puthu-perrorkalukkana-6-vitumurai-thalangal

தம்பதியர் பெற்றோராய் ஆனவுடன், பலர் மிகவும் மனஅழுத்தத்திற்கு உள்ளாகி விடுகின்றனர்; குழந்தையை கவனிப்பது, வளர்ப்பது, படிக்க வைப்பது என ஏராளமான, வருங்காலத்தில் வரும் பிரச்சனைகளை இப்பொழுதே எண்ணி குழம்பத் தொடங்கி விடுகின்றனர். பெற்றோர்களே! அந்தந்த வயது வருகையில் உங்கள் குழந்தைகளுக்கு செய்ய வேண்டியவற்றை நீங்கள் திறம்பட செய்து முடிப்பீர்; அதனால், வருங்காலத்தை எண்ணி, மிரளாமல் நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள். 

காசை சம்பாதித்து சேமித்து மட்டுமே வைப்பதை விடுத்து, குடும்பத்துடன் விடுமுறை நாட்களில் சுற்றுலா சென்று, புது அனுபவங்களை பெற்று மகிழ்ந்து, வாழ்க்கையை வழிநடத்துங்கள். இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவும் வகையில், குழந்தை பிறந்தவுடன் குடும்பசகிதமாக சுற்றி மகிழ, சில விடுமுறை தலங்களை இப்பதிப்பில் அளித்துள்ளோம்..! 

1. ஊட்டி..!

ஊட்டி என்பது தமிழ்நாட்டின் கோடை வாசஸ்தலமாக விளங்குகிறது. குடும்பத்துடன் கண்டு மகிழ சிறந்த இடம். அங்கு நடத்தப்படும் மலர்க்கண்காட்சி, தேயிலை தயாரிக்கும் தொழிற்சாலைகள், அவலாஞ்சி பள்ளத்தாக்கு, கல்ஹட்டி நீர்விழ்ச்சி என பல விஷயங்கள் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கண்டு மகிழவும், புது விஷயங்களை தெரிந்து கொள்ளும் வகையிலும் உள்ளன. இந்த இடத்தில் பல தங்கும் விடுதிகள் குழந்தைகளுக்கான பல்வேறு ஏற்பாடுகளுடன் அமைந்துள்ளன; எனவே, நீங்கள் குடும்பத்தோடு சென்று கண்டு மகிழ ஏற்றதே!

2. தேக்கடி..

கேரளா மாநிலத்தின் தேக்கடி ஒரு சிறந்த சுற்றுலா தலம். அங்கு அமைந்திருக்கும் பெரியார் வனவிலங்கு சரணாலயம், பச்சைப் பசேல் என்ற சூழல் உங்கள் குழந்தைகளின் மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் உள்ளன. வனவிலங்கு சரணாலயத்தில், நீங்கள், குழந்தைகளுக்கு நேரடியாகவே அனைத்து விலங்குகளையும் காண்பித்து, அவர்களின் அறிவாற்றலை மேம்படுத்தலாம்; குழந்தைகள் புதுவித விலங்குகளைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி கொள்வர். இவ்விடம் ஒவ்வொருவரும் கண்டு மகிழ வேண்டிய இடம்..

3. அனந்தகிரி மலைகள்..

இந்த இடம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது; ஹைதராபாத்தில் இருந்து 2 மணி நேரம் பயணம் செய்தால், இவ்விடத்தை அடையலாம். இங்கு கண்ணைக் கவரும் பச்சை பசேல் என்ற செடி கொடிகளும், ஏரிகளும் நீர்விழ்ச்சிகளும் உள்ளன. இது அனைவரின் மனஅழுத்தத்தையும் போக்கி, ஆனந்தம் அளிக்கும் இடமாக விளங்குகிறது.

 4. டார்ஜிலிங்..!

இது மனதை கொள்ளை கொள்ளும் அழகன இடம். இங்கு இருக்கும் தேயிலைத் தோட்டங்களும், அருங்காட்சியகங்களும் குழந்தைகளின் அறிவுக்கு விருந்தாக அமையும். பஜிடோக்ராவிற்கு விமானத்தில் சென்று டார்ஜிலிங்கை அடைவதும், பின் அங்கிருந்து சிலிகுரி வரை காரில் செல்வதும், பின் ரயிலில் பயணிப்பதும் நல்ல அனுபவமாக இருக்கும்.

5. ஜெய்சால்மர்

இந்த இடத்தை சென்று காண செப்டம்பர் முதல் ஜனவரி மாதங்கள் ஏற்றவை. இந்த மாதங்களில் அங்கு வானிலை நன்றாக இருக்கும். குழந்தைகளை அங்கு ஒட்டக சவாரி செய்ய வைத்து மகிழலாம்.

6. ரான் ஆப் குட்ச்..!

இந்த இடம் மிக நல்ல சூழலுடன் இருக்கும். அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் சாதாரண வாழ்விலிருந்து, மாறுதல் பெற்று ஓய்வெடுக்க சிறந்த இடம்; கண்டிப்பாக அனைவரும் சென்று காண வேண்டிய இடம்..

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்கு பல புதிய இடங்களை காண்பித்து அவர்களின் அறிவை அகண்டமாக்குங்கள்; மாதத்திற்கு ஓரிரு நாட்களாவது வேறு புது இடங்களுக்கு சென்று மகிழுங்கள்..! பதிப்பு பிடித்திருந்தால், மற்றவர்க்கும் பயன்பட பகிர்விராக..!

Leave a Reply

%d bloggers like this: