pen-kulanthaikalukkana-sirantha-10-peyarkal

தம்பதியராய் இருந்த உங்கள் வாழ்க்கையின் தடத்தை மாற்றியமைத்த உங்கள் செல்ல மகளுக்கு பெயர் வைப்பது என்று முடிவு செய்து விட்டீர்களா? குழப்பமாக உள்ளதா எந்த பெயரை தேர்வு செய்வதென? உங்களுக்கு உதவவே, உங்கள் குழப்பத்தைப் போக்கவே இந்த பதிப்பு..! பதிப்பை படித்து, குழந்தைக்கு பெயரை தேர்வு செய்யுங்கள்..!

1. ஆர்நா..!

ஆர்நா என்பது தமிழ் பெயர்; இது கடவுள் லட்சுமியைக் குறிக்கும். இதற்கு தண்ணீர், அலை போன்ற பொருட்களும் உண்டு. கடலின் அலைகளைப் போல், உங்கள் குழந்தைச் செல்வம் விடாமுயற்சியுடன், வாழ்வில் முன்னேறிக் கொண்டே இருக்கும்.

2. யுதிகா..!

யுதிகா என்பதற்கு பல வேலைகளை ஒரே நேரத்தில் திறனுடன் செய்து முடிப்பவர் என்று பொருள். இதற்கு மலர் என்ற பொருளும் உண்டு. உங்கள் அன்பு மலருக்கு இந்த மலரின் பெயரை வைத்து மகிழுங்கள்..

3. வாமிகா..!

வாமிகா என்பது துர்க்கை மாதாவின் பெயர். சிவனுக்கு இடதுபுறம் இருக்கும் பார்வதி அன்னையையும் வாமிகா என்ற பெயர் குறிக்கும். உங்கள் குழந்தை தெய்வகடாட்சத்துடன் விளங்க இந்த பெயர் ஏற்றது.

4. வியோநா..!

வியோநா என்பது பறந்து விரிந்த வானத்தைக் குறிக்கும். உங்கள் குழந்தை வானம் போன்ற பரந்த எண்ணத்துடன் வாழ்ந்து வளர, இப்பெயர் ஏற்றது.

5. உதிதா..!

உதிதா என்ற பெயர், ஒருவரின் எழுச்சியைக் குறிக்கும். உங்கள் குழந்தைக்கு வாழ்வில் எத்தனை சங்கடங்கள் மற்றும் தோல்விகள் ஏற்பட்டாலும், தளராது, சோர்ந்து போகாது, எதிர்நிச்சலிட்டு எழும் சக்தியை இப்பெயரின் அலைகள் வழங்கும்.

6. துஷிதா..!

துஷிதா என்பது அமைதி, மகிழ்ச்சி, மனதிருப்தி போன்ற அர்த்தங்களைக் கொண்டது. உங்கள் குழந்தை மனதிருப்தியான, மகிழ்ச்சியான, அமைதியான வாழ்க்கை மேற்கொள்ள இப்பெயரை குழந்தைக்கு சூட்டுங்கள்..

7. ருதிகா..!

அன்னை பார்வதியினைக் குறிக்கும். குறிக்கோளுடன் வாழ்வில் போராடி தான் நினைத்ததை அடைபவர் என்ற பொருளும் இப்பெயருக்கு உண்டு. குழந்தைகளுக்கு வைக்க ஏற்ற பெயர்.

8. நாவ்யா..!

இளமை, பாராட்டுக்கு உரியவர், எல்லா புகழுக்கும் உரியவர் என்ற பொருட்கள் இப்பெயருக்கு உண்டு. குழந்தை பேரோடும் புகழோடும், இளமையாக வாழ இப்பெயரை சூட்டுங்கள்..

9. மைத்ரீ..!

நல்ல செய்கை, நட்பு, அன்பு போன்றவற்றை மைத்ரீ என்ற பெயர் குறிக்கும். உங்கள் குழந்தை நன்னடத்தையுடன் அன்பாக விளங்க இப்பெயர் ஏற்றது.

10. க்ரிஷிகா..!

க்ரிஷிகா என்பது வளர்ச்சி, வெற்றி, செல்வம் இது போன்ற அர்த்தங்களைக் கொண்டது. இப்பெயர் கொண்ட குழந்தைகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமாக வாழ்வர்..!

Leave a Reply

%d bloggers like this: