கணவன் மனைவி உறவு என்பது அன்பு, காதல், காமம் என அனைத்தும் ஒருங்கே அமைய பெற்றது. இவை திருமணமான புதிதில் அதிகமாகவும், காலப்போக்கில் சில மாற்றங்களையும் ஏற்படுத்தும். இது மிகவும் அடிக்கடி எல்லா வீடுகளிலும் நடக்கும் ஒன்றுதான். குழந்தைகள் பிறந்த பிறகு, அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதோடு, அதை நோக்கி வேலை செய்ய வேண்டியிருக்கும். இதில் குழந்தைகளுக்காக நம் துணையை பின்னுக்கு தள்ளி இருப்போம் என்பதை உணர்வதில்லை.
அவர்களிடம் அன்பு குறைந்து போயிருந்தாலும், குழந்தைகளுடன் ஒப்பிடும்போது அவர்கள் முன்னுரிமை குறைந்தவர்களாகிறார்கள். வேலை சுமை அதிகமாக இருக்கும் நேரங்களில், அவர்கள் உங்களுக்காக நேரம் ஒதுக்கும் போது அவரது முயற்சியை உற்சாகபடுத்தி, அவர் உணர்வுகளை நீங்கள் மதிப்பதை வெளிப்படுத்துங்கள். உங்கள் துணையை சிறப்பானவராக உணர செய்ய 6 வழிகளை இங்கு பார்க்கலாம்.
1 பாராட்டு
பாராட்டுக்கள் பிடிக்காதவர் என்று எவரும் இருக்க மாட்டார்கள். பாராட்டு என்பது ஒருவரின் செயலை ஊக்கப்படுவதற்காகவும் செய்வது. நீங்கள் உங்கள் துணையை பாராட்டுங்கள். உதாரணமாக, அவர்கள் ஒரு புதிய ஆடை அணிந்திருந்தால், அது அவர்களுக்கு அழகாக இருப்பதாக பாராட்டுங்கள். மனைவி சமைத்த உணவை பாராட்டினால், தொடர்ந்து நல்ல உணவுகளை பெறலாம்.
2 நன்றி கூறுதல்
அவர்கள் உங்களுக்காக ஏதும் முயற்சி எடுத்து செய்தால் அதற்கு நன்றி கூறுங்கள். உதாரணமாக, மனைவிக்கு உடல் நிலை சரி இல்லாத நேரத்தில் கணவர் உணவு தயாரித்து கொடுத்தால் நன்றி கூறுங்கள். கணவரின் பிறந்த நாள் பரிசாக மனைவி ஏதும் வாங்கி கொடுத்தால் நன்றி கூறுதல் போன்றவை.
3 ஊக்குவித்தல்
இது மிகவும் எளிது. உங்களால் முடியும் என்னும் ஒற்றை வார்த்தை உங்கள் துணையை உலகத்தையும் வெல்ல செய்யும். அவர்களின் இலக்கு சரியான பாதையில் இருந்தால் அவர்களை ஊக்குவியுங்கள். உங்கள் துணை தங்கள் கனவுகளைப் பற்றிப் பயப்படவோ அல்லது அதிர்ச்சி அடையவோ செய்தல், அவர்களுக்கு அதை பற்றிய பயத்தை போக்கி, உற்சாகமான மன நிலைக்கு வர ஊக்குவியுங்கள்.
4 அவர்கள் சொல்வதை கேளுங்கள்
சில நேரங்களில் அவர்கள் மன அழுத்தத்துடன் இருக்கும் போது உங்களிடம் மன விட்டு பேச விரும்புவார்கள். அந்த சமயங்களில் நீங்கள் அதை நிராகரிக்காமல் பொறுமையாகக் கேளுங்கள். நீங்கள் அவர்களை ஆறுதல் செய்ய முயற்சியுங்கள் அல்லது அவர்களிடம் சொல்வது சரியாக இருக்கும் என்று சொல்லுங்கள். மேலும் எதையாவது பேசி அவர்களை கஷ்டப்படுத்தாதீர்கள்.
5 தங்களைக் கவனித்துக் கொள்வதற்கு அவர்களை ஊக்கப்படுத்துங்கள்
குழந்தைகளை கவனித்தல் அல்லது மற்ற வேலைகளில் உங்கள் துணை மூழ்கி இருப்பார்கள். இதனால் தங்களின் உடல் நலனில் அக்கறை கட்டுவதை தவிர்ப்பார்கள். இது அவர்களின் உடல் எடை அதிகரித்தல் மற்றும் மன உளைச்சல் போன்றவற்றை ஏற்படுத்த வழிவகுக்கும். நீங்கள் அவர்களை அவர்களே கவனித்து கொள்வது அவசியம் என்று அவர்களிடம் சொல்ல வேண்டும், மேலும் மற்றவர்களை கவனித்துக் கொள்வதை போல் தங்களை அவர்களே கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும் எடுத்து கூறுங்கள்.
6 ஆச்சர்யப்படுத்துங்கள்
இதை நீங்கள் வெளிப்படையாக செய்யலாம். உங்கள் துணையை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம் அல்லது உன்னால் துணையை விட்டு விலகி இருப்பதாக உணர்ந்தாலோ, நீங்கள் அவர்களை ஆச்சரியப்படுத்த – ஒரு பரிசு, அல்லது ஒரு சைகை, அல்லது உங்கள் இருவருக்குமான விடுமுறை போன்றவற்றை செய்யலாம். இது நீங்கள் இன்னும் அவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் மற்றும் இன்னமும் மிகவும் அக்கறை எடுத்து கொள்கிறீர்கள் என்றுணர்த்தும்.