malaikalathil-thunikalai-thunaatram-illamal-suthamaga-vaikka-6-valikal

மழையில் நனைவது என்பது அனைவர்க்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் குழந்தைகளுக்கு மழையில் நனைய அனுமதி கிடைத்து விட்டால் அளவில்லாத ஆனந்தமே. அனுமதி கொடுக்கவில்லை என்றாலும் அவர்களை தடுக்க முடியாது. மழையில் ஓடுவது, ஆடுவது, குதிப்பது மற்றும் சேற்றில் விளையாடுவது என அனைத்தையும் செய்வார்கள். மழையில் ஆடைகள் நனைகிறது, நாம் சேற்றில் விளையாடி கொண்டிருக்கிறோம் போன்ற எந்த கவலைகளும் இன்றி நனைவார்கள். அவர்களை சொல்கிறோம், ஆனால் நாம் குழந்தைகளாக இருந்த போது, நாமும் இதை தானே செய்தோம். பின் வீட்டிற்கு வந்ததும் அம்மா நம்மை திட்டி ஈரத்தை உலர செய்திருப்பார்கள். துணியாளை காய செய்திருப்பார்கள். இப்போது நாமும் தாயாக மாறி அதையே தான் செய்து கொண்டிருக்கிறோம். கோடை காலத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால், ஆடைகள் மற்றும் துணிகள் எளிதில் உலர்ந்து விடுகின்றன. ஆனால் மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகம் நிறைந்திருப்பதால், துணிகள் சரியாக உலராமல் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும். அதை தடுத்து துணிகளை சுத்தமாகவும், துர்நாற்றம் இல்லாமலும் வைக்க 6 வழிகள்.  

1 கற்பூரம் அல்லது நாப்தலின் பந்துகள்

நீங்கள் உங்கள் துணிகளை வைக்கும் அலமாரியில், சில கற்பூர கட்டிகள் அல்லது நாப்தலின் பந்துகளை போட்டு வையுங்கள். இது கிருமி நீக்கியாக்கவும், ஈரப்பத நீக்கியாகவும் செயல்படுகிறது. அனைத்து வகையான ஈரப்பதத்தையும் நீக்கி, துணிகளை உலர வைத்துக் கொண்டிருக்கும் போது கற்பூரம் பந்துகள் எந்த வகையான கிருமிகளிடமிருந்தும் அல்லது பூச்சிகளிடமிருந்து துணிகளை காக்கிறது.

2 வினிகர் மற்றும் சமையல் சோடா

வினிகர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றை சலவை பொடியுடன் சேர்த்து பயன்படுத்தலாம், இது உங்கள் ஆடைகள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் ஆடைகளில் உள்ள துநாற்றத்தை போக்கி, இனிமையான வாசனையுடன் வைக்க உதவுகிறது. இப்போது உங்கள் கணவர் வியர்வையின் ஈரப்பதத்தில் நனைத்து வந்தாலும், உங்கள் குழந்தை மழையில் குளித்து வந்தாலும், நீங்கள் கவலையடைய தேவை இல்லை.

3 சலவை இயந்திரம் பயன்படுத்தவும்

இப்போது நீங்கள் எதையும் எளிமையாக செய்யும் வழிகள் இருக்கும் போது, நீங்கள் இதற்கு கவலையடைய அவசியமே இல்லாமல் போய் விடும். உங்கள் துணிகளை கவனித்துக்கொள்வதற்கான பயனுள்ள தொடுதிரை சலவை இயந்திரம், அதுவாகவே துணிகளை துவைத்தல், அலசுதல் மற்றும் உலர்த்துதல் போன்றவற்றை செய்கிறது. அதற்கு தேவையான தண்ணீரை அதுவே எடுத்து கொள்ளும். இவை அனைத்தையும் நீங்கள் பொத்தான்களின் மூலமாக கட்டளை கொடுத்து விட்டால் அனைத்தையும் செய்து, துணிகளை உங்களுக்கு கொடுத்தியது விடும்.

4 நிறத்தை தக்க வைக்க

தொடர்ந்து துவைப்பதால் உங்கள் துணிகள் அதன் வண்ணம் மற்றும் பளபளப்பை இழக்கிறதா? அதற்கென தற்சமயம் கடைகளில் பல தயாரிப்புகள் கிடைக்கின்றன. அவற்றை நீங்கள் துணிகளை அலசும் போதோ அல்லது சலவை இயந்திரத்தை உபயோகிக்கும் போதோ பயன்படுத்தினால், உங்கள் துணிகள் அடுத்து அடுத்து துவைக்கும் போது, அதன் வண்ணம் மற்றும் பளபளப்பை இழக்காமல் இருக்கும்.

5 துணிகளுக்கான கண்டிஷனர்

சலவை பொடிகளில் இருக்கும் காரத்தன்மை, உங்கள் துணிகளை பாதிப்படைய செய்யலாம். அதை மங்க செய்து பழையது போல் தோற்றத்தை கூட மாற்றி விடும். இவற்றை உபோயோகிக்கும் போது, உடைகளில் ஏற்படும் மாற்றங்களை தவிர்த்து அதன் வண்ணம் மற்றும் பளபளப்பை தக்கவைப்பதுடன், கிருமிகளை முற்றிலும் அழித்து வாசனையுடன் வைக்கிறது.

6 துணிகளை காய வைக்கும் இயந்திரம்

இவை உங்கள் துணைகளில் உள்ள ஈரத்தை உலர்த்துவதுடன், அதிலிருக்கும் கிருமிகளை நீக்கி, உங்கள் உடைகளை துர்நாற்றமற்றதாக கொடுக்கிறது. இவற்றில் பல வகையான உலர்த்தும் முறைகள் இருக்கின்றன. நீங்கள் செலவழிக்கும் பணத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இப்போது உங்கள் மழைக்காலம் விரும்பத்தக்கதாக இருக்கும்.

உங்கள் குழந்தைகளுடன் இந்த மழை காலத்தின் மறக்க முடியாத நினைவுகளை சேகரித்து கொள்ளுங்கள். எந்தவித கவலையும், வருத்தமும் இல்லாமல் மழை காலத்தை அனுபவியுங்கள். 

Leave a Reply

%d bloggers like this: