mamiyarai-samalikka-mutiyatha-6-vishayangal

இயற்கையில் மாமியார்கள் என்பவர்கள் நல்லவர்களே! அவர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் சொந்தங்களை பேணிக்காத்து வந்த அன்னைகள் ஆவர்; ஆனால், அவர்களின் நற்குணமும், அன்பும் மருமகள் என்ற உறவு வருகையில் சற்று மாற்றம் காண்கிறது. சில நேரங்களில், மருமகள்களால், மாமியாரை முற்றிலும் சமாளிக்க முடிவதில்லை. அத்தகைய மருமகள்களால், மாமியாரை சமாளிக்க முடியாத 6 சந்தர்ப்பங்களை பற்றி இப்பதிப்பில் காணலாம்..!   

1. மூக்கை நுழைத்தல்..

பொதுவாகவே, மாமியார்கள் மருமகள்களின் விஷயங்களில் மூக்கை நுழைக்கும் குணம் உள்ளவர்களாய் விளங்குகின்றனர். எந்த விஷயமாக இருந்தாலும், அதில் மருமகள் தலையீடு இருந்தால், அதில் மாமியாரின் மூக்கு நுழைத்தல் நடைபெற்றே தீரும். இது மாதிரியான சமயங்களில் மாமியார்களை சமாளிப்பது கடினமாக விளங்கும்.

2. வாக்குவாதம்..

நீங்களும், உங்கள் மாமியாரும் வாக்குவாதம் கொள்ள நேர்ந்தால், உங்கள் கணவரின் ஆதரவு முதலில் அவரின் தாய்க்கே இருக்கும். இந்த சூழ்நிலையில் தவறு மாமியின் பக்கம் இருந்தாலும், உங்களால் மாமியை ஒன்றும் செய்ய இயலாது.

3. குழந்தைகள்..

உங்கள் மாமியார் உங்கள் குழந்தைகளை தன்னோடு வைத்துக் கொள்ள விரும்பி, அந்த செயல் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், நீங்கள் அந்த சூழலில் கையகலாதவராய் நிற்பர்; உங்கள் கணவரும் அன்னை பேரக்குழந்தைகளுடன் இருப்பதை ஆதரிக்கும் போது, உங்களின் பேச்சு அங்கு எடுபடாமல் போகும்.

4. உங்களின் வருத்தம்..

எப்பொழுதேனும் நீங்கள் எதையாவது எண்ணி, வருத்தம் கொண்டிருந்தால், அப்பொழுது உங்களை மேலும் வருத்தமடையச் செய்வதில் மாமிகளுக்கு கொள்ளை விருப்பமாக இருக்கும். அந்த சூழலில் மாமிகளை எதிர்கொள்வது சற்று கடினமாகத்தான் இருக்கும்.

5. வேலைக்காரி..

மாமியார், உங்களை வீட்டு வேலைக்காரி போல் நடத்துகையில், அதை எப்படி தவிர்ப்பது, கணவரிடம் கூறலாமா, மாமிக்கு எப்படி புரிய வைப்பது என்றெல்லாம் எண்ணி, பெரும் குழப்பமடைவீர். அந்த சூழ்நிலையில், மாமியாரை எதிர்கொள்வது சற்று கடினம் தான்.

6. ஒப்பிடுதல்…

உங்கள் மாமியார் உங்கள் செய்கைகளை, அவர் செய்கைகளுடன் ஒப்பிடும் போதோ, உங்கள் குண நலன்களை அவருடன் அல்லது மாமி தன் மகளுடன் ஒப்பிடும் போதோ, ஒரு பெண்ணாய் நீங்கள் அடையும் மனவேதனைக்கு அளவேயில்லை. இந்த சூழ்நிலையிலும் பல மருமகள்கள் போராடி வாழ்கின்றனர்.

ஆகையால், மருமகள்களே! உங்களுக்கு இது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருந்தால், ஏற்பட்டால் உங்களின் உணர்வுகளை, அருமையை உங்கள் மாமிக்கு புரிய வைப்பது உங்கள் கடமையாகும். என்ன கஷ்டம் நேர்ந்தாலும், மனம் தளராமல் போராடுங்கள்..! வெற்றி உங்களுக்கே!

Leave a Reply

%d bloggers like this: