kulanthaikal-virumpi-unnum-3-kichchatikal

குழந்தைகளுக்கு, வளரும் பருவத்தில் ஆரோக்கியமான உணவுகளை கொடுத்து, போஷாக்குடன் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும். சிறு வயது முதலே குழந்தைகளுக்கு காய்கறிகள், பழங்கள், முழுதானிய வகைகள் என இவற்றைக் கொடுத்து, சிறந்த நோய் எதிர்ப்புத் திறன் கொண்டவர்களாக குழந்தைகளை வளர்த்தல் வேண்டும். 

ஆகையால், குழந்தைகளுக்கு ஆரோக்கியம் அளிக்கும், 3 கிச்சடி வகைகளை பற்றி இப்பதிப்பில் படித்து அறியலாம், வாருங்கள் பெற்றோர்களே!

1. அரிசி மற்றும் பருப்பு கிச்சடி

தேவையான பொருட்கள்

⅔ கப் அரிசி, ⅓ கப் பாசிப்பயறு, வெள்ளைப்பூண்டு-2 (வேண்டுமெனில்), பெருங்காயம் (வேண்டுமெனில்), நெய்

செய்முறை

1. அரிசி மற்றும் பாசிப்பயறினை கழுவி, ½ மணி நேரம் ஊறவைக்கவும்; பின் தண்ணீரை வடிக்கவும்.

2. குக்கரில், ஊறவைத்த அரிசி பருப்பையும், வெள்ளைப்பூண்டு, பெருங்காயத்தூள் இவற்றை சேர்த்து, 3 கப் தண்ணீர் ஊற்றி மூடி, அடுப்பில் வைக்கவும்.

3. 2 அல்லது 3 விசில் வரை வேகவிட்டு, பின் நெய் சேர்த்து குழந்தைகளுக்கு பரிமாறவும்.

2. காய்கறிகள் கிச்சடி

தேவையான பொருட்கள்

⅔ கப் அரிசி, ⅓ கப் பாசிப்பயறு, வெங்காயம்-1, தக்காளி-1, வெள்ளைப்பூண்டு-2 (வேண்டுமெனில்), ½ தேக்கரண்டி சீரகம் அல்லது சீரகத்தூள், நெய், நறுக்கிய காய்கறிகள்: உருளை, கேரட், பீன்ஸ், பட்டாணி (ஒன்றாக இடவும்), சிறிதளவு மஞ்சள் தூள், நறுக்கிய காய்கறிகள்: பூசணி, நீர்ப்பூசணி, பீட்ருட், சுரைக்காய் (தனித்தனியாக இடவும்)

செய்முறை

1. அரிசி மற்றும் பாசிப்பயறினை கழுவி, ½ மணி நேரம் ஊறவைக்கவும்; பின் தண்ணீரை வடிக்கவும்.

2. தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

3. குக்கரில், நெய் மற்றும் சீரகத்தை சேர்த்து, சீரகத்தை வெடிக்க விடவும்.

4. பின், நறுக்கிய தக்காளி வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

5. ஒன்றாய் இட வேண்டிய, நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும், இதனுடன் மஞ்சள் துளை சேரத்து, வதக்கவும்.

6. ஊறவைத்த அரிசி பருப்பையும், இவற்றுடன் சேர்த்து, 3 கப் தண்ணீர் ஊற்றி வதக்கவும்.

7. 2 அல்லது 3 விசில் வரை வேகவிட்டு, பின் தனித்தனியாக சேர்க்க வேண்டிய நறுக்கிய காய்களை சேர்த்து மசித்து குழந்தைக்கு அளிக்கவும்.

3. கோதுமை பருப்பு கிச்சடி

தேவையான பொருட்கள்

¾ கப் உடைந்த கோதுமை, ¼ கப் பாசிப்பயறு, இஞ்சி மற்றும் வெள்ளைப்பூண்டு விழுது, 1 தேக்கரண்டி சீரகம் அல்லது சீரகத்தூள், நெய், நறுக்கிய காய்கறிகள்: உருளை, கேரட், பீன்ஸ், பட்டாணி (ஒன்றாக இடவும்), சிறிதளவு பெருங்காயத் தூள், வெங்காயம்-1

செய்முறை

1. அரிசி மற்றும் பாசிப்பயறினை கழுவி, 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்; பின் தண்ணீரை வடிக்கவும்.

2. குக்கரில், நெய் மற்றும் சீரகம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து, வெடிக்க விடவும்.

3. பின், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பின் இஞ்சி மற்றும் வெள்ளைப்பூண்டு விழுதை சேர்க்கவும்.

4. ஒன்றாய் இட வேண்டிய, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து, வதக்கவும்.

5. ஊறவைத்த அரிசி பருப்பையும், இவற்றுடன் சேர்த்து, 4 கப் தண்ணீர் ஊற்றி வதக்கவும்.

6. 4 விசில் வரை வேகவிட்டு, பின் குழந்தைக்கு அளிக்கவும்.

Leave a Reply

%d bloggers like this: