ஆடி விளையாட கூடியவர்கள், அவர்கள் கீழே விழுந்தால் அடி படுவது சகஜமான ஒன்று. அப்படி அடிபடுவது சில நேரத்தில் காயத்தை ஏற்படுத்தும். காயமோ, புண்ணோ தெரிந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வோம். ஆனால், உடலின் உள்பகுதியில் ஏற்படும் காயங்கள் மற்றும் தொற்றுகள் பற்றிப் பெரும்பாலும் நமக்குத் தெரிவதில்லை. இதில் பெரியவர்களை விட குழந்தைகளே அதிகம் பாதிக்க படுகின்றன. அவர்கள் கீழே விழுந்து எழுந்த உடன் பெற்றோர் அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என மட்டும் பார்ப்பார்கள். ஆனால் அவர்கள் உடலின் உள்ளே ஏற்பட்டிருக்கும் காயங்கள் அவர்களுக்கு தெரிவதில்லை.

உள்காயங்கள் உடல் ஆரோக்கியம் பாதிப்படைய முக்கிய பங்கு வகிக்கின்றன. விபத்து போன்ற பெரிய காரணங்கள் மட்டுமின்றி இடித்துக்கொள்ளுதல், கீழே விழுதல் போன்றவையும் உள்காயத்தை ஏற்படுத்தும். வியர்வை அதிகமாக வெளிப்படுகிற தலை, அக்குள், கால் விரல்கள், கணுக்கால் இணைப்பு போன்ற இடங்களில் சூட்டினால் கட்டி வரும். இந்த கட்டியும் ஒருவகையான உள்காயம்தான். கிருமி தொற்று காரணமாக ஏற்படுகிற இது சருமத்தின் மேற்பகுதியில் எரிச்சல், வீக்கம் மற்றும் நமைச்சலை உண்டாக்கும்.

இந்த சுடுகட்டிகளை அலட்சியப்படுத்தக் கூடாது. தானே மஞ்சள் தடவியோ அல்லது வீட்டு மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த முயற்சி செய்வது ஆபத்தானது. இதற்கு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே சரியானது. சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தவறினால் செப்டிசீமியா என்ற பிரச்னை உண்டாகி உடல் முழுவதும் பரவிவிடலாம். இதனால் உயிரிழப்பும் ஏற்படும் அபாயம் உண்டு.

உணர்வுத்திறன் குறைந்தவர்கள் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உள்ளுக்குள் வலிப்பது போன்ற உணர்வு ஏற்படுவதன் மூலம் உள்காயத்தைப் பொதுவாக உணர முடியும். நீரிழிவாளர்களுக்கு இந்த உணரும் திறன் குறைவாக இருக்கும். இதனால் சாதாரணமாக கண்ணுக்குத் தெரியும் காயத்தின் வலி உணர்வு கூட அவர்களுக்கு இருக்காது.

குழந்தைகளுக்கு அவர்கள் உடலில் ஏற்படுபவைகளை பற்றி அறியாமல் இருப்பார்கள். சிறிய குழந்தைகளுக்கு சொல்ல தெரியாது. பெரும்பாலும் குழந்தைகள் கீழே விழும் போது அருகில் யாரும் இல்லை என்றால் அழ மாட்டார்கள். இதனால் பெற்றோருக்கும் இது தெரியாமல் போய்விடும். இதனாலேயே இவை குழந்தைகளை பெரிதும் பாதிக்கின்றன.

ஹீமோபிலியா என்ற ரத்தம் உறையாமை பிரச்னை கொண்ட நோயாளிகளுக்கும் மற்றும் வயதானவர்களுக்கும் இடித்துக் கொள்வது, புண்கள் ஏற்படுவது, வீங்குவது எல்லாம் உடனடியாகத் தெரியாது. தவிர, ஒருவருக்கு உள்காயம் ஏற்படுவதற்குத் தொற்றும் முக்கியமான காரணமாக இருக்கிறது. அதனால், உடலை சுகாதாரமாக வைத்துக் கொள்ளாதவர்களுக்கும் உள்காயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

Leave a Reply

%d bloggers like this: