pirasavathirku-pin-ungal-maamiyaarai-samalikka-7-valikal

உங்கள் குழந்தையை பற்றி உங்கள் மாமியார் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறீர்களா? அவர்கள் செய்த தவறுகளை உங்களை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். புதிய அம்மாவாக இருக்கும் உங்களின் மனநிலையை நாங்கள் புரிந்துக்கொண்டுள்ளோம். உங்கள் மாமியார் உங்களின் திறமை, பொறுப்புணர்ச்சி, பெற்றோராய் இருப்பதற்கான தகுதி போன்றவற்றை சோதிப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் குழந்தை பிறந்த பின் இது நிகழும்போது நீங்கள் இன்னும் கவனமாக இருக்கவேண்டும். இந்த 7 காரணங்கள்தான் பிரசவத்திற்கு பின் உங்கள் மாமியார்-மருமகள் உறவை அதிகளவில் பாதிக்கும்.     

1 உணவு விஷயத்தில் தலையிடுதல்

நீங்கள் கேட்காமலே அவர்கள் உங்கள் உணவு பழக்கவழக்கத்தை பற்றி அதிக அறிவுரை சொல்கிறார்களா? உங்களுக்கு பிடிக்காத உணவுகளை, ஆரோக்கியத்தை காரணமாய் காட்டி உண்ண சொல்லி கட்டாயப்படுத்துகிறார்களா? இது அவர்களின் அனுபத்திலிருந்து அவர்கள் சொல்வது என நாங்கள் அறிவோம், ஆனால் அவை எல்லைமீறும் போது உங்கள் பொறுமையை சோதிக்கிறதா? இந்த சூழ்நிலையில், நீங்கள் கோபமடைந்தாலும், அவர்கள் உங்கள் நன்மைக்குத்தான் சொல்கிறார்கள் என்பதுதான் உண்மை. எனவே இந்த அன்புத்தொல்லை எல்லைமீறி போகும்போது, அவர்களிடம் உங்கள் எண்ணங்களை பொறுமையாக வெளிப்படுத்துங்கள்.

2 தற்பெருமை பேசுதல்

நீங்கள் உங்கள் குழந்தையை கவனிக்க தடுமாறும்போது, அவர்கள் உங்கள் கணவரை எப்படி வளர்த்தார்கள் என்று சொல்ல தொடங்கிவிடுவார்கள். அவர் உங்கள் கணவரை வளர்த்தது போலவே உங்களையும் நடந்து கொள்ள தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பது உங்களை எரிச்சலூட்டும். இதை சமாளிக்க அமைதியான சூழ்நிலையில் அவர்களிடம் பேசுங்கள். அதாவது நீங்கள் இதற்கு புதியவர் என்றும், உங்களாலும் குழந்தையை நன்கு பராமரிக்க முடியுமெனவும், அவர்களுக்கு நம்பிக்கை கொடுங்கள்.

3 உங்கள் பெற்றோர்களை பார்க்க தடை போடுதல்

உங்கள் குழந்தை எந்நேரமும் அவர்களுடனே இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள் என்றால், அவர்களுக்கு புரிய வையுங்கள். இப்படி நடந்து கொள்ளவது உங்களுக்கு பிடிக்கவில்லையென்று. குறிப்பாக உங்கள் பெற்றோர்களும் உங்கள் குழந்தையுடன் நேரம் செலவிட ஆசைப்படுவார்கள். அதற்கு அவர்கள் தடையாய் இருக்கும்போது பிரச்சினை எழக்கூடும். எனவே இதை பற்றி ஆரம்பக்காலத்திலேயே அவர்களுடன் ஆலோசிப்பது பிரச்சினையிலிருந்து உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும்.

4 வேலைக்கு செல்ல அனுமதி மறுத்தல்

ஒருவேளை அவர் படிப்பறிவு குறைவாக இருப்பவராய் இருந்தால் நீங்கள் வேலைக்கு செல்வதற்கு தடை விதித்து உங்கள் குழந்தையுடனேயே எந்நேரமும் இருக்க சொல்வார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இன்றைய தலைமுறையின் வாழ்க்கைமுறை பற்றி புரிய வைப்பது அவசியமாகும். குழந்தையை கவனித்துக்கொண்டே உங்கள் பணியில் கவனம் செலுத்துவது ஒன்றும் தவறாகாது. அதே வேளை நீங்கள் பலப்பணிகளில் சிறப்பாய் செயல்பட இந்த தருணம்தான் சரியாய் இருக்கும். இது உங்களால் முடியாத என்ன?

5 உங்கள் கணவருடன் உங்களை பற்றி ஆலோசித்தல்

ஒருவேளை உங்கள் கணவர் அம்மாபிள்ளயாக இருந்தால், உங்கள் கணவரின் காதுக்கு எட்டும் விஷயங்களை பற்றி கவனமாய் இருக்கவேண்டும். உங்கள் கணவரை நாங்கள் குறை சொல்லவில்லை, அவர்களுக்கு தெரியும் அம்மாவையும், மனைவியையும் எப்படி சமாளிக்க வேண்டுமென்று இருப்பினும் உங்கள் தற்போதைய சூழ்நிலை அவர்களின் காதுகளுக்கு உங்களை பற்றிய எதிற்மறையான விஷயங்கள் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் தேவையில்லாத மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

6 குழந்தைக்கு நீங்கள் தரும் உணவுகளில் குற்றம் கண்டுபிடித்தல்

நீங்கள் புத்தகத்தை படித்து உங்கள் குழந்தைக்காக சமைக்கும் உணவுகளில் குற்றம் சொல்கிறார்களா? அதை தவிர்த்து அவர்கள் காலத்தில் உங்கள் கணவருக்கு ஊட்டிய உணவுகளையே உங்களை செய்ய சொல்கிறார்களா? அவர்களிடம் சொல்லுங்கள் நீங்களும் அவர்களை போல சிறந்த தாயாக சிறந்து விளங்க விரும்புவதாகவும் எனவே உங்களின் புதிய உணவுகளை குழந்தைக்கு கொடுக்க விரும்புவது பற்றியும் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றியும் எடுத்துக்கூறி புரிய வையுங்கள்.

7 குழந்தை வளர்ப்பில் தலையிடுதல் மற்றும் தனியாக தூக்கி செல்லுதல்

குழந்தை மீது அவர்களுக்கு உள்ள அதீத அக்கறையை நாங்கள் அறிவோம், ஆனால் உங்களின் தாய்மையுணர்ச்சியை அவர்கள் சந்தேகிக்கக்கூடாது. ஒருவேளை உங்கள் மாமியார் அப்படி நடந்துகொண்டால் அவர்களும் ஒருகாலத்தில் உங்களை போலவே இருந்ததை நியாபகப்படுத்துங்கள். அவர்களுக்கும் புரியட்டும் நீங்கள் உங்கள் குழந்தைக்கு எப்படிப்பட்ட தாயாக இருக்க வேண்டும் என விரும்புவதும் அதற்கான உங்களின் தேவை என்ன என்பதையும்.

Leave a Reply

%d bloggers like this: