pirasavathin-mun-matrum-pin-meluku-mulam-mudiyagattruthal-waxing-sariya

பெண்கள் கை மற்றும் காலில் இருக்கும் முடிகளை அகற்ற வெக்ஸிங் செய்வது மற்றும் சவரம் செய்வது போன்றவற்றை செய்வார்கள். நீங்கள் ஒரு முறை வெக்ஸிங் செய்து தோல் மிருதுவாக இருப்பதை உணர்ந்து விட்டால், நீங்கள் சவரம் செய்யும் முறைகளை விட்டுவிடுவீர்கள். எனினும், கர்ப்பம் மற்றும் மகப்பேற்றின் போது வெக்ஸிங் தாய்மார்கள் மத்தியில் சில கேள்விகளை எழுப்புகிறது. ஒரு நிலைத் தன்மை இல்லாமல் நீங்கள் வெக்ஸிங் செய்தால், அது உங்கள் துணையுடனான நெருக்கத்தை குறைக்கும். இவை உங்கள் மனதில் கிளர்ச்சியூட்டும் சாதாரண விஷயமற்ற விஷயங்கள். 

கர்ப்ப காலத்தில்

பெரும்பாலான பெண்கள் தங்கள் தோலில் அழகான தோற்றத்தை பெற, முடிகளை அகற்றுவதையே விரும்புகிறார்கள். கர்ப்பகாலத்தில் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால், உங்கள் சருமம் எப்போதையும் விட இப்போது மிகவும் மிருதுவாக இருக்கும். உங்கள் தோலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு, தோல் நீண்டிருப்பதன் அடையாளமாக வரித்தழும்புகள் தோன்றி இருக்கும். ஏற்கனவே இருக்கும் வரித்தழும்புகளில் மீண்டும் காயப்படாமல் இருக்க, நீங்கள் எப்போதும் செய்வதை விட மிகவும் கவனமாக செய்ய வேண்டி இருக்கும்.

உங்கள் தோல் முடிகளுடன் கரடு முரடாக இருப்பதால் அசௌகர்யமாக உணர்ந்தால், நீங்கள் வெக்ஸிங் செய்யலாம். எனினும், நீங்கள் இதை செய்யும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுத்துக் கொள்வது சிறந்தது. நீங்கள் செல்லும் அழகு நிலையங்கள் பற்றி தெளிவாக விசாரித்து கொள்ளுங்கள். சில அழகு நிலையங்களில் பிரத்யேகமாக கர்ப்ப காலத்தில் சிறப்பான முறையில் வெக்ஸிங் செய்வார்கள். இது போன்ற அழகு நிலையங்களை விசாரித்து, அங்கு சென்று வெக்ஸிங் செய்து கொள்வது நல்லது. கர்ப்பமாக இல்லாத ஒரு வாடிக்கையாளரின் தோலை விட, உங்கள் தோல் மிகவும் மென்மையாக இருக்கும் எனும் உண்மையை அவர்கள் அறிந்திருப்பதால் கவனமாக கவனித்துக் கொள்கிறார்கள்.

வீட்டில் இதைச் செய்வது எந்த சூழ்நிலையிலும் தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக நீங்கள் உள்ளாடை அணிய கூடிய பகுதி, உங்களால் பார்க்க முடியாத பகுதிகளில் இவற்றை தவிர்க்கவும். நீங்கள் இப்படி செய்வதால், உங்கள் தனிப்பட்ட பாகங்களை அது கொடூரமாக பாதிக்கலாம். உங்கள் மென்மையான பகுதிகளில், இது போன்ற ஆபத்துகளை தவிர்க்கவும். நீங்கள் இதற்கு சரியான அழகு நிலையத்தை தேர்வு செய்வது, ஆபத்திலிருந்து உங்களை காத்திடும்.

பிரசவத்தின் பின்

பிரசவத்திற்குப் பிறகு உடனடியாக, நீங்கள் பிரசவத்தின் முன்னிருந்த பழைய உடலை அடைய வேண்டும் என நினைத்தால் அது நடக்காத ஒன்று. பிரபலங்கள் இந்த மாற்றங்களை எந்த முயற்சியும் இல்லாமல் செய்வது எளிதானது என்றாலும், அது நமக்கு கடினமான பணியாகும். பிரசவத்தின் பின் வெக்ஸிங் செய்வதை தவிர்க்க பெரும்பாலான மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுகிறது. உங்கள் உடல் வலி மற்றும் அதிர்ச்சியின் காரணமாக உடல் கடுமையான நிலைக்கு உள்ளாகி இருக்கும். உங்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் சோர்வு மற்றும் அசௌகரியம் நீங்கும் வரை காத்திருங்கள். குறிப்பாக உங்கள் உள்ளாடை பகுதிக்கு வரும் போது, இந்த பகுதியில் உள்ள தோலும் மென்மையாக இருப்பதால், மிகவும் சுலபமாக இழுப்பதற்கு வந்து கூடுதல் வலியை ஏற்படுத்தும்.

இது வலியை அதிகப்படுத்துவதால், குணப்படுத்துவது சிறிது நேரம் ஆகலாம். பிரசவம் முடிந்தபிறகு இந்த பகுதி மிகவும் உணர்ச்சியுள்ளதாக இருப்பதால், நீங்கள் குறைந்தது 8-9 மாதங்கள் காத்திருக்க வேண்டும். இந்த காலகட்டத்திற்கு பிறகு நீங்கள் இதை உங்கள் விருப்பம் போல் வெக்ஸிங் செய்து கொள்ளலாம்.

Leave a Reply

%d bloggers like this: